ஜக்கி வாசுதேவ் போன்ற சாமியார்கள் இந்த சமூகத்திலிருந்து அழித்து ஒழிக்கப்பட வேண்டிய தீய சக்திகள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. இவர்கள் ஏன் தீய சக்திகள் தெரியுமா ? பாஸ் வாங்கி, அதை கழுத்தில் மாட்டிக் கொண்டால்தான் உள்ளே செல்ல முடியும். உள்ளே சென்றால் இருபது அடிக்கு ஒரு முறை பாஸை பார்த்து செக் பண்ணுவார்கள். உள்ளே சென்றால், கண்ணை மூடிக்கொண்டு மொட்டை அடித்துக் கொண்டு, ஆழ்ந்த தியானத்தில் பல இடங்களில் அமர்ந்திருப்பார்கள். பாதாள அறை போல இருக்கும் ஒரு அறைக்குள் லிங்கம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். அந்த லிங்கத்தை தியானலிங்கம் என்று கூறுகிறார்கள். அந்த தியானலிங்கத்தை சுற்றி பலர் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருப்பார்கள்.

அந்த தியானலிங்கத்தின் அருகில் சென்றாலே தியானம் செய்தது போல மன அமைதி கிடைக்கும் என்று கூறுகிறார் ஜக்கி வாசுதேவ். அதன் உள்ளே சென்று ஜக்கி சொன்னது போல 20 நிமிடம் அமர்ந்திருந்தும் எந்த மன அமைதியும் தோன்றவில்லை. அந்த லிங்கம் மெர்குரியால் செய்யப்பட்டது என்று சத்குருவே அறிவிக்கிறார்.

மெர்குரி என்பது ஒரு விஷப்பொருள். சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தானது. மெர் குரியை சுவாசித்தாலோ, வாய் மூலம் உட் கொண்டாலோ, மூளை பாதிக்கப்படும் என்கிறது, ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் அமைப்பு. அறையில் தட்பவெட்பத்தில் அறைக்குள் இருக்கும் மெர்குரி சிறிய அளவே வெப்பம் உயர்ந்தாலும் மெர்குரி ஆவியாகிவிடும். மிக எளிதாக மனித உடலில் நுழைந்து விடும். மெர்குரி எவ்விதமான மணமும் இல்லாதகாரணத்தால், மெர்குரியை சுவாசிக்கிறோம் என்பதேஒருவருக்கு தெரியாது. கனடாவைச் சேர்ந்த கால்கரி பல்கலைக்கழகம் மெர்குரி எந்த வகையில் மூளையை பாதிக்கும் என்பதை ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டள்ளது.

இந்தியாவில் மெர்குரி பயன்பாட்டை கட்டுப் படுத்துவதற்கு எவ்விதமானசட்டதிட்டங்களும் இல்லாத காரணத்தால், இத்தகைய கடுமையான சுற்றுச்சூழல்பாதிப்பைஏற்படுத்தும்மெர்குரியால் நான் ஒரு சிலையை உருவாக்கியிருக்கிறேன் என்று வெளிப்படையாக அறிவிக்கிறார் ஜக்கி. இத்தகைய கடும் பாதிப்பை ஏற்படுத்தும் மெர்குரியால் செய்யப்பட்ட லிங்கம் அடங்கிய குளத்தில் குளித்தால், தீராத வினையெல்லாம் தீரும் என்று அறிவிக்கிறார் ஜக்கி.

esha 600ஈஷா மையத்தினர் வெளியிட்டுள்ள வீடியோவிலேயே மெர்குரியை அவர்கள் கையால் கையாள்வது வெளிப்படையாக தெரிகிறது. ஏற்கனவே இருக்கும் மெர்குரியால் அமைக்கப்பட்டதீர்த்தகுண்டம்போதாதுஎன்று, புதிதாக சூர்யகுண்டம் என்று மற்றொரு மெர்குரி சிலைஅடங்கிய குளத்தைஉருவாக்கியிருக்கிறார் ஜக்கி. மெர்குரி பயன்பாட்டில் உள்ள ஆபத்துகளையும், அதை தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும், பயன்படுத்துவதற்கான விதி முறைகளையும் மத்திய மாசு கட்டுப்பாட்டுத் துறை உருவாக்கியிருக்கிறது.

