2017 Aug wrapper 500

தலையங்கம்

தமிழ்நாட்டில், கடந்த ஒரு வருடத்தில் ஜாதிய வன்கொடுமைத் தாக்குதல்களில் 26 தலித்துகள் கொல்லப்பட்டுள்ளனர். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர், தாழ்த்தப்பட்டோரைத் தாக்குவது நீண்ட நெடுங்காலமாக நடந்து வருகிறது. ஆனால், கடந்த சில வருடங்களாக ஒரு புதிய தாக்குதல் வடிவம் வெளிவரத் தொடங்கியுள்ளது. தாழ்த்தப்பட்டவர்களுக்குள்ளேயே பள்ளர், பறையர், சக்கிலியர்களுக்கிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள் தாக்குதல்களாக வெளி வருகின்றன.

பிற்படுத்தப்பட்ட ஜாதிகளுக்குள்ளும் இதுபோன்ற ஏற்றத்தாழ்வுகள் கடுமையாக உள்ளன. ஒவ்வொரு பிற்படுத்தப்பட்ட ஜாதியும், மற்ற அனைத்துப் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளையும் கேவலமாகவும், இழிவாகவும் பார்க்கும் மனநிலையைத்தான் கொண்டுள்ளன. அதன் அடிப்படையில் ஒருவருக்கொருவர் வெட்டு, குத்து, கொலைகளில் இறங்குவதையும் பார்க்கலாம்.  

இவை ‘இந்து மதம் - ஜாதி’ என்பனவற்றின் பண்புகள் தான். இவை இரண்டும் ஒழியும் வரை பிற்படுத்தப்பட்டோருக்குள்ளும் – தாழ்த்தப்பட்டோருக் குள்ளும் - இந்த இரண்டு சமூகங்களுக்கு இடையேயும் தாக்குதல்கள், வன்கொடுமைகள் நடந்துகொண்டு தான் இருக்கும். அந்த இந்து மத அழிப்பு என்ற நிலைக்கு நாம் பயணத்தைத் தொடங்க வேண்டிய நிலையில், நம் காலைப் பிடித்துப் பின்னுக்கு இழுப்பது போல, பறையர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருசிலர் சக்கிலியர்களைக் கொலை செய்வது, அவர்களின் சொத்துக்களைக் கொள்ளை இடுவது போன்ற பார்ப்பன - பிற்படுத்தப்பட்ட சாதியினரின் பண்புகளைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

காதல் திருமணம் செய்ததால் விரட்டப்பட்ட புதிரை வண்ணார்கள்

வேலூர் மாவட்டம், ஆற்காடு வட்டம் பாரியமங்கலம் கிராமத்தில் தலித் (இந்து பறையர்) குடியிருப்புப் பகுதியில் புதிரை வண்ணார் சமூகத்தைச் சேர்ந்த 11 குடும்பங்கள் வசித்து வருகின்றன. புதிரை வண்ணார் சமூகத்தைச் சேர்ந்த பிரசாத் (வயது 22), பறையர் சமூகத்தைச் சேர்ந்த சிவாவின் மகள் சிவசக்தியை (வயது 18)  காதலித்து, 2016 ஜூன் மாதம் 17 ந் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

எனவே, சிவா, அவரது மகன் ரஷ்யா ஆகியோர் பிரசாத்தின் உறவினர்களான புதிரை வண்ணார்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு அவர்களின் வீடுகளையும் சேதப்படுத்தியுள்ளனர். குடிநீர், மின் இணைப்புகளைத் துண்டித்தனர். வாழ்வாதாரங்களையும் சிதைத்துள்ளனர். 20 கோழிகளை பறித்து சென்றுள்ளனர். தொடர்ச்சியாகத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இறுதியாக, புதிரைவண்ணார் சமூகத்தைச் சேர்ந்த 11 குடும்பங்களையும் ஊரை விட்டுத் துரத்தியுள்ளனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் சாமுவேல்ராஜ் தலைமையில் 11 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் கடந்த 21.02.17 ல் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

தருமக்குடிக்காடு

கடந்த 27.07.2017 ல் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள தருமக்குடிக்காட்டில் ஒரு கோவில் நில ஆக்கிரமிப்புத் தொடர்பாக எழுந்த வாக்குவாதத்தில் பறையர் சமுதாயத்தைச் சேர்ந்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சிப் பொறுப்பாளர் ஒருவர் முன்னிலையில், சக்கிலியர் சமுதாயத்தைச் சேர்ந்த சிவக்குமார் தாக்கப்பட்டு, மரணமடைந்துவிட்டார்.

இவரையும் சேர்த்து, கடந்த ஓராண்டில் 26 தலித்துகள் கொல்லப்பட்டனர். ஆனால், தலித் விடுதலை, தலித் உரிமைகளுக்காகப் போராடும் பல அமைப்புகள் சிவக்குமாரின் மரணத்தை அந்தப் பட்டியலில் சேர்க்கவே இல்லை. எண்ணிக்கை 25 என்றே மீண்டும் மீண்டும் பதிவு செய்கின்றன.

ஜாதிஒழிப்பு வீரர்களின் கோரமுகம்

தருமக்குடிக்காடு படுகொலையில் பல ஜாதிஒழிப்புப் போராளிகளின் உண்மைமுகங்களை அவர்களது முகநூல் பக்கங்களே வெளிப்படுத்தின. இது வெறும் தனிப்பட்ட மோதல் தான். நிலத்தை அபகரிப்பதற்காக நடந்த வாய்த்தகராறுதான் என்றெல்லாம் எழுதினர். இதுநாள் வரை இவர்கள் ஜாதி ஒழிப்பு என்பதெல்லாம், தன் ஜாதியைத் தவிர மற்ற ஜாதிகளை ஒழிப்பது என்ற மனநிலையோடுதான் பேசியுள்ளனர் என்பதை சிவக்குமார் அம்பலப்படுத்தினார்.

ஜாதி ஒழிப்புப் போராளி தோழர் இம்மானுவேல் சேகரன் படுகொலையைக்கூட வெறும் தேர்தல் பகை என்று காட்டிவிடலாம். கீழ்வெண்மணி படுகொலைகளைக்கூட வெறும் கூலி உயர்வு விவகாரம் என்று சுருக்கிவிடலாம். அப்படித்தான் அந்தந்தக் காலங்களில் ஜாதிஆதிக்கச் சிந்தனை கொண்டவர்கள் பேசினார்கள். எழுதினார்கள்.

ஏன் தருமபுரி இளவரசன் படுகொலையைக்கூட காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொண்டார். இதற்கும் வன்னியர்களுக்கும் தொடர்பில்லை - கோகுல்ராஜ் படுகொலை என்பதுகூட மனநிலை சரியில்லாமல் நடந்த தற்கொலை அதற்கும் கவுண்டர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை - விஷ்ணுப்பிரியா பணி அழுத்தத்தின் காரணமாகவே தற்கொலை செய்துகொண்டார். என்றெல்லாம் எழுதிய வன்னியர்களும், கவுண்டர்களும் நம்முடன் தான் வாழ்ந்து வருகின்றனர். அப்படி எழுதியவர் களைப் போன்ற சமுதாய விரோதிகளுக்கும், தருமக்குடிக்காடு சிவக்குமார் படுகொலையை, வெறும் நிலஅபகரிப்பு மோதல் என்று எழுதிய ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கும்  என்ன வேறுபாடு?

தலித் ஒற்றுமை அவசியம் - ஜாதி ஒழிப்பு அவசியமில்லைய?

உள்ஜாதி மோதல்களைப் பெரிதுபடுத்துவது தலித் ஒற்றுமைக்கு எதிரானது என்ற நோக்கில் பல தோழர்கள் இதைப் பெரிதுபடுத்தவில்லை எனத் தெரிகிறது. இது சரியான அணுகுமுறை அல்ல. தலித் ஒற்றுமை மட்டுமே ஜாதியை ஒழித்து விடுமா? பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோர் ஒற்றுமை என்பது அவசிய மில்லாத ஒரு செயலா?

தாழ்த்தப்பட்டோருக்குள் நடக்கும் ஜாதியத் தாக்குதல்களைப் பேசுவது, தலித் ஒற்றுமையைப் பாதிக்கும் என்றால், பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோர் இடையே நடக்கும் ஜாதியத் தாக்குதல் களைப் பேசுவதும், எழுவதும் பார்ப்பனரல்லாத, தமிழர்களின் - திராவிடர்களின் - உழைக்கும் வர்க்கத்தினரின் ஒற்றுமையைப் பாதிக்காதா? இந்த இரு பெரும் பிரிவு மக்களும் உலகம் உள்ளவரை அடித்துக்கொண்டு சாக வேண்டுமா? ஜாதி ஒழிப்பில் அக்கறை உள்ளவர்கள் யாரும் அப்படி எண்ணிக் கொண்டிருக்க மாட்டார்கள்.

அதேசமயம், இரு பிரிவு மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்பதற்காக, பிற்படுத்தப்பட்டோர் நடத்தும் ஜாதிய வன்கொடுமைத் தாக்குதல்களை வேடிக்கை பார்ப்பது மிகப்பெரும் தவறல்லவா? அதுபோலவே, பிற்படுத்தப்பட்டோருக்குள்ளோ, தாழ்த்தப்பட்டோருக்குள்ளோ தாக்குதல்கள் நடக்கும்  பொழுதும் அவற்றை ஜாதிய வன்கொடுமைகள் தான் என்று கூறுவதற்குக்கூடத் தயக்கம் வந்தால், அப்படித் தயங்குபவர்களால் ஜாதியம் வலுப்பெறவே செய்யும்.

பார்ப்பனர் அல்லாதார் ஒற்றுமை கருதி, பார்ப்பான் நேரடியாக வந்து தாக்குவதை மட்டுமே ஜாதிய வன்கொடுமையாகக் கருதுவோம். எழுதுவோம். மற்றபடி, பிற்படுத்தப்பட்டவர் போய் தாழ்த்தப் பட்டவர்களைத் தாக்கினால், ஜாதிய வன்கொடுமைகள் நடந்தால், அவற்றை நமக்குள் வைத்துக் கொள்வோம், நமக்குள் பேசிக்கொள்வோம். பெரிதுபடுத்தவேண்டாம் என்று எவராவது பேசினால் அவரை நாம் எப்படிப் பார்ப்போம்? அப்படித்தான் இந்த தலித் ஒற்றுமை பேசுபவர்களையும் பார்க்க வேண்டி வருகிறது.

முதலில், ஜாதி என்றால் இரண்டு தான் உள்ளது. ஒன்று பி.சி. மற்றொன்று எஸ்.சி. என்று எண்ணிக்கொண்டிருப்பவர்கள் தங்களது கருத்தை அவசியம் மாற்றிக்கொள்ள வேண்டும். 6000 ஜாதிகள் உள்ளன. 6000 ஜாதியும் ஒன்றுக் கொன்று ஏற்றத்தாழ்வைக் கொண்டவைதான்.

