இந்திய அறிவியலில் இந்த அக்டோபர் 6 ம் நாளுக்கு ஒரு தனி இடம் உண்டு. காரனம் இந்திய அறிவியலில் முன்னோடியாகக் கருதபட்ட ஒரு மனிதரின் பிறந்த தினம் இன்று. இவர் பெயர் மேக்நாத் சாஹா.

இவரைப் பற்றி ஒரு சில வரிகளில் சொல்லி விட முடியாது. காரணம் இவரின் புகழ் மிக பெரியது. இவருக்கு நம் அரசு செய்த துரோகங்களும் மிக பெரியது. இவரைப்பற்றி விளக்குகிறேன். இந்தியர்களின் வளர்ச்சிக்கு உதவிய இந்தியத் திட்டக்குழுவிற்கு வித்திட்டவர். விஞ்ஞானி. இந்தியப் பாராளுமன்றத் திற்குச் சென்ற ஒரு மனிதர். சர். சி.வி. ராமன் அவர்களுடன் நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்.

இவரின் பெயர் 7 முறை நோபல் பரிசுக்குப் பரிந்துறைக்கபட்டது. கல்லூரிக் காலத்தில், ஆங்கிலேய கவர்னருக்கு எதிராகப் பேசிய சுதந்திரப் போராட்ட வீரர். இவரின் ஆசிரியர் இந்தியாவின் தலைசிறந்த அறிவியல் பிதாமகனான ஜெகதீஷ் சந்திர போஸ். இவரது நண்பன் ரேடியோவிற்கு முதல் வடிவம் கொடுத்த சத்தியேந்திர நாத் போஸ்.

அதே போன்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களின் சார்பியல் கேட்பாட்டை இலத்தீன் மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இவரது சாஹா சமன்பாடு குவாண்டம் இயற்பியலில் புகழ் பெற்றது. இப்படிப்பட்ட தலைசிறந்த விஞ்ஞானிக்கு நாம் செய்த துரோகங்கள் என்ன தெரியுமா?

மேக்நாத் சாஹாவின் புகழ் பெற்ற ‘சாஹா சமன்பாடு’ பற்றி எந்தப் பாடப் புத்தகத்திலும் இல்லை.. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மதித்த அறிவியல் அறிஞரைப் பற்றி நம்முள் பலருக்குத் தெரியாது என்பது தான் உண்மை. இவர் ஒரு தலித் என்பதால் இவரின் கருத்துகள் பல இடத்தில் மறுக்கபட்டுள்ளது. இவர் ஆங்கிலய அரசுக்கு எதிராகப் போராடியதால் இவருக்கு அரசுப் பதவி புறிக்கணிக்கபட்டது.

மேலும் இவர் ஆங்கிலய அரசுக்கு எதிராகப் போராடியதால் இவருக்கு நோபல் பரிசு புறக்கணிக்கப்பட்டது. இப்படிப்பட்ட உலகப் புகழ் பெற்ற சாஹாவின் பிறந்த தினத்தைக் கொண்டாட ஆட்களே இல்லை என்பது அதனினும் கொடுமை. மிகப்பெரும் துரேகம். நம் அனைவருக்கும் ஓரு கடமை உள்ளது. அது அந்தப் புகழ் பெற்ற அறிவியலாளர் மேக்நாத் சாஹாவின் பெருமைகளை உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டியது ஆகும்.