மெர்குரியோடு நெருங்குவது ஆண்மைக் குறைவை ஏற்படுத்தும் என்று மத்திய அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின்அறிக்கையேதெரிவிக்கிறது.ஆனால், இதையறியாத பல்வேறு பக்தர்கள் தாங்கள் கூவாத சேவலாகப் போகிறோம் என்பதையே அறியாமல், ஜக்கி வாசுதேவ் கூறியபடி மெர்குரி சிலைஇருக்கும் குளத்தில் நீராடிமகிழ்கின்றனர். கோவையில் உள்ள ஈஷா மையத்தில் நீங்கள் நுழைந்தால், அங்கே ஜக்கியின் படங்கள், அவர் படம் பொறித்த பனியன்கள், வேட்டிகள், மாலைகள், நகைகள், லிங்கங்கள் உள்ளிட்ட ஏராளமானவை விற்பனை செய்யப்படும். இது ஒரு புறம் என்றால், மறுபுறம், பிஸ்கட், மூலிகை தேயிலை, ஊறுகாய் என்று உணவுப் பொருட்கள் ஒரு புறம் விற்பனை செய்யப்படும். பைரவி என்று வெறும் இரண்டு கண்கள் படம் மட்டுமே இருக்கும். அதன் விலையைக் கேட்டால் ஆயிரக்கணக்கில் சொல்வார்கள்.

இது போக உத்திராட்ச மாலை, ஸ்படிக லிங்கம் என்று பல்வேறு பொருட்கள் ஒரே நேரத்தில் விற்பனை செய்யப்படும். இவற்றில் நீங்கள் எதை வாங்கினாலும் ரசீது தரப்படாது. மீறி ரசீது கேட்டீர்கள் என்றால், நன்கொடைக்கான ஒரு ரசீது தரப்படும். அந்த ரசீதில், ஈஷா என்ற அறக்கட்டளைக்கு நீங்கள் நன்கொடை வழங்கியுள்ளீர்கள் என்றும், அந்த நன்கொடை, இந்திய வருமான வரித்துறை சட்டம் பிரிவு 80நின் படி, வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும். அரசாங்கத்தின் வரிச்சலுகையில் நகை வியாபாரம் செய்யும் ஜக்கி 80நி இந்திய வருமானவரிச் சட்டத்தின் கீழ் விதிவிலக்கு பெறவேண்டுமென்றால் முக்கியமான ஒரு நிபந்தனை, எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தின் நலனையும் பிரதிபலிக்கக்கூடிய வகையில் சலுகை  

பெறும் நிறுவனம் செயல்படக்கூடாது என்பதே. லிங்கமும், ருத்திராட்சமும் கிறித்துவர்களும், இஸ்லாமியர்களும் பயன்படுத்துகிறார்களா என்ன ? அப்பட்டமாக இந்து மதத்தின் நலனைப் பாதுகாத்து ஈஷா மையம் நடத்தி வரும் ஜக்கி என்ற அயோக்கியனுக்கு, இந்த நாள் வரை வருமானவரிச் சலுகை அளித்து வருகிறது வருமானவரித்துறை. சமீபத்தில் கோவை மாவட்டம் ஆலந்துறை காவல் நிலையத்தில், ஈஷா மையத்துக்கு எதிரான ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் தனது புகாரில் பின் வருமாறு தெரிவிக்கிறார்.

ஸ்வீடன்நாட்டைச் சேர்ந்த ஜெயபால்என்ற பெண்மணி தனது புகாரில், நான் 16 டிசம்பர் 2014ல் இந்தியா வந்தேன். நான் இந்தியா வந்தது, வெள்ளியங்கரி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஈஷா மையத்தின் யோகா மற்றும் யந்த்ரா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தேன். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஈஷா மையம் என்னை நாலரை லட்சம் கட்டச் சொன்னார்கள். அதன்படியே நானும் நாலரை லட்சம் கட்டினேன். நான் கட்டிய நாலரை லட்சத்தை நன்கொடையாக பதிவு செய்வார்கள் என்பது எனக்குத் தெரியாது. நன்கொடை என்பதுவிரும்பி,தாமாகமுன்வந்துதரவேண்டும். யந்த்ரா என்ற அந்த நிகழ்ச்சி 21 டிசம்பர் 2014 அன்றுநள்ளிரவில்நடைபெற்றது. அந்தநிகழ்ச்சி முடிவுற்ற பிறகு மேலும் 50ஆயிரம்கேட்டார்கள்.