தாழ்த்தப்பட்டோருக்குள்ளேயே ஜாதி அடிப்படையிலேயே ஏற்றத்தாழ்வுகள் இருப்பது உண்மை. பிற்படுத்தப்பட்டோருக்குள்ளேயும் ஜாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பது உண்மை. இந்த இரு பெரும் பிரிவுகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்பதும் உண்மை. இந்த உண்மைகளை ஏற்றுக்கொண்டு, அறிவுப்பூர்வமாகப்புரிந்துகொண்டு, ஜாதி ஒழிப்புக் களத்தில் நிற்பவர்களுக்கு தருமபுரி இளவரசன், கோகுல்ராஜ், கண்ணகி முருகேசன், தருமகுடிக்காடு சிவக்குமார் போன்ற அனைவரும் ஜாதி ஆதிக்கச் சிந்தனை கொண்டவர்களால் கொல்லப்பட்டனர் என்ற உண்மை எளிதில் விளங்கும்.

இந்த அறிவியல் உண்மையைப் புரிந்து கொண்டவர்கள் பேசும் ஜாதி ஒழிப்பு மட்டுமே இலக்கு நோக்கிச் செல்லும். இந்தப் புரிதல் இல்லாமல், பிற்படுத்தப்பட்டவர்களுக்குள் தாக்குதல், படுகொலை என்றால் அதை உட்ஜாதிப் பகை, அதை வெளியில் பேசவேண்டியதில்லை என்பதும், தாழ்த்தப் பட்டோருக்குள் தாக்குதல், படுகொலை என்றால் அதுவும் உட்ஜாதிப் பகை அதை வெளியில் பேச வேண்டியதில்லை என்பதும் சரியான அணுகுமுறை ஆகாது.

அந்த அடிப்படையில் முன்னெடுக்கப்படும் போலி ஜாதிஒழிப்புப் பணிகள், சமுதாய ஆதிக்கத்தில் பார்ப்பானுக்கு இருக்கும் இடத்தைப் பிற்படுத்தப்பட்டவர் கைப்பற்றிக் கொள்வதற்கும் - பிற்படுத்தப் பட்டவர் இடத்தைத் தாழ்த்தப்பட்டவர் கைப்பற்றிக் கொள்ளவதற்கும் வேண்டுமானால் பயன்படலாம். ஜாதி ஒழிப்புக்கு எள்முனையளவும் பயன்தராது.

தருமக்குடிக்காடு சிவக்குமார் மரணம் என்பது ஜாதிய வன்கொடுமையே! அதற்காக ஒட்டுமொத்தப் பறையர்களையும், தாக்கியவரின் அமைப்பான விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பையும் எதிரியாக நிறுத்துவது  நிரந்தரத் தீர்வைத் தராது. இந்து மத - வேத, சாஸ்திரங்கள், புராணப் புளுகுகள், பண்டிகைகள், கடவுள்கள், இந்துப் பண்பாடுகளின் அழிவே நமக்கு ஒற்றுமையையும் விடுதலையும்  வழங்கும்.

Pin It

மோடி தலைமையிலான இந்து - பார்ப்பன அரசு புதிய தேசியக் கல்விக்கொள்கை என்ற பெயரில், மீண்டும் குலக்கல்வித் திட்டத்தைத் திணிக்கப்போகிறது. அநேகமாக பணமதிப்பிழக்க நடவடிக்கை போல அதிரடியாக இக்கொள்கை விரைவில் திணிக்கப்படலாம். டி,எஸ்.ஆர். சுப்பிரமணியன் என்ற தமிழ்நாட்டுப் பார்ப்பனர் தலைமையில் உருவாக்கப்பட்ட இக்குழுவின் அறிக்கை விவாதத்திற்காக வெளியிடப்பட்ட நாள் முதல் தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கங்களும், தலித் அமைப்புகளும், கம்யூனிச இயக்கங்களும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.

இக் காவிக்கல்விக்கொள்கையை எதிர்ப்பதை முழுநேரப் பணியாகவே மேற்கொண்டு வருகிறார் தோழர் பிரின்ஸ் கஜேந்திரபாபு. சி.பி.எம்., சி.பி.அய் கட்சிகளும் தீவிரமான எதிர்ப்பைக் காட்டி வருகின்றன.

புதிய தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துக்கள்

 • 2009 ஆம் ஆண்டிற்குப் பிறகு எட்டாம் வகுப்புவரை மாணவர்களுக்கு தேர்வில் ஃபெயில் என்பது கிடையாது. ஆனால் இனி, 4 வகுப்பிலேயே பாஸ் அல்லது ஃபெயில் என்று அறிவிக்கும் வடிகட்டும் முறை தொடங்கப்பட உள்ளது.

 • அனைத்துப்பள்ளிகளிலும் மூன்றாவது மொழியாக சமஸ்கிருதம் இணைக்கப்பட்டு, ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு சமஸ்கிருத ஆசிரியர் நியமிக்கப்படுவார்.

 • 8 ஆம் வகுப்புக்கு மேல் மாணவர்களுக்கு அவரவர் குலத்தொழிலுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு, அதற்குரிய கல்வி மட்டும் வழங்கப்படும்.

 • பள்ளிகள் அருகிலிருக்கும் ஆசிரமங்களிலிருந்து வழிகாட்டுதல்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

 • பாடத்திட்டங்கள், பாடங்கள் அனைத்தும் என்.சி.இ.ஆர்.டி என்ற மத்திய அரசின் நிறுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடும்.

 • கல்வி என்ற துறை முழுமையாக மத்திய அரசின் பட்டியலுக்குள் நிரந்தரமாகச் சென்றுவிடும்.

 • ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போல இனி ஐ.இ.எஸ் (இந்தியக் கல்விப் பணி) என்ற அதிகார மய்யம் உருவாக்கப்படும்.

கல்விப்புரட்சியின் தலைவன் மெக்காலே

இதுபோன்ற பல அபாயங்கள் இந்தப் பார்ப்பனக் கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வரும்வரை நமக்குக் கல்வியே கிடையாது. இராமாயணமும், மகாபாரதமும், வேதங்களும், சாஸ்திரங்களும் தான் இந்தியாவில் பாடங்கள். அதுவும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே அவை கிடைக்கும். பார்ப்பனர் அல்லாத மற்ற ஜாதியினர் அனைவருக்கும் அதுவும் இல்லை. எழுத்தறிவு பெற்றிடக் கூட நமக்கு உரிமை இல்லை. எனவேதான் நமது முன்னோர்கள் கைநாட்டுகளாக இருந்தார்கள்.

பாண்டிய, சேர, சோழ, தெலுங்கு, கன்னட, மராட்டிய மற்றும் வடநாடுகளின் அரசுகளிலும் இதேநிலைதான். அனைத்து நாடுகளிலும் வாழ்ந்த பார்ப்பனர்கள் மட்டுமே கல்வி கற்று வந்தனர். அந்நிலையை அடியோடி அழித்து, பார்ப்பனர் அல்லாதார் அனைவருக்கும் கல்வியைத் திறந்து விட்டவர் ஆங்கிலேயர் தாமஸ் பேபிங்டன் மெக்காலே. 1835 ல் மெக்காலே அறிமுகப்படுத்திய கல்விமுறையைத் தான் சில சில மாற்றங்களுடன் இன்னும் நாம் தொடர்ந்து வருகிறோம்.

கைநாட்டுச் சமுதாயத்தை - ஏடிறியாத - எழுத்தறியாக சமுதாயத்தைப் படிக்க வைத்து, குறைந்த பட்சம் படிப்பாளர்களாக, அலுவலர்களாக, அதிகாரிகளாக மாற்றி - அரசு நிர்வாகங்களில் பார்ப்பனருக்கு எதிராகப் போட்டியிடும் நிலைக்கு உயர்த்தியது மெக்காலேயின் கல்விமுறைதான். வகுப்புரிமை, இடஒதுக்கீடு என்றெல்லாம் நாம் போராடிப் பெற்ற அனைத்து உரிமைகளுக்கும் மிகவும் அடிப்படையாக அமைந்தது அந்தக் கல்வி முறைதான்.  

அந்த மெக்காலே முறை ஆரியப் பார்ப்பன - இந்து மத ஆதிக்கவாதிகளுக்கு எப்போதும் நஞ்சாகவே இருந்தது. ஆனால், பாட்டாளி மக்களுக்காக உழைப்பதாகக் கூறிக்கொள்ளும் சில கம்யூனிஸ்ட்டுகளுக்கும் நஞ்சாக இருப்பது அவர்கள் பூணுாலிஸ்ட்டுகள் என்பதை உறுதிப்படுத்துகிறது.ஸ்

அந்த மெக்காலே முறையில் இந்தக் காலத்திற்கேற்ப நிறைய மாறுதல்கள் அவசியம் தேவை. பின்லாந்தைப் போல, க்யூபாவைப்போல, முன்னேறிய ஐரோப்பியக் கல்வி முறைகளைப் போல நமது கல்விமுறை தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பிரேசில் நாட்டுக் கல்வியாளர் பாவ்லோ ஃபிரையர் அறிவுறுத்தும் ஜனநாயக வகுப்பறைகள் போல இந்திய வகுப்பறைகள் மாற வேண்டும் என்பதுதான் நமது கனவும். மாற்றம் என்பது சமுதாயத்தை வளர்ச்சிப்போக்கில் மாற்றுவதாக இருக்கவேண்டும். மீண்டும் 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைக்குச் சமுதாயத்தை இழுத்துவிடுவதற்குப் பெயர் மாற்றம் இல்லை.

இந்து - பார்ப்பனக் குரலில் ஒரு கம்யூனிஸ்ட்

சாகித்ய அகாடமி விருது பெற்ற இலக்கியவாதியும், சிறந்தகல்வியாளரும், பொதுவுடைமைவாதியு மான ஆயிஷா இரா.நடராசன் என்பவர்  ‘காந்தியக் கல்வியும் மெக்காலேவாதிகளும்’ என்ற தலைப்பில், 27.07.2017 ல் இந்து ஏட்டில் எழுதியள்ள கட்டுரையில், மெக்காலே பற்றிய பார்ப்பனவாதக் கோபத்தை அப்படியே வெளிப்படுத்தியுள்ளார். பிறப்பால் அவர் பார்ப்பனர் அல்லாதவராகவும் இருக்கலாம். மெக்காலே பற்றிய அவரது பார்வை, பார்ப்பன ஆதிக்கப் பார்வையாகவே உள்ளது. அது கம்யூனிச இயக்கங்களின் பார்வைதான் என்று யாராவது கூறினால், அந்த இயக்கங்கள் பார்ப்பன ஆதிக்கத்திற்கு உழைப்பவை என்பதற்கு இதுவும் ஒரு சான்று என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது.

மெக்காலே காலத்துக்கு முந்தைய பார்ப்பன - குருகுல - குலக்கல்வி முறையைத்தான் அந்தப் பொதுவுடைமைவாதி விரும்புகிறார். எனவேதான் மெக்காலே முறையை எதிர்க்கிறார். இதோ அவரே இந்து ஏட்டின் கட்டுரையில் வெளிப்படையாக அறிவித்துக்கொள்கிறார்.

