சென்னைக்கு அருகே $பெரும்புதூரில் மத்திய இளைஞர் மற்றும் விளையட்டு துறை அமைச்சகத்துக்குச் சொந்தமான இராஜிவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் RGNIYD இயங்குகிறது. இந்தக் கல்வி நிறுவனத்தில் 21 மாநிலத்தை சார்ந்த 180 மாணவர்கள் பயில்கின்றனர்.

கோவில் உருவான கதை:

1. சென்ற ஆண்டு கல்லூரி வாகன நிறுத்தம் அமைப்பதற்காக கல்லூரின் ஒரு பகுதி சுத்தம் செய்யபட்டது. அப்போது அங்கு ஒரு பெருமாள் சிலை கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அந்தச் சிலை இந்தக் கல்வி நிறுவனம் தொடங்கப்படுவதற்கு முன்பே இங்கு இருந்தது என்றும் கதை கட்டப்பட்டது.

2. அதன் பின்னர் இந்தச் சிலை பற்றிய எந்தக் கருத்தும் பதிவு செய்ய படவில்லை. ஆனால் இந்த ஆண்டு (2017) செப்டம்பர் 4 ஆம் தேதி இரவோடு இரவாக ஒரு சிறிய கோவில் கட்டபட்டது.

3. செப்டம்பர் 5 காலை 7.30 ல் இருந்து 8;30 மணி வரை பூஜை செய்து அந்தக் கோவிலைத் திறந்து வைத்தனர்.

4. செப்டம்பர் 5 அன்று பல மாணவர்கள் மாணவர் நல முதல்வரிடம் கூறிய போது அவரின் பதில் ‘’இதனால் உங்களுக்கு என்ன பிரச்சணை” மற்றும் இந்த கோவில் கல்லூரி பணத்தில் கட்டவில்லை. இது இங்கு உள்ள ஆசிரியர்களின் பணத்தில் கட்டபட்டது என்று கூறினர்.

5. அதன் பின்னர் இன்று வரை இந்த கோவிலில் தினமும் காலை பூஜையும் .படையல் நிகழ்வுகளும் நடந்தவண்ணம் உள்ளன. இந்தப் பூஜைக்குப் பார்ப்பனர் ஒருவர் தினசரி வருகிறார். மற்றும் இங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் கலந்துகொள்ளக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

2013 ல் இதே இடத்தில் ஒரு புத்தர் சிலை இருந்தது அப்போது இந்த சிலை மத உணர்வுகளை தூண்டுவதாக கூறி அகற்றப்பட்டது. அது போன்று முன்னால் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு கிழமை கிருஸ்தவ வழிபாடு நடந்து வந்தது அதுவும் மத உணர்வைத் தூண்டுகிறது என்று சொல்லித் தடைசெய்யபட்டது. ஆனால் இப்போது பெருமாள் கோவில் தங்கு தடையின்றி உருவாக்கப்பட்டுள்ளது.

அரசு வளாகங்களில் கோவில்கள் கட்டக்கூடாது என்ற அரசாணைகள்

1. அண்ணா - தமிழக முதல்வராக பதவிக்கு வந்தவுடன், அரசு அலுவலகங்களில் கடவுள்கள், சாமியார்கள், படங்களை மாட்டக் கூடாது என்றும், ஏற்கனவே மாட்டப்பட்டிருக்கு மானால் படிப்படியாக பிறர் கவனத்தை ஈர்க்காத வகையில் அகற்றிட வேண்டும் என்றும் தமிழக அரசு, தலைமைச்செயலாளர் ஒரு அரசாணையைப் பிறப்பித்தார். (29.4.1968, அரசாணைக் குறிப்பு எண்.7553/66-2)

2. அரசு வளாகங்களில் மதம், வழிபாடு தொடர்பான புதிய கோயில்கள், வழிபாட்டுத் தளங்களைக் கட்டுவதும், ஏற்கனவே இருந்தால், அதைப் புதுப்பிப்பதும் கூடாது என்றும், அத்தகைய நிகழ்வுகள் ஏதும் நிகழாமல் உறுதி செய்வது துறைத் தலைவர்கள், தலைமை நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர்களின் நடத்தை விதிகளுக்கு உட்பட்டதாகும் என்று வருவாய்த் துறை முதன்மை ஆணையர், வருவாய்த் துறை நிர்வாக ஆணையர் சார்பில், அனைத்துத் துறைகளுக்கும் அரசாணை அனுப்பப்பட்டது. (அரசாணை எண். 426, 13.12.1993)

3. அரசு அலுவலகக் கட்டிடங்களில் மதம் தொடர்பான முழக்கங்கள் எழுதுவதையோ, வளாகத்தில் வழிபாட்டுத் தளங்கள் அமைப்பதையோ அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அதற்கான ஆலோசனைக் குழுவின் கோரிக்கையை ஏற்று மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் என். அரிபாஸ்கர், அய்.ஏ.எஸ்., அனைத்துத் துறைகளுக்கும் மத்திய அரசின் கடிதத்தை இணைத்து சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். (எண்.8472 சட்டம் மற்றும் ஒழுங்கு பி/94-1)

4. மதுரை உயர்நீதிமன்றமும், அரசு வளாகத்தில் வழிபாட்டுத் தளங்கள், மத நிகழ்வுகள் நடப்பதைத் தடை செய்ய வேண்டும் என்றும், 1993 ஆம் ஆண்டின் அரசு ஆணையைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும், 17.3.2010 இல் உத்தரவிட்டது. அந்த உத்தரவின் அறிவுறுத்தல், அனைத்து அரசு அலுவலகங் களுக்கும் அரசு செயலாளர் வழியாக 22.4.2010 அன்று கடிதமாக (கடிதம் எண். 16844/ஏ/2010-1) அனைத்து அரசுத் துறைகளுக்கும் அனுப்பப்பட்டது.

இப்படி அரச மற்றும் நீதிமன்ற ஆணைகள் தெளிவாக இருந்தும், இராஜீவ் காந்தி கல்வி நிறுவனத்தில் பெருமாள் கோவில் திட்டமிட்டுக் கட்டப்படுகிறது. இதற்கு அந்த நிறுவனத்தின் இயக்குநர் ஆதரவாக உள்ளார். அவர் ஆர்.எஸ்.எஸ் ஸைச் சேர்ந்தவர்.

Pin It