அந்த 50 ஆயிரம் அந்த யந்த்ராவை விமானம் மூலமாக ஸ்வீடன் அனுப்புவதற்காக என்று தெரிவித்தார்கள். எனக்கு அந்த யந்த்ராவே வேண்டாம் என்று நான் கூறியபோதும், 50 ஆயிரம் கட்டியே தீர வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஏற்கனவே நாலரை லட்சம் கட்டிய என்னை மேலும் 50 ஆயிரம் கட்ட வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தியது என்னை கடும் அதிர்ச்சியடையச் செய்தது. அந்த யந்த்ராவை எடுத்துப் பார்த்தபோது, அது 165 கிலோ எடை இருந்தது என்பதும், அது உடைந்திருந்தது என்பதையும் கண்டு பிடித்தேன்.

மேலும் மேலும் என்னிடம் பணம் கேட்டு வற்புறுத்தியபோதுதான் நான் இவர்கள் ஏமாற்றுப் பேர்வழிகள் என்பதை உணர்ந்தேன். உணர்ந்ததும் வருத்தத்தோடு நான் கட்டிய நாலரை லட்சம் பணத்தை திருப்பித் தாருங்கள் என்றுஅவர்களிடம்கேட்டேன்.பணம்திருப்பித் தர முடியாது என்று என்னோடு வாதத்தில் இறங்கியதோடு,மேலும்50ஆயிரம்தரவேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தினார்கள்.

என்னுடைய நாலரை லட்சத்தை பெற்றுத் தருவதோடு, ஈஷா மையத்தின் மேல் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்தப்புகாரையடுத்து,குற்ற எண்1/2015என்ற எண்ணில், ஆலந்துறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்குப் பின் என்ன நடக்கும் ?

வழக்கம் போலவே, புகாரளித்தவருக்கு பணத்தை திருப்பி அளித்து, சமாதானம் செய்து கொண்டனர் ஈஷா மையத்தினர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், வெளிநாட்டில்வாழும்ஒருவரைவசியம் செய்து, அவரது சேமிப்புகளை வந்து ஈஷா மையத்தில் கொட்டும் அளவுக்கு மனமாற்றம் செய்யும் வலிமையை ஜக்கி பெற்றிருக்கிறார் என்பதே. கடந்த வருடம், சென்னை மாம்பலத்தில் ஈஷா மையத்தின் ஒரு வார யோகா வகுப்புக்கு சென்றிருந்தபோது, யோகா கற்றுக்கொடுத்த, ஒரு பெண் வகுப்பு நடக்கையில் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டார். “நான் இன்போசிஸ் நிறுவனத்தில் மிக உயர்ந்த சம்பளத்தில்பணியாற்றிக்கொண்டிருந்தேன்.டீம் லீடர் அளவுக்கு வளர்ந்தேன். ஆனால், அப்போது இல்லாதநிம்மதியைஈஷாமையத்தில்சேர்ந்ததும் அடைந்திருக்கிறேன்.” என்று கூறினார்.

செக்ஸ் போன்ற இயல்பான உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி பிரம்மச்சர்யத்தை கடைபிடிப்பதே உண்மையான ஞானம் என்று என்று ஜக்கி கூறுவதன் அடிப்படையில் தங்கள் வேலை, குடும்பம், மனைவி என்று அனைத்தையும் துறந்து, ஜக்கியின் ஆசிரமத்தில் முழு நேர தொண்டர்களாக மாறுகிறார்கள். ஜக்கியின் ஆசிரமத்தில் சேர்ந்ததால் நாசமான குடும்பங்கள் ஏராளம். செக்ஸ் போன்ற உணர்வுகள், மிக மிக இயல்பானவை. அந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி, இயற்கைக்கு முரணான பிரம்மச் சர்யத்தை கடைபிடித்தால், மனச் சிதைவுக்கு ஆளாகி,ஒருசாடிஸ்டாகமட்டுமேமாறமுடியும். மன நிம்மதி கிடைக்காது.