“புதிய பாடத்திட்டத்தை முன்மொழிய கல்விக் குழுக்கள் அமைக்கப்பட்டு வல்லுநர்களின் கருத்துகளுக்காக தமிழ்நாடே காத்திருக்கிறது. இன்றைய சூழலில் முற்றிலும் மறக்கப்பட்டுவிட்ட காந்தி முன்மொழிந்த சர்வோதய சமுதாயக் கல்வி குறித்த ஆழமான அலசல் தேவை என்று தோன்றுகிறது. நம் கல்வி குறித்த விவாதங்கள் திரும்பத் திரும்ப அயல்நாட்டு நடைமுறைகளையே சுற்றி வருவதைவிட, நம்மிடமே இருக்கும் மாற்றுக்கல்வி நடைமுறைகளைப் பரிசீலிக்க இது உதவும்..

...1937 - ல் ‘ஹரிஜன்’ இதழில் நாட்டின் கல்வி குறித்து விரிவான ஒரு கட்டுரையை காந்தி எழுதினார். அதில் கல்விமுறையின் 10 பலவீனங்களைப் பட்டியலிட்டிருந்தார். (அதில் முதல் பலவீனம் என்று காந்தி கூறியது) நமது மரபுக்கும் பண்பாட்டுக்கும் முரண்பட்டதாக இந்த மெக்காலே குமாஸ்தா கல்வி உள்ளது.”

...இதற்கு மாற்றாக காந்தி முன்வைத்தது தனது சொந்த அனுபவங்களின் வழியே அவர் அடைந்த ஒரு கல்விமுறை. அதை ‘சர்வோதயக் கல்வி’ என்று அழைத்தார் காந்தி.… 1937-ல் வார்தாவில் காங்கிரஸின் கல்வி மாநாட்டை அக்டோபர் 22 மற்றும் 23-ம் தேதிகளில் கூட்டினார் காந்தி. அது இந்தியத் தேசியக் கல்வி மாநாடு என்று அழைக்கப்படுகிறது. கல்வியாளர் டாக்டர் ஜாகிர் ஹுசைன் (பின்னாட்களில் இந்திய குடியரசுத் தலைவர் ஆனவர்) தலைமையில் இந்தியக் கல்வி குறித்து முடிவுசெய்ய ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. ‘வார்தா கல்வித் திட்டம்’ அல்லது ‘ஆதாரக் கல்விக் கொள்கை’ அந்த கல்விக் குழுவால் பரிசீலித்து முன்மொழியப்பட்டது.

...காந்தியின் பெருமுயற்சியால் வார்தாவிலும் செகாவோனிலும் சர்வோதய மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. என்றாலும், விரைவில் அவை தோல்வியே கண்டன. மதபோதனை இல்லாத கல்வி என்பதால், இஸ்லாமிய மதரஸா கல்வியாளர்களும், சாதி பார்க்காத கல்வி என்பதால் இந்துத்துவவாதிகளும் காந்தியக் கல்வியை எதிர்த்தார்கள். ஆரம்பத்தில், காந்தியின் கொள்கைப் பிடிப்போடு செயல்படுவதுபோல ஈடுபாடு காட்டிய மெக்காலேவாதிகள் சர்வோதயப் பள்ளித் திட்டத்தைப் பகிரங்கமாகவே எதிர்த்தார்கள். வார்தா கல்விப் பிரகடனத்தைப் பரிசீலிப்போம்

...மாணவர்களை மாண்புமிக்கவர்களாக உருவாக்க முயன்ற வார்தா கல்விப் பிரகடனத்தையும் நம் தமிழகக் கல்விக் குழுக்கள் மனதில் கொள்ள வேண்டும்.”

இவ்வாறு ஆயிசா நடராசன் எழுதியுள்ளார். தமிழ் இந்து எட்டில் மட்டுமல்லாமல், தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் www.tnsf.co.in இணையதளத்திலும், மின்னம்  பலம் செய்தி இணையதளத்திலும் இதேபோல, மெக்காலேவுக்கு எதிராகவும், வார்தா கல்வித் திட்டத்தை ஆதரித்தும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இக்கருத்தை இடதுசாரிகளும் எதிர்ப்பார்கள் என்றும் கூறியுள்ளார். அப்படி வார்தா கல்வித் திட்டத்தை எதிர்க்கும் இடதுசாரிகள் இருந்தால் அவர்களை மனதாரப் பாராட்டுவோம்.

‘வார்தா கல்வித் திட்டம்’ என்பது வேறொன்றும் இல்லை. 1939 லும், பிறகு 1952 லும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இராஜாஜி பதவிக்கு வந்தபோதெல்லாம் நடைமுறைப்படுத்தித் தோல்வி கண்ட குலக்கல்வித் திட்டம் தான் அது.

1937 ல் காந்தி ‘ஹரிஜன்’ என்ற ஏட்டில் (31.07.1937) அந்த வார்தா கல்வித் திட்டம் குறித்து  விளக்கி எழுதினார். அன்றிலிருந்து அந்த வார்தாக்கல்வித்திட்டத்தைக் கடுமையாக எதிர்த்துக் களத்தில் இறங்கினார் தோழர் பெரியார். வார்தாக் கல்வித் திட்டத்தை பற்றி தோழர் பெரியார், பேசிய, எழுதியவை களைப் பார்ப்போம்.

வார்தா என்ற குலக்கல்வித் திட்டத்திற்கு எதிராகப் பெரியார்

 • “காந்தியார் விரும்பும் வார்தா கல்வித்திட்டம் அமுலுக்கு வந்து அவனவன் ஜாதித்தொழிலே அவனவனுக்கு கற்பிக்கப்படவேண்டும் என்கின்ற முறை ஆரம்பித்துவிட்டால் பதினென் குடி மக்கள் கதி அதோகதிதான் என்பதை எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. ஆகவே இந்த நிலையில் இருக்கும் இந்தியர்களில் முஸ்லீம்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இந்த பிறவியில் தீண்டாமையோ, இழிவோ ஒழிவது என்பது காந்தி ராஜ்யத்திலோ, காங்கரஸ் ராஜ்யத்திலோ சுலபத்தில் எதிர்பார்க்கக் கூடிய காரியமல்ல என்பதே நமதபிப்பிராயம்.” - தோழர் பெரியார் - குடி அரசு - 09.01.1938

 • “பழைய காலத்து அரசர்களோ ஆரிய ஆதிக்கத்திற்கே அடிமையாய் இருந்ததால் ஆரியர்கள் தவிர மற்றவர்கள் படிக்கக் கூடாது என்கிற ஆரியக் கொள்கையை அப்படியே காப்பாற்றிக் கொடுத்தவர்கள். அதனால் கல்வி பயிலுவதற்கு ஆரியர்களைத் தவிர மற்றவர்களுக்கு சிரத்தையேயில்லை. கடவுள்களே அரசாண்ட காலம் என்னும் ராமன் கிருஷ்ணன் காலத்திலும், அதன்பிறகு அரசாண்ட சேர, சோழ, பாண்டியர்கள் காலத்திலும் அதன் பிறகு பிரிந்து கிடந்த 56 தேச ஆட்சி இருந்த காலம் வரை பார்ப்பனர் தவிர மற்றவர்களுக்குக் கல்வியில்லை.

வேதத்தை உச்சரித்தால் நாக்கையறுக்க வேண்டும், கேட்டால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றவேண்டும், மனதில் இருத்தினால் நெஞ்சை பிளக்க வேண்டும் என்பன போன்ற கொடிய தண்டனைகள் விதிக்கப்பட்டன....

வெள்ளைக்காரர்கள் ஆட்சி வந்த பிறகுதான் படிக்கக் கூடாதென்ற சமூகங்கள் படிக்க முன் வந்தது; இப்படிப் படிக்க முன் வந்ததன் பயனாக தாழ்த்தப் பட்டவர்களாக இதுவரை இருந்தவர்களும் பிற்போக்காகவும், கொடுமைப் பட்டவர்களாகவும், இருந்து வருகிறவர்களும் படிக்க முன் வந்து உத்தியோகத்துக்கு போட்டிபோட ஆரம்பித்துவிட்டார்கள். இதைப்பார்த்த காங்கரஸ்காரர்கள் இதன் தலையில் கைவைக்க யுக்தி செய்து தந்திரமாக வார்தா கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து திணிக்கப் பார்க்கிறார்கள்.” - தோழர் பெரியார், குடி அரசு -06.02.1938

 • “தகப்பன் தொழிலை மகன் செய்யும்படியான கல்வியும் (வார்தா திட்டம்) சாஸ்திரங்களும் புராணங்களும் மனதில் பதியும்படி படிக்கத் தக்க பாஷையும் (ஹிந்தி) 26 உத்தியோகங்களில் 19 உத்தியோகம் பார்ப்பனர்க்கு கொடுக்கும் (மிருக வைத்திய டாக்டர் வேலை) ‘வகுப்புவாதமற்ற’ தன்மையும் 215 மெம்பர்கள் இருக்கத்தக்க சட்ட சபையில் (சென்னை) ஒரு மனிதர் சொல்கிறபடியே எல்லோரும் தலை வணங்க வேண்டும் என்கின்ற ‘ஜனநாயக சுதந்தரமும்’ ஏற்படுத்தத் தக்க, இருக்கத்தக்க ஆட்சியை கொண்டு வரவும் நிலைக்க வைக்கவும் தேசியவாதிகள் என்பவர்கள் பாடுபடுவதும் அதற்கு எதிரிடையானவர்களை தேசத்துரோகி வகுப்பு வாதி என்பதுமான காரியம் எதுவாயிருந்தாலும் அதை ஒழிக்க பாடுபடாமலோ அத் தொண்டில் உயிர்விடும் நிலை பெறாமலோ ஒரு வினாடியும் இரோம் என்பதை கண்டிப்பாய் தெரிவித்துவிட ஆசைப்படுகிறோம்.”-தோழர் பெரியார்,குடி அரசு - 20.02.1938

 • “பிரிட்டிஷ் அரசாங்கத்தால் உங்களுக்கு ஏற்பட்ட நன்மையும் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தால் ஏற்பட்ட நன்மையும் அடியோடு ஒழிந்து போகும்போல் இருக்கிறது. புதிய அரசியல் உங்கள் சமூகத்துக்கு எமனாய்த் தோன்றி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். உங்கள் கல்வி ஒழிந்தது என்று வைத்துக்கொள்ளுங்கள். வார்தா கல்வித் திட்டப்படி இனி உங்கள் ஜாதித் தொழில்கள் என்பவை புதிப்பிக்கப்படப் போகின்றன. அப்படியானால் உங்கள் தொழில் என்ன?” - தோழர் பெரியார், குடி அரசு -23.10.1938

 • “ஏதோ சில பார்ப்பனரல்லாத ஆசிரியர்களின் தன் மதிப்போடு விளங்கும் ஆசிரியர்களின் - பார்ப்பனரல்லாதார் உணர்ச்சியின் காரணமாய் சில பார்ப்பனரல்லாத பிள்ளைகள் கல்வி கற்று முன்னுக்கு வர மார்க்கம் இருந்து வருகிறது. இதை ஒழிக்கத்தான் இன்று “மகாத்மா” பட்டத்தை வேண்டாம் என்று கூறிக்கொள்ளும் பார்ப்பன தாசறாகிய தோழர் காந்தியார் வினோத திட்டமாகிய வார்தா திட்டத்தை உண்டு பண்ணியிருக்கிறார்.