சென்னை வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனின் அலுவலகத்துக்கு ஒரு வயதான பெண்மணி வந்தார். அவருடைய மகளும், மருமகனும், வேலையை ராஜினாமா செய்து விட்டு, தங்கள் சேமிப்பு அனைத்தையும் ஜக்கி நிறுனத்தில் செலுத்தி விட்டு, தங்கள் குழந்தையை சன்னியாசிகளை உருவாக்கும் சம்ஸ்கிருதி பள்ளியில் சேர்த்திருப்பதாகவும் தெரிவித்தார். என் மகளிடம் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தேன். ஆனால் அவள் என்னிடம் கோபப்படுகிறாள். என்னைஅடிக்கிறாள்.ஜக்கியைப்பற்றிபேசாதே என்று சண்டை போடுகிறாள். ஒரு நாள் முழுக்க ஒரே ஒரு வாழைப்பழத்தை மட்டுமே உணவாக உண்ணுகிறாள். என்னால் என் மருமனையோ, மகளையோ கட்டுப்படுத்த முடியும் என்று தோன்றவில்லை. என் பேத்தியின் வாழ்வை நாசமாக்கி விடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது.

தயவு செய்து, அந்த சம்ஸ்கிருதி பள்ளியை மூடுவதற்கான வழக்கை துரிதமாக நடத்துங்கள்என்றுகூறினார்.இதற்காகஎவ்வளவு கட்டணம் ஆனாலும் நான் தருகிறேன் என்று கூறினார். அவரிடம் பணம் எதுவும் வேண்டாம் என்று கூறி அனுப்பி விட்டு, வழக்கை நாங்கள் நடத்திக் கொள்கிறோம் என்று கூறி அனுப்பி வைத்தோம். பிறகு இவரைப்போலவேமற்றொரு வயதான பெண்மணி, தொலைபேசியில் இதே போன்ற ஒரு கதையை கூறினார்.

அந்தப் பெண்மணிகளின் கண்ணீர் வேதனையை வரவழைத்ததோடு உணர்த்திய மற்றொரு விஷயம், இந்தப் பெண்மணிகளைப் போல ஆயிரக்கணக்கான குடும்பங்கள், ஜக்கி என்ற பொறுக்கியால் சீரழிந்ததுள்ளன என்பதே. ஊருக்கெல்லாம் பிரம்மச்சர்யத்தை உபதேசம் செய்யும், ஜக்கி வாசுதேவால், தன்னுடையசொந்த மகளுக்கு பிரம்மச்சர்யத்தின் மாண்புகளை கடைபிடிக்கும்படி அவரை நம்பவைக்க முடியவில்லைஎன்பதுகுறிப்பிடத்தகுந்தவிஷயம். மகனுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்தார். இதைத்தவிர்த்து, உரிய விசா பெறாமல், பல வெளிநாட்டு நபர்களும், ஈஷா மையத்துக்குள் தங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தகுந்த மற்றொரு விஷயம்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால், ஈஷா மையம் செய்து வரும் காரியங்கள் அனைத்தும் சட்டவிரோதமானவையே.. இவர்கள் சொல்லித் தரும் யோகா பயிற்சிகள், உண்மையிலேயே உடலுக்கு நன்மை பயப்பவை. ஆனால் வெறும் யோகப்பயிற்சிகளை மட்டும் சொல்லித்தந்தால், ஜக்கியின் சாம்ராஜ்யம் இப்படி விரிவடைந்திருக்காது. முதல் இரண்டு நாட்கள் பயிற்சியைச் சொல்லித் தந்து விட்டு, மூன்றாம் நாள் முக்கிய யோகப்பயிற்சி செய்வதற்கான பூஜை என்று தொடங்குவார்கள். அந்த பூஜையின்  போது, ஜக்கி வாசுதேவின் பெரிய படத்தை வைத்து, அரை மணி நேரம் பூஜை செய்வார்கள். இந்த இடத்திலிருந்துதான் தொடங்குகிறது மூளைச்சலவை.

இதற்குப் பிறகு, உருத்திராட்ச மாலை அணிவதால் ஏற்படும் பயன்கள் என்னென்ன என்று சொல்லி விட்டு, இந்த உருத்திராட்ச மாலைகள் வெளியில் கிடைக்காது என்று சொல்லுவார்கள். வகுப்பு முடிந்ததும் பார்த்தால் 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை விலையிருக்கும் உருத்திராட்ச மாலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். அதற்கு அடுத்தபடியாக வகுப்பு முடிந்ததும் சத்துமாவுக் கஞ்சி தயாரித்து அருந்துவதற்கு தருவார்கள். தரும்போதே, இந்தசத்துமாவுஈஷா மையத்தால் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு உள்ளது என்று கூறுவார்கள். நான்கு நாட்கள் வகுப்பு முடித்தவர்கள் உங்களின் அனுபவங்களைக் கூறுங்கள் என்று பேசச் சொல்லுவார்கள். ஏற்கனவே வீ கேன் நிறுவனத்தின் மல்டி லெவல் மார்க்கெடிங் நடந்தது அல்லவா அதே போல வகுப்பில் வந்தவர்களும் பேசுவார்கள். நான்கு நாட்கள் யோகா பயிற்சி செய்து முடித்ததும், எனக்கு உலகமே புதிதாக தெரிகிறது..  

அனைவர் மீதும் அன்பு செலுத்துகிறேன்.. சிகரெட் பிடிப்பதை குறைத்திருக்கிறேன், மனைவியோடு சண்டை போடுவதில்லை என்று கூறுவார்கள். அப்படியெல்லாம் எதுவும் நமக்குத் தோன்றாவிட்டாலும், இத்தனை பேர் சொல்லும் போது, நமக்கு எதுவும் தோன்றவில்லை என்று எப்படி சொல்லுவது என்று யோசித்துக் கொண்டு, நாமும் “எனக்கு நான்கு நாட்களாக உலகமே பளிச்சென்று நன்றாக தெரிகிறது..” என்று ஏதாவது உளறி விட்டு வருவோம்.

தற்போது இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்கள், இதற்கான அடுத்த கட்ட பயிற்சியில் கலந்து கொள்ளுங்கள். அதற்காக பதிவு செய்பவர்கள் பெயரை கொடுக்கலாம் என்று கூறுவார்கள். ஈஷா மையம், பல்வேறு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்கிறது என்று கூறுவார்கள். இலவச ஆம்புலன்ஸ் சேவைகள், இலவச மருத்துவமனைகள் போன்றவற்றை சத்குரு செய்து வருகிறார் என்பார்கள். இதற்கான நன்கொடைகளை  நீங்கள் வழங்கினால், மேலும் பல்வேறு ஏழைகள் பயன்பெறுவார்கள், அவர்களுக்கு சத்குருவால் மேலும் பல சேவைகளைச் செய்ய முடியும் என்று கூறுவார்கள்.

யோகா வகுப்புக்கு வந்த அடிமைகளுக்குத்தான் உலகமே புதிதாகத் தெரிகிறதே முதலில் தங்களை வாலண்டியராகப் பதிவு செய்து விட்டு, ஒரு பராரிக் குழந்தையை சத்குரு கட்டிப்பிடிக்கும் வீடியோவை பார்த்து விட்டு அந்தக் குழந்தைக்கு சத்குரு மூலமாக உதவலாம் என்று உடனே செக் எழுதித் தருவார்கள். வகுப்பின் இறுதியில், நீங்கள் வாலண்டியராக சேர வேண்டும், இந்த யோகப் பயிற்சியின் பலன்களை உலகெங்கும் எடுத்துச் செல்ல சத்குருவுக்கு உதவுங்கள், என்று மூளைக்குள் அடிமைத்தனத்தையும், போதையையும் விதைப்பார்கள். இந்த போதைக்கு அடிமையானவர்களின் வாழ்வு அதோகதிதான்..

ஏழைக் குழந்தைகளுக்காக உங்களின் ஒரு நாள் உணவை தியாகம் செய்யுங்கள் என்று கூறுகிறார் சத்குரு. நீங்கள் ஒரு நாள் உணவைத் தியாகம் செய்வதால் வரும் தொகையை அப்படியே ஈஷா மையத்துக்கு நன்கொடையாக வழங்கினீர்கள் என்றால், அதனால் மேலும் பல ஏழைகளுக்கு சத்குரு உதவுவார் என்று அதே வகுப்பின் இறுதியில் உங்களுக்கு ஓதப்படும். உங்களை ஒரு நாள் உணவைத் தியாகம் செய்து நன்கொடை தாருங்கள் என்று வற்புறுத்தும் சத்குரு வைத்திருக்கும் ஹம்மர் வாகனத்தின் விலை என்ன தெரியுமா ? 40 லட்சம். சத்குரு சொந்தமாக வைத்திருக்கும் ஸி22 வகை ஹெலிகாப்டரின் விலை என்ன தெரியுமா ? 14 கோடி. இந்த ஹெலிகாப்டருக்கான தேவை என்ன என்பதை சத்குருவே விளக்குகிறார்.