வார்தா திட்டம் பார்ப்பனரல்லாத மக்களின் கல்வியின்மையை நிலைக்கச் செய்யவே அவனவன் தன்தன் குலத்தொழிலை செய்து பார்ப்பனர்களுக்கு உழைத்துப் போடவேண்டும். பார்ப்பனர்கள் மட்டும் பார்ப்பனரல்லாதார் உழைப்பில் கொழுக்க வேண்டும் என்று செய்யப்படும் சூழ்ச்சிதான் யென்று நாம் பன்முறை விளக்கியிருக்கிறோம்.” - தோழர் பெரியார்,குடி அரசு -30.10.1938

குலக்கல்வித் திட்டத்துக்கு எதிரான பெரியாரின் போராட்டங்கள்

இவையெல்லாம் வார்தா கல்வித் திட்டம் என்ற குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து, தோழர் பெரியார் பேசியவற்றில் ஒருசிலவரிகள் மட்டுமே. 1939 ல் இராஜாஜி இந்தத் திட்டத்தை அமல்படுத்திய போது கடுமையாக எதிர்த்தார் பெரியார். இராஜாஜி பதவி விலகியதைத் தொடர்ந்து அப்போதைக்கு இத்திட்டம் கைவிடப்பட்டது.

மீண்டும் 1952 ல் தமிழ்நாட்டு முதலமைச்சராக இராஜாஜி பதவியேற்றார். பதவியேற்றவுடன் கிராமப்புறங்களில் இருந்து 6000 தொடக்கப்பள்ளிகளை இழுத்துமூடினார். மீதியுள்ள பள்ளிகளில் பாதி நேரம் கல்வியும், மீதி நேரம் அவரவர் தமது ஜாதியின் குலத்தொழிலைச் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

 • “வர்ணாசிரமுறையை ஜனநாயகத்தின் பெயரால் நிலைநாட்ட முயற்சி செய்கிறார் இராஜாஜி, இதோ கடைசி சிகிச்சையாக கணபதி உருவ பொம்மையை உடைக்கும் போராட்டம்” என கணபதி உருவ பொம்மை உடைப்புப் போராட்டத்தை அறிவித்தார்.

 • 27.5.1953 ல் புத்தர் விழாவைக் கொண்டாடி அதன் இறுதியாக கணபதி உருவ பொம்மையை உடைத்து மண்ணோடு மண்ணாக்கி விடுங்கள், நானும் திருச்சியில் உடைப்பேன் என அறிவித்தார். திட்டமிட்டபடி விநாயகர் பொம்மை உடைப்புப் போராட்டம் நடைபெற்றது. சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் காவல்துறை கடுமையாக தடியடியை நடத்தியது.

 • 13.6.1953 ல் திராவிடர்கழக நிர்வாகக்குழு கூட்டியது. குலக்கல்வி எதிர்ப்புக்காக ஜுலை 14 முதல் சட்டசபை மறியல் போராட்டம் நடத்துவது என முடிவுசெய்யப்பட்டது. 20 தேதி முதல் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் மறியல் நடத்துவதென முடிவுசெய்யப்பட்டது.

 • சட்டசபை மறியல் தொடங்கிய நாளில் இருந்த அரசு போராளிகளை கடுமையாக ஒடுக்கியது. தி.மு.க வின் முக்கியத் தலைவர்கள் சிறைப்படுத்தப்பட்டனர். சென்னையில் மட்டும் தி.க தோழர்கள் 1700 பேர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி, கல்லக்குடி ஆகிய ஊர்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 தோழர்கள் வீரமரணம் அடைந்தனர். காவல்துறை தாக்குதலால் 50 தோழர்கள் படுகாயமுற்று மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டனர். 10 தோழர்கள் கை, கால்களை இழந்தனர். சென்னை நீங்கலாக தமிழ் நாட்டின் பிற பகுதிகளில் நடந்த மறியலில் 2450 திராவிடர் கழகத் தோழர்கள் சிறைப்படுத்தப்பட்டனர்.

 • ஆச்சாரியார் ஆட்சியின் துப்பாக்கிச்சூடுகளுக்கும், தாக்குதல்களுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்க 24.7.1953 ல் நாடெங்கும் கடையடைப்பும், வேலை நிறுத்தமும் நடத்தவேண்டுமென பெரியார் அறிவித்தார். திட்டமிட்டபடி போராட்டங்கள் நடைபெற்றன. முதலமைச்சர் இல்லமும் முற்றுகை இடப்பட்டது.

 • விநாயகர் உடைப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து கிருஷ்ணன் பொம்மை உடைப்புப் போராட்டத்தையும் அறிவிக்கப்போவதாக பெரியார் அறிவித்தார். ஆனால் அப்படி ஒரு போராட்டம் நடைபெறவில்லை.

 • 1953 டிசம்பர் 2 மற்றும் 3 தேதிகளில் மதுரையிலிருந்த, ஈரோட்டிலிருந்தும் குலக்கல்வி எதிர்ப்புப் பிரச்சாரப்படை கிளம்பும் என அறிவித்தார்.

 • 1954 ஜனவரி 24 இல் ஈரோட்டில் குலக்கல்வித்திட்ட எதிர்ப்பு மாநாடு கூட்டப்பட்டது. தொடர்ச்சி யாக தமிழ்நாடு முழுவதும் குலக்கல்வி எதிர்ப்பு மாநாடுகள் நடத்தப்பட்டன. பெட்ரோலும் தீப்பந்தமும் தயாராக இருக்கட்டும் என பெரியார் அறிவித்தார். கடும் போராட்டத்திற்கு மக்களைத் தயாரிக்கும் பரப்புரைகள் நாடுமுழுவதும் பரபரப்பாக வெகுவாக நடைபெற்றுவந்தன.

 • மார்ச்சில் நீடாமங்கலம் ஆறுமுகம் தலைமையில் நாகையில் இருந்து குலக்கல்வி எதிர்ப்புப் பிரச்சாரப்படை பயணத்தைத் தொடங்கியது. சென்னையை நோக்கிப் பயணம் தொடங்கியது. படை சென்னையை அடையும் முன்பே இராஜாஜி உடல்நலமில்லை எனக்கூறி பதவியிலிருந்து விலகினார். மார்ச் 30 இல் பதவிவிலகினார். ஏப்ரல் 14 இல் காமராசர் பொறுப்பேற்றார். ஏப்ரல் 18 ஆம் நாள் குலக்கல்வித்திட்டத்தை நீக்குவதாக அறிவிப்பு வெளியானது.

இப்படி தொடர்ச்சியாகக் கஉயிர்களைப் பலிகொடுத்துத்தான் குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்டது. அதை புதிய தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரில் மீண்டும் நடைமுறைப்படுத்த  ஆர்.எஸ்.எஸ் கும்பல் முடிவெடுத்திருக்கிறது.

ஆனால், ஆர்.எஸ்.எஸ் ஸின் புதிய தேசியக்கல்விக் கொள்கைக்கு மாற்றான கல்வி முறை என்ற பெயரில் மீண்டும் அதே வார்தா - குலக்கல்வித்திட்டத்தையேக் கொண்டு வர வேண்டும் என்று ஒரு கம்யூனிசவாதியே எழுவதும், பேசுவதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி அமைப்பான தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் அதை ஆமோதித்து இணையதளத்தில் வெளியிடுவதும் மிகவும் கண்டிக்கத்தக்கது.

புதிய கல்விக்கொள்கைக்கு எதிராகக் களத்தில் நிற்கும் தோழர் பிரின்ஸ் கஜேந்திரபாபு மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர், வார்தா – குலக்கல்வித் திட்டத்திற்கு ஆதரவான பார்ப்பனச் சார்புப் போக்கைத் தொடக்கத்திலேயே அழித்துவிட முயற்சி செய்யவேண்டும்.  இந்தியக் கம்யூனிஸ்ட்டுகளுக்கு மனுதர்மக் கம்யூனிஸ்ட்டுகள் என்றொரு பெயரும் உண்டு.  அதை உறுதிப்படுத்தவிடக்கூடாது எனத் தோழமையுடன் கூறுகிறோம்.

Pin It

திருச்சியிலிருந்து சென்னை செல்லும் நான்குவழிச்சாலையில் உள்ள இராமநத்தத்தில் இருந்து கடலூர் செல்லும் சாலையில் உள்ளது திட்டக்குடி எனும் ஊர். அந்த ஊரைத் தாண்டி 2 கி.மீ தொலைவில் இருக்கிறது தருமக்குடிக்காடு. இது திட்டக்குடித் தொகுதியைச் சேர்ந்தது.

அந்த ஊரில், திட்டக்குடி வைத்திநாதசாமி கோயிலுக்குட்பட்கோழியூர் வேணுகோபாலசாமி கோயிலுக்குச் சொந்தமாக 10 ஏக்கருக்கும் மேலான நிலங்கள் உள்ளன. அவற்றில் பல தலைமுறைகளாக பிள்ளைமார் ஜாதியைச் சேர்ந்த பூமிநாதன் என்பவரின் குடும்பம் பயிரிட்வருகிறது. பல தலை முறைகளாக அக்குடும்பத்தின் முன்னோர்கள் வசம் இக்கோவில் நிலங்கள் அனுபவத்தில் உள்ளன.

பூமிநாதனின் தாத்தாவான வரதராஜபெருமாள் காலத்தில், அவரது கட்டுப்பாட்டில் இருந்த இந்தக் கோவில் நிலத்தில்  பணியாற்றியவர் பொன்னன். பொன்னன் அருந்ததிய ஜாதியைச் சேர்ந்தவர். அவர், வரதராஜப்பெருமாளின் பண்ணையில் கொடுத்த உழைப்புக்குக்கூலியாகக் கிடைத்தது 64 செண்ட் நிலம். பொதுவாக அந்தக் காலங்களில் எதையும் பத்திரப்பதிவாகச் செய்வது கிடையாது. எனவே, அவரிடம் பணியாற்றிய பொன்னனுக்குக் கொடுத்த 64 செண்ட் நிலம் எழுத்தில் பதிவுசெய்யப்படவில்லை. அந்நிலத்தின் சர்வே எண்: 194 /2. நில அளவு:0.25.0 ஏர்ஸ் ஆகும். பொன்னனின் மறைவுக்குப் பிறகு அடுத்த தலைமுறையைக் கடந்து பொன்னனின் பேரன் சிவக்குமாருக்கு அந்த நிலம் வந்துள்ளது.