“தென்னிந்தியாவில் ஈஷா யோகா பல மடங்கு வளர்ந்துவிட்டது. கடந்த மூன்று ஆண்டு களில் மட்டும் 20 மடங்கு வளர்ந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சிக்கல் எனது நேரக்குறைபாடு. நேரக்குறைபாடு பெரிய சிக்கலாகி விட்டது. இதை நான் ஆராய்ந்தபோது நான் சாலை வழியாக பயணிப்பதில்தான் அதிக நேரத்தை செலவிடுகிறேன் என்பதை உணர்ந்தேன்.

இன்று ஈஷாவுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பில், இந்தியாவில் உள்ள அனைத்துக் கதவுகளையும் நமக்காக திறந்திருக்கிறது. ஒரு ஊருக்கு நான் வருகிறேன் என்றால் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். ஆனந்த அலை நிகழ்ச்சியின் போது சென்னையில் மட்டும் ஒருலட்சம் பேர் கூடினார்கள். மற்ற ஊர்களில் தலா 30 ஆயிரம் பேர் கூடினார்கள். நான் அவ்வாறு கூடியவர்களுக்கு ஒரு சவால் விட்டேன். ஈஷாவின் இன்னர் இன்ஜினியரிங் நிகழ்ச்சிக்கு 10 ஆயிரம் பேரை எந்த ஊரில் பதிவு செய்கிறீர்களோ, அந்த ஊருக்கு நானே நேரில் வருவேன். சிறிய ஊர்களில் 5 ஆயிரம் பேரை பதிவு செய்யுங்கள் என்று கூறினேன். இவர்களுக்குள் போட்டி உருவானது. ஒருவர் நான் 5 ஆயிரம் பதிவு செய்தேன்என்றார்.மற்றொருவர்நான்8ஆயிரம் பேரை பதிவு செய்துள்ளேன் அதனால் எனது ஊருக்குத்தான் வர வேண்டும் என்றார்.

இப்படி பல ஊர்களிலும் என்னை வரவைப் பதற்கு கடுமையான முயற்சி நடப்பதால் ஒரு முடிவுக்கு வந்தேன். அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் ஈஷா பயிற்சி எடுக்காத நபரே தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்தேன்.

அதனால் ஹெலிகாப்டர் ஓட்டக் கற்றுக் கொள்வது என்று முடிவு செய்தேன்” என்று கூறுகிறார் ஜக்கி. இந்த ஹெலிகாப்டரை மெயின் டெயின் செய்ய ஆண்டுதோறும் தேவைப்படும் தொகை 15 லட்சம். சரி... சத்குரு எப்படிப்பட்ட நபர் என்பதை புரிந்திருப்பீர்கள். ஏமாந்தவனிடம் ஏமாற்றிப் பிழைப்பது உலகில் பலர்ஈடுபடும்மோசடிச்செயல்தான்.சத்குருவும், தன்னிடம் ஏமாறுபவர்களிடம் வசூல் செய்து சம்பாதிக்கிறார். இது ஏமாற்றுபவனுக்கும், ஏமாறுபவனுக்குமான பிரச்சினை. இதைக் கூட மன்னித்து விடலாம். ஆனால், இயற்கையை அழிக்கும் சத்குருவை எப்படி மன்னிப்பது ?

சத்குரு எப்படி இயற்கையை அழிக்கிறார் என்பதைப் பார்க்கும் முன் சத்குரு நாட்டில் பசுமையை வளர்ப்பதற்கு என்னென்ன செய்திருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.

“இயற்கையைப் பாதுகாப்பதில் பொறுப் புணர்வோடு நடந்து கொள்ள வேண்டிய, அதைப் பற்றி குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய பெரியவர்களுக்கே எடுத்துக் காட்டாக விளங்குகிறார்கள் இளவரசனைப் போன்ற பள்ளி செல்லும் பல சிறார்கள். இதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தின் செயல்திட்டமான பசுமைப் பள்ளி இயக்கம். சத்குரு அவர்களின் வழிகாட்டுதலோடு துவங்கப்பட்டிருக்கும் இந்த பசுமைப் பள்ளி இயக்கம், பள்ளிக் குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை மரக்கன்றுகளை உற்பத்தி செய்வது மற்றும் மரம் நடுவது போன்ற பணிகளில் ஈடுபடுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது.”

இதற்கு அடுத்த பகுதிதான் சிறப்பு.

மரம் வளர்ப்பதற்கு எனக்கு அதற்குப் போது மான நேரம் இல்லையே, அதற்கான சரியான சூழ்நிலை இல்லையே” என்று நினைப்பவர்கள் ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம் மூலமாக உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும். 50 ரூபாய் செலுத்தினீர்கள் என்றால், உங்கள் பெயரில் ஒரு மரக்கன்று நடப்படுமாம். அதன் மூலம் பசுமையை வளர்க்கிறார்களாம். இப்படி சத்குரு நடத்திய இந்த பசுமை இயக்கம் மூலமாக ஒரே நாளில் பல லட்சம் மரக்கன்றுகளை நட்டதற்காக, மத்திய அரசின் இந்திரா காந்தி விருது சத்குருவுக்கு வழங்கப்பட்டது. இப்படியெல்லாம் சத்குரு இயற்கை ஆர்வலாக இருக்கிறாரே என்று மனமகிழ்ச்சி அடைந்திருப்பீர்கள். அவசரப்படாதீர்கள். மீதம் உள்ள கட்டுரையைப் படித்தால், சத்குரு, கோட்டாசீனிவாசராவ்நடிக்கும்கேரக்டர்களில் உள்ளதைவிட மிக மோசமான வில்லன் என்பது புரியும்.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில், கோவை, தொண்டாமுத்தூர் பஞ்சாயத்தில் உள்ள இக்கரை பொலுவாம்பட்டி கிராமத்தில் தனது ஆசிரமத்தை தொடங்குகிறார் ஜக்கி. அந்த கிராமம் ஒரு அடர்ந்த வனப்பகுதி. வனப்பகுதிக்கு மிக மிக அருகாமையில் அமைந்துள்ள அந்த கிராமத்தில் விவசாயம் சிறப்பாகநடைபெற்றுவருகிறது.அந்தஇடத்தில் தன் கடையை விரித்த ஜக்கி, மெல்ல மெல்ல, அவ்விடத்தில் இருந்த விவசாய நிலங்களை விலைக்கு வாங்குகிறார். இப்படி வாங்கிய நிலத்தில் 26.11.1999 அன்று தியான லிங்கம் என்ற ஒரு லிங்கத்தை நிறுவுகிறார்.தொடக்கத்தில் தான் ஒருஆன்மீக குருவாக உருவாகுவோம் என்பதை அறியாத ஜக்கி லிங்க சிலையை வைத்து, அதன் மூலம் வசூல் வேட்டையில் இறங்கலாம் என்ற அடிப் படையிலேயே தொடங்குகிறார். இந்த லிங்க விவ காரத்திலும் ஜக்கி தான் ஒரு மோசடிப் பேர்வழி என்பதை வெளிப்படுத்துகிறார். ஈஷா மையத்தின் இணையதளத்தில் இப்படி இருக்கிறது

The entire structure is a vision of Sadhguru Jaggi Vasudev. The entire design was conceived by Sadhguru and executed by Bhramhachari engineers with the help of about 300 local unskilled labourers.

அதாவது, தியானலிங்கத்தின் மொத்த உருவாக்கமும் ஜக்கி வாசுதேவின் எண்ணத்தில் உதித்தவை. மொத்த வடிவத்தையும் சத்குரு உருவாக்கினார். பிரம்மச்சாரி பொறியாளர்களின் உதவியோடும், அப்பகுதி மக்களில் 300 வேலை யாட்களின் துணையோடும் அந்தத் திட்டத்தை செயல்படுத்தினார்ஜக்கிஎன்று கூறுகிறது ஈஷா. ஆனால்இந்தலிங்க கோயிலுக்கானவரைபடம், திட்டம், செயல்படுத்துதல், கட்டுமானம் என்று அனைத்தையும் செய்தது, பாண்டிச்சேரியில் உள்ள ஆரோவில் எர்த் இன்ஸ்ட்டிடியூட். இணைப்பு இப்படி ஒரு சாதாரண கட்டுமான வேலைகளில் கூட, பொய்யுரைக்கும் சத்குருவின் உண்மை முகத்தை புரிந்து கொள்ளுங்கள்.