இதே பகுதியில் வசிக்கும் அலெக்சாண்டர், முத்துராஜ் ஆகியோர் இந்நிலத்தைக் கைப்பற்ற முயற்சி செய்துள்ளனர். இவர்கள் பறையர் ஜாதியைச் சேர்ந்தவர்கள். நிலத்தைக் கைப்பற்றும் முயற்சியில் இவர்கள், திட்டக்குடி இந்து அறநிலையத்துறையில் பணியாற்றிய ஆய்வாளர் சிவஞானம் என்பவர் மூலம் சிவக்குமாரின் பயன்பாட்டில் இருந்த 194/2 சர்வே எண்ணுள்ள நிலத்துக்கு போலியாக ஒரு வாடகை ரசீதைப் போட்டுக்கொண்டனர்.  2015 ஆம் ஆண்மார்ச் 9 ஆம் தேதி இந்தப் போலி ரசீது போடப்பட்டுள்ளது.

அந்தப் போலிவாடகை ரசீதை வைத்துக்கொண்டு, பல தலைமுறைகளாக அந்த நிலத்தில் வாழ்ந்துவந்த சிவக்குமார், மற்றும் சில அருந்ததியக் குடும்பங்களை அந்த நிலத்தை விட்வெளியேறு மாறு எச்சரித்து வந்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, ஒருநாள் இரவோஇரவாக, சிவக்குமாரின் நிலத்தில், அலெக்சாண்டரும் அவரது சகோதரரும், இருபத்தைந்து டிராக்டர்களில் குளத்து மண்ணைக் கொண்டுவந்து கொட்டியுள்ளார்கள். பள்ளமாக இருக்கும் அந்த இடத்தை மேபடுத்தியுள்ளார்கள். அதனைத் தடுத்து நிறுத்த வந்த சிவக்குமார் தரப்புக்கும் அலெக்ஸாண்டர் தரப்பினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

27.07.2017 ம் நாள் அந்த நிலத்தருகே நடந்த வாக்குவாதத்தில் அலெக்ஸாண்டரின் சகோதரர் முத்துராஜ் சிவக்குமாரைக் கிழே தள்ளிவிட்டுள்ளார். அலெக்சாண்டரும் அப்போது உடன் இருந்துள்ளார். கீழே விழுந்த சிவக்குமாருக்குத் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. அவரை அங்கிருந்து மீட்மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பிறகு மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் மருத்துவமனை, பிறகு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை பிரிவு எனத் தொடர்ந்து சிகிச்சை பெற்றும் - நான்கு நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிவக்குமாருக்கு இரண்மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்தத் தாக்குதல் திட்டக்குடி காவல்நிலையத்தில் குற்றஎண் 168 / 17 ல், ஐ.பி.சி 304- ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தாக்குதல் நடந்த உடன் அங்கு விரைந்த ஆதித்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் தோழர் நாகராசன், கடலூர் மாவட்டத் தலைவர் தோழர் பக்கிரி, திருப்பூர் பொறுப்பாளர் சோழன் ஆகியோர் உட்ப எண்ணற்ற ஆதித்தமிழர் பேரவையின் பொறுப்பாளர்களின் தொடர் முயற்சிக்குப் பிறகு, இந்த வழக்கு 302- பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டது.

சிவக்குமாரின் இறுதிநிகழ்வு மற்றும் வீரவணக்கப் பேரணியில் ஏராளமான ஆதித்தமிழர் பேரவைத் தோழர்கள் பங்கேற்றனர். காட்டாறுகுழு தோழர் தி.தாமரைக்கண்ணன், திட்டக்குடி த.நா.மா.லெ.க தோழர் குறள்நம்பி ஆகியோரும் பங்கேற்றனர்.

தாக்குதல் நடந்த நாளில் (27.07.2017) இருந்து இறுதி நிகழ்வுகள் (05.08.2017) வரை, தமிழ்நாட்டில் ஜாதி – தீண்டாமைகளுக்கு எதிராகக் களமிறங்கிக் கொண்டிருக்கும் பல அமைப்புகள் இந்தத் தாக்குதல் பற்றி எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை. கண்டுகொள்ளவே இல்லை என்பது, அப்பகுதி அருந்ததிய மக்களுக்குப் பெரும் அச்சத்தைக் கொடுத்திருக்கிறது.

இந்தக் கடலூர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பஞ்சமி நிலங்களாக  வழங்கப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழும் வன்னியர்கள் பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்துத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். அப்படி வன்னியர்களால் வைப்பற்றப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்கப் போராட வேண்டிய தோழர்கள், சமுதாயத்தில்  தங்களுக்குக் கீழே ஒடுக்கப்பட்டுள்ள அருந்ததிய மக்களின் சிறு சிறு வாழ்வாதாரங் களைப் பறிக்கத் துடிப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.

ஆதித்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் தோழர் நாகராசன் அவர்கள் காட்டாறு குழுவுடன் பகிர்ந்து கொண்செய்திகள்:

கடலூர் மாவட்டம் திட்டக்குடிக்கு அருகில் உள்ள தருமக்குடிகாபகுதியில் சுமார் 45 அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள வேணுகோபால்சாமி கோவிலுக்குச் சொந்தமான, அறங்காவல்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 64 செண்ட் நிலத்தை 70 ஆண்டுகளாக பராமரித்து வந்ததால் திரு.சிவக்குமார் அவர்களுடைய குடும்பத்தினருக்குத் தானமாக வழங்கியுள்ளனர். அதை அவர்கள் விவசாயத்திற்குப் பயன்படுத்தி வந்தனர்.

மூன்று தலைமுறைகளாக பயன்படுத்திய நிலத்தைச் சமீபத்தில் விடுதலைசிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த தொகுதிப் பொறுப்பாளர் அலெக்சாண்டர் என்பவரும் அவரது சகோதரரும் இணைந்து ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கத்துடனும், அதிகாரிகளின் துணையுடனும் தவறான பத்திரத்தைத் தயாரித்துள்ளனர். அந்தப் பத்திரம் தவறு என்பதைத் தொடர்ச்சியாக ஆட்சியரையும், காவல்துறை கண்காணிப்பாளரையும் அணுகி உறுதி செய்தோம்.

அந்தப் பத்திரம் போலியாக பெறப்பட்டது என்று சான்றும் அளித்தனர். இந்தச் சூழலில் கடந்த மாதம் 27 ந் தேதியன்று இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கத்தோ25 வண்டிகளில் மணலைக் கொண்டுவந்து அந்த இடத்தில் கொட்டும் போது அதை சிவக்குமார் அவர்கள் தடுக்க முயன்றபோது அலெக்சாண்டரும் அவரது தம்பியும் திட்டமிட்சிவக்குமாரை கொலை செய்யும் நோக்கத்தோதாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதில் பலத்த காயம் ஏற்பட்சிவக்குமாரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். மேல் சிகிச்சைக்காக பெரம்பலூருக்கும், பின்னர் திருச்சி அரசு மருத்துவமனைக்கும் எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு நான்கு நாட்கள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி கடந்த 2ம் தேதி சிவக்குமார் உயிரிழந்தார். இது தொடர்பாக, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையிலும் அவர் எந்த ஒரு அறிக்கையும் வெளியிடாமல் இருப்பது வருத்தமளிக்கிறது.  

சிவக்குமார் அவர்களின் குடும்பத்தைப் பாதுகாக்க அவரது மூன்று குழந்தைகளுக்கும், இரு பெண் குழந்தைகள் (10,  9 ம் வகுப்புகள்) 7ம் வகுப்பு படிக்கும் ஒரு ஆண் குழந்தை உட்பஅவர்களது கல்வி உதவியை உறுதி செய்கிறோம்.

கூடுதலாக இந்தக் குடும்பத்தின் பாதுகாப்புக்கான நிதியைத் திரட்டித் தருவதற்கான சில யுக்திகளை வகுத்துள்ளோம். இந்த ஊர் மக்களின் துணையுடன் அதையும் செய்து முடிப்போம். குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி ஒரு பெரிய ஆர்ப்பாட்டத்தை, ஜனநாயகப் போராட்டத்தை தலைவர் அதியமான் தலைமையில் நடத்த உள்ளோம். இந்தப் போராட்டத்திற்கு திருமாவளவன் அவர்களுக்கும் அழைப்பு விடுப்போம்.

Pin It

ambedkhar 450இந்தியத் துணைக் கண்டத்தில் பார்ப்பனியத்தை ஆட்டம் கான வைத்த தலைவர்கள் மிகச் சிலரே. அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள் கெளதம புத்தர், தோழர் அம்பேத்கர், தோழர் பெரியார் ஆகியோர் ஆவார்கள். இவர்களில் பார்ப்பனியத்தை அழித்துப் பெரு வெற்றி கண்புத்தரை அரவணைத்து அழித்துவிட்டார்கள்.

புத்தரின் நல்ல கருத்துக்களையெல்லாம் திருடி, தங்களுடையதாக மாற்றி விட்டார்கள். தோழர் அம்பேத்கரையும் தோழர் பெரியாரையும் அழிக்க முயற்சி செய்கிறார்கள். அதனுடைய வெளிப்பாஎேழுத்தாளர் ஜெயமோகனின் அம்பேத்கருக்கு எதிரான அவதூறு கட்டுரைகளை இந்துத்துவ ஆதரவு இதழான ‘தமிழினி’ இதழில் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே பார்ப்பன எழுத்தாளர் அருண்சோரி எழுதிய தோழர் அம்பேத்கர் பற்றிய நூலுக்கு திராவிடர் கழகத் தலைவர் தோழர் வீரமணி அவர்கள் விரிவான மறுப்பை நூலாக வெளியிட்டார். ஜெயமோகனின் புளுகல்களுக்கு தோழர் பிரபாகரன் அவர்கள் “அம்பேத்கரும் அவதூறுகளும்” என்ற தலைப்பில் மறுக்க முடியாத ஆதாரங்களுடன் பதிநான்கு தலைப்புகளில் கட்டுரைகளாகத் தொகுத்து வெளியிட்டுள்ளார். இந்த நூலை காட்டாறு வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

புளுகுவதையே தொழிலாகக் கொண்அதனை எழுத்துப்பணி எனச் சொல்லி, தங்கள் கருத்துக்கு எதிரானவர்களைப் பற்றி ஆதாரமில்லாத செய்திகளை வெளியிடுவதும் - அதற்கு மறுப்பு வந்தால் பதில் சொல்லாமல் இருப்பதும் ஜெயமோகனின் வழக்கமாகும்.

ஏற்கனவே தோழர் பெரியார் பற்றி அவருடைய இணையதளங்களில் தொடர்ந்து அவதூறாக எழுதிவந்தார். இதழியலாளர் சுகுணா திவாகர் அதற்குத் தக்க பதிலடி கொடுத்தார். ‘தடம்’ இதழில் நிலச்சீர்திருத்தம் பற்றி அவர் கூறிய புரட்டுகளுக்கு ‘காட்டாறு’ இதழில் தோழர் அதி அசுரன் பதில் கொடுத்தார்.