ஜக்கி வாசுதேவ் பேசுகையில், தன்னை கடவுள் நம்பிக்கை இல்லாதவராகக் காட்டிக் கொள்வார்.கடவுளைப்பற்றிக்குறிப்பிடுகையில், “உங்கள் கடவுள்” இப்படிச் சொல்லுகிறார் என்றுதான் குறிப்பிடுவார். ஆனால் அவர் கட்டியது லிங்கம். லிங்கம் என்றால் என்ன என்பது விபரமறிந்தவர்களுக்குப் புரியும். அது சிவபெருமானின் சின்னம். லிங்க சிலையைக் கட்டி விட்டு, அது மதம் சார்ந்ததல்ல என்று கூறுவது ஜக்கியின் மற்றொரு மோசடி. தற்போது தஞ்சை சிவன் கோயிலில் இருப்பது போலவே வாசலில் ஒரு நந்தி சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. மலைத்தளப் பாதுகாப்புக் குழு (Hill Area Conservation Authority) என்று ஒரு குழுவை தமிழக அரசு 1990ம் ஆண்டு உருவாக்குகிறது. இந்தக் குழுவில் வனத்துறை அதிகாரிகள், பஞ்சாயத்து அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் என்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

மலை மற்றும் மலை சார்ந்த பகுதிகள் என்று அறிவிக்கப்பட்ட கிராமங்களில் எவ்விதமான கட்டுமானம் செய்வதாக இருந்தாலும், இந்தக் குழுவின் அனுமதி பெறாமல் செய்ய முடியாது. இந்தக் குழுவின்அனுமதி பெறுவதும்எளிதானகாரியம் அல்ல.ஒருசிறியகட்டிடம்கட்டுவதாகஇருந்தால் கூட, இந்தக் குழுவிடம் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.அந்தக்குழுவின்உறுப்பினராகஉள்ள, மாவட்ட ஆட்சியர், கட்டிடம் கட்டப்படும் பகுதியை நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும். வனத்துறை அதிகாரியும் இதே போல நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும். அந்த கிராமம் அமைந்துள்ள பஞ்சாயத்து அமைப்பின் கூட்டத்தில் இதற்கு அனுமதி அளிக்கும் தீர்மானம் இயற்றப்பட வேண்டும். இப்படி அதிகாரிகள் அளிக்கும் அறிக்கைகள், மலைத்தளப் பாதுகாப்புக் குழுவின் கூட்டத்தில் வைக்கப்பட்டு, ஒப்புதல் வழங்கப்படும். இதற்குப் பிறகே கட்டுமானப் பணிகளையே தொடங்க வேண்டும்.

1994ல் தன் மோசடி வேலைகளைத் தொடங்கிய ஜக்கி வாசுதேவ், எந்த அனுமதியும் பெறாமல், தனது கட்டுமானப் பணிகளைத் தொடங்குகிறார். பணம் சேரச் சேர, அந்த லிங்கக் கோயிலைச் சுற்றி, பல்வேறு கட்டிடங்களை எழுப்புகிறார். அப்போது இருந்த வனத்துறை அதிகாரிகளோ, மற்ற அதிகாரிகளோ எவ்விதமான கேள்வியும் எழுப்பவில்லை.

உயர்நீதிமன்றத்தில் பூவூலகின் நண்பர்கள் சார்பில் வழக்கறிஞர் வெற்றிச் செல்வன் வழக்கு தொடந்திருக்கிறார். வழக்கு விசாரணையில் இருக்கும் போது தனது மேலிட செல்வாக்கை உணர்த்தவே “ஆதியோகி” சிலை திறப்புக்கு பிரதமர் மோடியை அழைத்திருக்கிறார். மோடியும் – பங்கேற்றுசட்டமீறல்களுக்கு-மோசடிகளுக்கு தனது ஒப்புதலை வழங்கிருக்கிறார். இனி எந்த அதிகாரிகள் ஜக்கியின் மோசடிகளுக்காக நடவடிக்கை எடுக்க துணிவார்கள்?  

நன்றி : சவுக்கு இணையதளம்