இந்துத்துவவாதிகளின் புரட்டல்கள்

பார்ப்பனர்கள் தங்களுடைய சமூக ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கு எந்த நிலைக்கும் செல்வார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்ேேதாழர் அம்பேத்கரை இந்துத்துவ ஆதரவாளராகக் காட்முயற்சிப்பதாகும்.

“நண்தின்னும் ஊருக்குப் போனால் நடுத்துண்எனக்கு” என்பதுதான் பார்ப்பனப்புத்தி. தன் வாழ்நாள் முழுவதும் இந்து மதத்தை எதிர்த்துப் போராடிய ஒரு தலைவரை, இந்து மதத்தின் அனைத்து புராண இதிகாசங்களை ஆய்வு செய்து அதன் ஜாதி வெறியை வெளிப்படுத்தி பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம் இவற்றிற்கெல்லாம் மூலமான மனுதர்மம் என அனைத்தையும் கற்று அவை எப்படியெல்லாம் ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை முன்வைக்கிறது என ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்திய தலைவரை எப்படி இந்துத்துவ சிமிளுக்குள் அடைக்க முயற்சி செய்கின்றனர்.  தோழர் பிரபாகரன் அவர்கள் 59 ம் பக்கத்தில் அழகாக தோலுரிக்கிறார்.

“அம்பேத்கரின் பெளத்த மதமாற்றம் பற்றிய இந்துத்துவவாதிகளின் மற்றொரு பொய்ப் பிரச்சாரம் அவர் மதம் மாறிய அக்டோபர் 14 ம் நாள் தசரா அல்லது விஜயதசமி நாள். எனவேதான் அதைத் தெரிவு செய்தார் என்பது” இந்தப் பொய்க்கு நூலாசிரியர் அடுத்த வரியிலே சரியான விளக்கத்தைப் பதிவு செய்கிறார் “ பெளத்த மரபின் அடிப்படையில் அக்டோபர் 14 என்பது புத்தரின் 2500 வது பிறந்தநாளும், பெளத்த மன்னரான அசோகரின் மதமாற்ற நாளும் ஆகும்”.

புத்தரின் பிறந்தநாளையும், அதனாலே அந்த நாளில் மதம் மாறிய மாமன்னர் அசோகர் மதம் மாறிய நாளையும் தேர்ந்தெடுத்து மதம் மாறிய நிகழ்ச்சியைக் கூதங்களுக்கு சாதகமாக மாற்றும் பார்ப்பன சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளவேண்டும். தோழர் அம்பேத்கருக்கு மட்டுமல்ல, இந்து மதத்தில் உள்ள ஜாதிய வேறுபாடுகளுக்கு எதிராக சமத்துவத்தைப் பேசிய பல பேரைத் தனதாக்கிக் கொண்டது இந்துமதம்.

வைகுண்டசாமி, வள்ளலார், நாராயணகுரு ஆகியோரை இன்று தனக்கானவர்களாக மாற்றி அவர்களைப் பின்பற்றும் மக்களை ஒரு குழப்பத்தில் ஆழ்த்தி, பார்ப்பனிய வளர்ச்சிக்குப் பயன் படுத்துகிறது இந்துமதம். மேலும் சமண மதத்தை பின்பற்றக் கூடியவர்களை வளைத்துப் போட்இன்றைக்கு ஜெயின் சமூகம்தான் இந்துத்துவத்தைப் பரப்புவதில் முன்னிலையில் இருக்கிறது. இந்து மதத்தில் 365 நாட்களும் ஏதாவது பண்டிகைகளும், நிகழ்ச்சிகளும் இருந்துகொண்இேருக்கும். அதற்கு மாற்றான நமக்கான விழாக்களும் இருக்கும். பொய் சொல்வதிலும் திரித்து கூறுவதிலும் வல்லவர்களான பார்ப்பனர்கள் தங்கள் சூழ்ச்சியைப் பயன்படுத்தி வென்றுவிடப் பார்க்கிறார்கள்.

இதை எப்படி முறியடிப்பது? தோழர் அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து பெளத்தம் மாறிய நாளன்று வெளியிட்22 முழக்கங்கள் அனைத்தும் இந்து மதத்திற்கு வைக்கப்பட்வெடிகுண்டுகள் ஆகும். அந்த முழக்கங்களை நாம் மக்களிடம் கொண்செல்ல வேண்டும். தோழர் பெரியாரைப் பற்றி யாரிடம் கேட்டாலும் இந்து மதத்தின் எதிரி, பார்ப்பனர்களின் எதிரி எனப் பதிந்துள்ளதைப் போல் தோழர் அம்பேத்கரின் இந்து மத எதிர்ப்பு கருத்துக்களையும், பார்ப்பன எதிர்ப்பு கருத்துக்களையும் மக்களிடம் கொண்சேர்க்க வேண்டும்.

தோழர் அம்பேத்கரை ஒரு சட்மேதையாக, பொருளாதார நிபுணராக மட்டும் காட்டாமல் ஆரியத்தை, அது கட்டமைத்த இந்து மதத்தை ஒழிக்க அவர் கூறிய கருத்துக்களையும் அவர் நடத்திய போராட்டங்களையும் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். தோழர் அம்பேத்கரின் பல்வேறு சிறப்புகளை மக்களிடம் பேசும் இயக்கங்கள் அவரின் இந்து - பார்ப்பன எதிர்ப்புக் கருத்துக்களை பேசுவதில்லை. இந்துக்கடவுள்களை வணங்கக் கூடாது என்றும் இந்துமத புராணங்களை, பண்டிகைகளைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்த மாபெரும் தலைவனை இந்து மதவெறிக்குள் கொண்டுவரும் போக்கிற்கு எதிராக நாம் அனைவரும் மக்களிடையே இந்து மத, பார்ப்பன எதிர்ப்பு பற்றி அம்பேத்கர் பேசியதையும் எழுதியதையும் கொண்செல்லாவிட்டால் இந்த ஆபத்து தொடரும்.

அம்பேத்கர் பிரிட்டிஷ் ஆதரவாளரா?  

பார்ப்பனர்கள் தங்களின் சமூக அதிகாரத்தை ஆட்டம் காண வைத்த தலைவர்கள் மீதெல்லாம் வைக்கப்படும் குற்றச்சாட்தான் பிரிட்டிஷ் ஆதரவாளர் என்பதாகும். காலத்திற்கு தகுந்தாற்போல் குற்றச்சாட்டுகளை மாற்றியும் கொள்வார்கள். இன்றைக்கு பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராகச் செயல்படுபவர்களை கிறித்துவ, இஸ்லாமிய மதங்களின் கைக்கூலி, பாகிஸ்தான் ஆதரவாளர் என பல குற்றச்சாட்வைப்பதைப் பார்க்கிறோம். பொதுவாகவே தேசியம் என்பது குறிபிட்சமூகம் மக்களைச் சுரண்டுவதற்கும், அதற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து விடாமல் பார்த்துக் கொள்வதற்கும் பயன்படும் வார்த்தையாகும். இந்திய சுதந்திரப் போராட்டம் என்பதும் பார்ப்பன ஆதிக்கத்தை தக்க வைக்க நடந்ததாகும்.

எனவே பிரிட்டிஷ் ஆதரவாளர் என்றோ, பாகிஸ்தான் ஆதரவாளர் என்றோ சொல்லிவிட்டால் வெகு மக்களின் கோபத்திற்கு ஆளாகி அன்னியப்பட்விடுவோமோ என்ற பயத்தில் நாம் மாறி விடுவோம் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்தியத் துணைக்கண்டத்தில் சமூக மாற்றத்திற்காக போராடிய பெரும் தலைவர்களான அம்பேத்கரும், பெரியாரும் ஒரு சேரவே இப்படிப்பட்ட விமர்சனங்களைச் சந்தித்தனர். அம்பேத்கர் அவர்கள் பிரிட்டிஷாரை பல இடங்களில் ஆதரித்தும் இருக்கிறார், எதிர்த்தும் இருக்கிறார். தங்களுடைய சமூக விடுதலைக்கு பிரிட்டிஷ் அரசிடம் தீர்வு இல்லாத போது அவர்களைக் கடுமையாக விமர்சிக்கிறார். அந்த விமர்சனங்களைத் தோழர் பிரபாகரன் அவர்கள் தக்க ஆதாரங்களுடன் மிகத் தெளிவாக பதிவு செய்துள்ளார்.

இந்த புத்தகத்தின் 72ம் பக்கத்தில் அம்பேத்கரின் மேற்கோளை எடுத்துக்காட்டி ஜெயமோகனின் சூழ்ச்சியை முறியடிக்கிறார், “தீண்டாமை பிரிட்டிஷ்காரர்களால் தோற்றுவிக்கப்படாமல் இருக்கலாம். ஆனால், அன்று ஆட்சி புரிந்த அரசு என்ற முறையில் தீண்டாமையை அகற்றுவது நிச்சயமாக அவர்களின் பொறுப்புதான்” எனக் கூறுகிறார். இதைவிடப் பல கடுமையான விமர்சனங்கள் கூபிரிட்டிஷ் அரசு மீது அம்பேத்கர் அவர் வைத்துள்ளதை இந்தக் கட்டுரையில் பல இடங்களில் மேற்கோளாக காட்டப்பட்டுள்ளது. மேலும் ஆங்கிலேய எதிர்ப்பாளராக அறியப்படும் காந்தி பல்வேறு நிலைகளில் பிரிட்டிஷ் ஆதரவு நிலை எடுத்ததையும் இந்த நூலில் விளக்குகிறார்.

இந்து மதத்தின் மிகக் கொடுமையான சட்டங்கள் புகுத்திய சமூக இழிவுகளையும், ஒடுக்குமுறை களையும் வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொண்டு, பார்ப்பன, சத்திரிய ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடக் கூடமுடியாமல் அடிமைப்பட்கிடந்த ஒரு சமூகத்தில் ஆங்கிலேய அரசு செய்த சமுக மாற்ற நடவடிக்கைகளால் சில நன்மைகள் நிகழும்போது அதை ஆதரிக்காமல் இருந்தால்தான் தவறு ஆகும்.

நூல் ஆசிரியர்: பா.பிரபாகரன்

நூல் கிடைக்குமிடம்: கருத்துப்பட்டறை, 2, முதல் தளம், நாகா வளாகம், திருநகர், மதுரை, செல்: 9842265884, விலை 100

Pin It

ஆரியர் வருகை என்ற சொல்லை நம்மில் பெரும்பாலானவர்கள் பாடப்புத்தகத்திலும், திராவிடர் இயக்கமேடைகளிலும், ஏடுகளிலும் கேட்டறிந்திருப்போம். எனக்கும் இந்தச்சொல் அப்படித்தான் அறிமுகமானது. கிட்டத்தட்ஏழாவது படிக்கும்போது ஆரியர் வருகை என்ற தலைப்பில் சமூக அறிவியல் பாடத்தில் ஒரு கட்டுரை இருந்தது.

அதில் ஆரியர்களின் பூர்வீகஉணவு என்று மாமிசத்தைக் குறிப்பிட்டிருந்தார்கள்.  எனக்கு ஒரு மிகப்பெரிய சந்தேகம் வந்தது. அதற்குக் காரணம் எங்கள்ஊரில் திராவிடர்கழகத் தோழர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். அவர்களின் மூலமாக ஆரியர் என்றால் பார்ப்பனர்களைக் குறிக்கும் என்று அறிந்திருந்தேன். ஆனால் எனக்கு மிக நன்றாகத் தெரியும் பார்ப்பனர்கள் மாமிசம் உண்ணமாட்டார்கள் என்று. அன்றுமாலையே என்னுடையஅப்பாவிடம்கேட்டேன்.

நான் : அப்பா, ஆரியர் என்றால் பார்ப்பனர்கள் தானே?

அப்பா : ஆம் அவர்கள்தான்.

நான்: ஆனால் என்னுடைய பாடப்புத்தகத்தில் ஆரியர்களின் பூர்வீகஉணவு மாமிசம் என்று போட்டிருக்குது? அதுசரியா? தவறா?

அப்பா: அதுசரிதான், அவர்கள் ஆடு, மாமேய்த்துக்கொண்இந்தியாவுக்கு வரும்போது அதைத்தான் உண்டார்கள். பிறகு மாறிவிட்டார்கள்.

பிறகு இந்தச் சிந்தனை வளர்ந்து கொண்டே இருந்தது. அதற்கு இரண்காரணங்கள்.

1.  எங்கள் ஊரில் பெரிய அக்ரஹாரம் ஒன்று இருந்தது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் எங்கள் மாவட்டத்திலேயே சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் பெரியது.

2. திராவிடர்கழகத் தோழர்களின் பிரச்சாரம்

நாளுக்குநாள் நான் அவர்களின் உருவம், பழக்கவழக்கங்கள், கல்விஅறிவு, சமுதாயஅந்தஸ்து ஆகிவற்றைச் சற்று உற்றுநோக்க ஆரம்பித்தேன். அதில் எனக்கு முதலாவதாகப்பட்டது அவர்களின் உருவம்தான்.  அதாவது சுமார் பத்தாயிரம்பேர் இருக்கக்கூடிய ஊரில் சிலநூறு பேராக இருக்கக்கூடிய பார்ப்பனர்கள் சற்றுவித்தியாசமாக இருந்தார்கள். அதில் முக்கியமாக

1. அவர்களில் 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் வெள்ளை நிறத்துடன் இருந்தார்கள். ஆனால் இதுவே பார்ப்பனரல்லாத மக்களில் 5 சதவிகிதத்துக்கும் குறைவானவர்ளே சற்று வெள்ளை நிறத்துடன் இருந்தார்கள்.

2.  பெரும்பாலான பார்ப்பனர்கள் நல்ல உயரத்துடன் சுமார் ஆறுஅடி வரை இருந்தார்கள். ஆனால் இதுவே பார்ப்பனரல்லாத மக்களில் குறைவான நபர்களே ஆறுஅடிக்கு அருகில் இருந்தார்கள்.

அதற்குஅடுத்தபடியாக, வடஇந்தியர்களைப் பற்றிய பார்வையில், சிறுவயதில் வடஇந்தியர்கள் எல்லோருமே சிவப்பாகவும் மற்றும் நல்ல உயரத்துடனும் இருப்பார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால், நான் சில ஆண்டுகள் வமற்றும் மேற்கு இந்தியாவில் தங்கியிருந்த போதுதான் தெரிந்தது தென்இந்தியா அல்லாத பகுதிகளில் வாழ்கிற மக்களிலும் அதிகமான நபர்கள் குறிப்பாகப் பிற்படுத்தப் பட்ட- தாழ்த்தப்பட்மக்கள் நம்மைப் போலவே சற்று கறுத்த மற்றும் நடுத்தரஉயரம் உடையவர் களாக இருக்கிறர்கள் என்று அறிந்தேன்.

(ஒப்பீட்டுஅளவில் இது தென்இந்திய மக்களுடன் சற்றுக்குறைவு) தமிழ்நாடுஅல்லாத பகுதிகளில் வாழும் மக்கள் தங்களின் பெயருக்குப் பின்னால் சாதிப்பெயரை இன்னும் பயன்படுத்து வதால் எனக்கு அவர்களின் வர்ணநிலையை அறிந்துகொள்வது சற்று எளிதாக இருந்தது.

ஆனால், இதுவே வடஇந்திய உயர்சாதியினர்களில் பெரும்பான்மையினர், பார்ப்பனர்கள், ஜாட், ராஜ்தூத், அகர்வால் போன்ற ஜாதியினர் சிவப்பு நிறத்துடனும் உயரமாகவும் இருந்தார்கள். தமிழ்நாட்டில் வாழும் பார்ப்பன உயர்சாதியினர் வெறும் 5 சதவிகிதம், ஆனால் ஒருசில வடமேற்கு இந்திய மாநிலங்களில் 20 – முதல் 35 சதம் வரை உயர்சாதியினர் உள்ளார்கள்.

அவர்கள்தான் அங்கு அனைத்துத்துறைகளிலும் (சினிமா, ஊடகம், அரசியல்) சுமார் 98 சதவிகிதம் ஆக்கிரமித்து உள்ளார்கள். ஆகையால்தான் நான் அப்படி சிறுவயதில் உணர்ந்தேன் என்று புரிந்து கொண்டேன்.

கால்டுவெல்லின் மொழிஆராய்ச்சி, ஹரப்பா - முஹஞ்சதாரோஆய்வுகள்

நான் மேலே குறிப்பட்கருத்தியலை என்னுடைய கல்லூரிக் காலங்களில் அறிந்த கால்டுவெல்லின் மொழி ஆராய்ச்சி, ஹரப்பா - முஹஞ்சதாரோ ஆய்வுகளுடன் ஒப்பிட்டுக் கொண்டேன். அதாவது 18 ஆம் நூற்றாண்டில் மேலைநாட்மொழியியல் அறிஞர்கள் கால்டுவெல் - எல்லீஸ் இருவரும் இந்தியமொழிகளை ஆராய்ந்து தமிழ் உள்பதென்னிந்திய மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியவை அல்ல. இவை அனைத்தும் சமஸ்கிருதத்தில் (இந்தோ-ஐரோப்பிய) இருந்து முற்றிலும் வேறுபட்டுத் தனித்தன்மையான ஒரு மூல (திராவிட) மொழியில் தோன்றியவை என்று தங்களின் ஆய்வு முடிவுகளைச் சமர்ப்பித்தார்கள்.

அதற்கு அடுத்தபடியாக ஹரப்பா - முஹஞ்சதாரோ பகுதிகளை ஆராய்ந்த மேலைநாட்தொல்லியல் ஆய்வாளர்கள் இந்தப்பகுதிகளில் சிலஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு (சுமார் மூவாயிரம் ஆண்டு) இங்கு வாழ்ந்தவர்கள் திராவிடர்கள் என்றும், சிந்துச்சமவெளி நாகரீகம் என்பதே திராவிநாகரீகம் தான் என்றும் தங்களுடைய ஆய்வில் கூறினார்கள். ஹரப்பா - முஹஞ்சதாரோ போன்ற பகுதிகள் தற்போது முறையே குஜராத் - பாகிஸ்தானில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரியர் இடப்பெயர்வு பற்றிய விவாதத்தைத் தீர்மானிக்கும் மரபணு

2017 ஜூன் 17 அன்று இந்து ஆங்கில நாளேட்டில் டோனி ஜோசப் அவர்களால் எழுதப்பட்ட How Genetics is settling the Aryan migration debate என்ற கட்டுரை எனது கவனத்தை ஈர்த்தது. இந்தக் கட்டுரையைப் படித்த பொழுது ஆரியர் வருகை பற்றி மேலும் பல அரிய தகவல்களை நாம் அறிந்து கொள்ள ஏதுவாக இருந்தது.

இந்தக் கட்டுரையானது மார்ச் மாதம் பேராசிரியர் மார்டின் ரிச்சர்ட் அவர்களின் தலைமையில் பதினாறு மரபணு அறிவியல் ஆய்வாளர்கள் தங்களுடைய ஆய்வுகளை “A genetic chronology for the Indian Subcontinent points to heavily sex-biased dispersals” (இந்தியத் துணைக்கண்டத்திற்கான ஒரு மரபியல் காலவரிசை, பாலியல் சார்புடைய பரவலைச் சுட்டிக்காட்டுகிறது) என்ற தலைப்பில் BMC Evolutionary Biology என்கிற பரிணாம  உயிரியல் சார்ந்த இதழில் வெளிவந்த  ஆய்வுகளைப் பற்றியதாக இருந்தது. அந்த ஆய்வு பற்றிய கட்டுரையை சற்று விரிவாக பார்போம்.

(குறிப்பு : ஆய்வாளர்கள் இந்த ஆய்வுக்காக சுமார் பதினாராயிரம் நபர்களுடைய மரபணுவை எடுத்து உள்ளார்கள், மேலும் அதில் இந்தியாவின் பல பகுதி மக்களும் அடங்குவர்.)

ஆரியர் வருகை என்பது உண்மைதானா?

ஆம் . ஆரியர்கள் சுமார் கிமு 1500 முதல் கிமு 2000 ஆண்டுகளில் மத்திய கிழக்கு ஆசியாவில் இருந்து இந்தியாவில் குடியேறி இருக்கலாம் என்கிறது இந்த ஆய்வு. அதாவது இந்தியாவில் உள்ள சுமார் 17 சதம் ஆண்களிடம் ஐரோப்பிய (ஆரிய) மக்களின் மரபணு உள்ளது .

அது என்ன குறிப்பாக ஆண் மரபணு(Y-DNA , transmitted only from father to son) ?  

ஏனென்றால் பொதுவாக மரபணு ஆராய்ச்சி என்றால் பெண் மரபணுவை ((mt DNA)  தான் அதிகம் எடுத்துக்கொள்வார்கள். அதன்படி இங்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் உள்ள பெண் மரபணுவை (mtDNA - materilineaDNA,  transmitted only from mother to daughter)  ஆராய்ந்ததில் சுமார் கடைசி பனிரெண்டாயிரம் ஆண்டுகள் குறிப்பிடத்தகுந்த அளவு எந்த ஒரு குடியேற்றம் / இனக் கலப்பு எதுவும் நடைபெறவில்லை என்றே ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.

பிறகு ரிச்சர்ட் தலைமையிலான குழு இந்தியாவில் உள்ள ஆண் மரபணுவை ஆராய்ந்த போதுதான் 17 சதம் இந்திய ஆண்களிடம்  R1a haplogroup எனப்படும் ஐரோப்பிய மரபணு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மேல்சொன்ன கால இடைவெளியில்(4000 years ago or  bronze age) இந்தியாவிற்கு வந்த ஆரியர்களில் மிகப் பெரும்பான்மையாக ஆண்களே இருந்தார்கள் என்பதாகும்.

R1 என்றால் என்ன ?

Pontic Caspian Steppe எனப்படும் பகுதியில் வாழ்ந்த மக்களிடம் இருந்து தோன்றிய ஆண் மரபணுவின் (Y-DNA) பெயர்.  Pontic Caspian Steppe எனப்படும் இந்தப் பகுதியானது கருங்கடலுக்கு வடக்கேயும், காஸ்பியன் கடலுக்குக் கிழக்கேயும், மேற்கு உக்ரேனில் இருந்து, தற்போதைய ரஷ்யாவில் உள்ள வோல்கா பெடரல் மாவட்டம் வரை உள்ள புல்வெளிப் பகுதியாகும். அதாவது  R1a என்பது ஆரிய  மூதாதையர்களின் ஆண் மரபணுவின் பெயர் என்றும் சொல்லலாம்.

R1a haplogroup என்றால் என்ன?

A haplogroup is a genetic population group of people who share a common ancestor on the patriline or the matriline, haplogroup என்பது ஒரு பொதுவான ஆண்அல்லது பெண் மூதாதையர்களின் மரபணுவை பகிர்ந்துகொள்கிற ஒரு மரபணு மக்கள் குழுமம் ஆகும். இதன்படி R1a haplogroup என்பது R1a என்ற ஆண் மூதாதையர்களின் மரபணுவைப் பகிர்ந்துகொள்கிற மரபணு மக்கள் குழுமம். அதாவது ஆரிய ஆண் மூதாதையர்களின் மரபணுவைப் பகிர்ந்து கொள்கிற மக்கள் குழுமம்.

உலகம் முழுவதிலும் செய்த மரபணு ஆராய்ச்சிபடி, இந்த R1a haplogroup, pontic caspian steppe எனப்படும் பகுதியில் இருந்து சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ச்சியாக, கிழக்கு, வடக்கு, தெற்கு என பல பகுதிகளுக்குப் பரவியுள்ளது. தற்போது இந்த மரபணுவானது ஐரோப்பா, மத்திய ஆசிய மற்றும் கிழக்காசிய நாடுகளில் பரவலாக உள்ளது.

R1a haplogroup ன் பிரிவுகள்

மூன்று வருடங்களுக்கு முன்பு டாக்டர் பீட்டர் அண்டர்ஹில் (Pete r A Underhill, Stanford University, Stanford , Department of Genetics, US) தலைமையிலானமுப்பத்தியிரண் ஆராய்ச்சியாளர்களைக் கொண்குழு, ஆசிய ஐரோப்பியக் கண்டத்தில் 126 பகுதிகளில் உள்ள பதினாறாயிரம் ஆண்களின் மரபணுக்களைச் சோதித்து, சு1ய மரபணுவின் பரவல் மற்றும் தொடர்பு பற்றிய ஆய்வு அறிக்கையைச் சமர்ப்பித்தது  (distribution and linkages of R1a) .

அதில்R1a haplogroup ன் இரண்பிரிவுகளாக  Z 282 and Z 93 என்கிற துணை  haplogroup  ஐக் கண்டறிந்தார்கள். அதில் Z 282 என்கிற துணை haplogroup ( sub-haplogroup)ஐரோப்பாவில் உள்ள மக்களிடம் மட்டும் உள்ளதென்றும், அதற்குஅடுத்தபடியாக உள்ள  Z 93 என்ற துணை haplogroup  ( sub-haplogroup) மத்திய மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் வாழும் மக்களில் உள்ளது என்றும் கண்டறிந் தார்கள். மேலும்  Z 93 ன் முக்கிய மூன்று பிரிவுகள் முறையே பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்திய மற்றும் இமாலயப் பகுதிகளில் உள்ள மக்களிடம் உள்ளதென்றும் கூறினார்கள். ஆகையால் இந்தியாவில் உள்ள ஆரியர்களின் மரபணு  Z 93 என்ற Sub-Haplogroup ஐ சார்ந்தது.

ஆரியர் ஆக்கிரமிப்பும் - சிந்துச்சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சியும்

ஆரியர் வருகையும் சிந்துச் சமவெளி நாகரீகத்தின் வீழ்ச்சியும் கிட்டத் தட்ஒரே கால கட்டத்தில் நடந்தனவா? ஆம் என்கிறது அறிவியல் ஆய்வுகள். இங்கு நாம் இரண்நிகழ்வுகளையும் இரு வேறு விதமான அறிவியல் ஆய்வுகளில் இருந்து அறியலாம்

1. சிந்துச் சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சி என்பது தொல்லியல் துறையின் ஆய்வுகளின் அடிப்படையில் குறிப்பாக ஹரப்பா முஹன்ஜதரா ஆய்வுகளில் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு (Bநவறநநே 1900 யனே 1700 Bஊ)  முன்பு அதன் அழிவு தொடங்கிற்று என்று அறியப்படுகிறது. அதாவது சிந்துச் சமவெளி நாகரிகத்தின் சிறப்புகளில் ஒன்றான நகர்ப்புற வாழ்வு அழிந்து, அங்கு வாழ்ந்த மக்கள் கிராம / நாட்டுப்புறப் பகுதிகளைநோக்கிஇடம்பெயர்ந்தார்கள்(னந-ரசயெைேணயவடிைே)

2. தோராயமாக Z 93 என்ற மரபணு வகை எப்போது தனக்குள்ளேயே சில பிளவுகளை உருவாக்கிக் கொண்டதோ - அப்போதுதான் ஆரியர்களின் வருகை சிந்துச் சமவெளி பகுதிகளில் நடந்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் பார்த்தால் அந்த நிகழ்வு சுமார் நாலாயிரம் ஆண்டுகளுக்குமுன்பு என்று மரபணு ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த இரண்வகை அறிவியல் ஆய்வுகளின்படி ஆரியர் வருகையும் சிந்துச் சமவெளி நாகரீகத்தின் வீழ்ச்சியும் கிட்டத்தட்ஒரேகால கட்டத்தில்தான் நடந்துள்ளது என்ற முடிவை அறிவியல் உலகம் சுட்டிக்காட்டுகிறது.

குறிப்பு: இங்குகவனிக்கப்பவேண்டியது என்னவென்றால் ஆரியர் வருகையால்தான் சிந்துச் சமவெளி அழிந்தது என்றோ அல்லது ஆரியர்கள்தான் சிந்துச் சமவெளி நாகரீகத்தைச் சண்டையிட்அழித்தார்கள் என்பதற்கான எந்த ஒரு அறிவியல் முகாந்திரம் எதுவும் இப்போது வரை கிடைக்கவில்லை.

ஆரியர் ஆக்கிரமிப்பால் வந்த கேடுகள்

உலகில் மனித இனத்தின் இடப்பெயர்வு என்பது தொடர்ந்து நடந்துகொண்இேருக்கின்ற ஒன்று. ஆகையால், வரலாற்றில் எந்த ஒரு இனமும் நூறு சதவீதம் சிறு கலப்பு கூஇல்லாமல் எந்த ஒரு நா/ பகுதி முழுவதும் வாழ்வது என்பது சாத்தியமற்றதாக உள்ளது.  

அதேபோல்தான் இந்தியாவிலும் ஆரியர் அல்லாத பல மனித இனக்குழுக்கள் வருகை புரிந்துள்ளனர். உதாரணமாக, சுமார் 55,000 முதல் 65,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் தான் பெரும்பான்மையான இந்திய மக்களின் மூதாதையர்கள் ஆவர்.  

அதன் பிறகு சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு (இந்த கால அளவு இன்னும் சரியாக உறுதிப் படுத்தப்படவில்லை) முன்பு மேற்கு ஆசியாவில் இருந்து குடியேறிய மக்கள் ஏற்கனவே இங்குள்ள மக்களிடம் கலந்து பல விவசாய யுத்திகளை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அதன் பிறகு வணிகம் சார்ந்தும் மற்ற பலவற்றிற்காகவும் பல இனக்குழுக்கள் வந்துள்ளார்கள்.

ஆனால், நம்மால் மற்ற இனக்குழுக்களின் வருகையைப் போல் ஆரியர் வருகையைப் பார்க்கமுடியாது. அதற்குக்காரணம் ஆரியர்கள் சமஸ்கிருதம் என்ற மொழியுடம் அன்றைய சிந்துச் சமவெளி மக்களுக்கு முற்றிலும் மாறுபட்பிறவி ஏற்றத்தாழ்வு கொண்ஒரு புது வகையிலான வாழ்க்கைமுறையைப் புகுத்தி உள்ளார்கள்.

ஆம், ஆரியர்கள் இந்தியத் துணைக்கண்டத்திற்கு வரவில்லையென்றால் இந்தியாவில் சாதி என்பதே இருந்திருக்காது என்று ஆய்வுகள் நமக்கு புரியவைக்கிறது. குறிப்பாக ஆரியர் வருகை புரிந்த காலமும் ‘ரிக் வேதம்’ தோன்றிய காலமும் கிட்டத்தட்ட ஒரே காலமாகும். ஆரியர்கள் வந்திருக்கா விட்டால், இந்தியாவும் மற்ற நாடுகளைப்போல் சாதி என்ற பிறவி ஏற்றத்தாழ்வு எதுவும் இல்லாத நாடாக இருந்திருக்கும்.

பார்ப்பனர் எதிர்ப்பு சரியா?

இன்றுவரை பலர் திராவிடர் இயக்கத்தின் மேல் வைக்கும் குற்றச்சாட்- பார்ப்பனர்களை எதிர்ப்பது பற்றி, அதாவது.

இந்தியாவில் எல்லோரும்தான் சாதி பார்க்கிறார்கள். ஆனால் நீங்கள் ஏன் சாதி ஒழிப்பு, சமத்துவம், பகுத்தறிவு பற்றிய பரப்புரைகளில் குறிப்பாக பார்ப்பனர்களை மட்டும் அதிகமாகத் தனிமைப்படுத்திப் பிரச்சாரம் செய்கிறீர்கள்?

ஆம். உண்மைதான். திராவிடர் இயக்கம் தான் இந்தியத்துணைக்கண்டத்தில் கடந்த ஒரு நூற்றாண்காலமாக மற்ற இயக்கங்களைவிபார்பனர்களை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருக்கிறது . அதற்குக்காரணம் ஆரியப்பார்ப்பனர்களின் ஆதிக்கத்திலிருந்து பார்ப்பனர் அல்லாத  திராவிமக்களை மீட்டெடுப்பதுதான்.

அதாவது, இன்றுவரை பெரும்பான்மையான பார்ப்பனர்கள் தங்களை ‘இந்து’ என்றோ, தமிழர்/தெலுங்கர் / மலையாளி / வங்காளி என்று உணர்வதைவிட, தங்களை ‘ஆரியர்’ என்றுதான் உணர்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை அனைத்துப் பார்ப்பனர்களும் தங்களைவெளிப்படையாகவே ‘ஆரியர்’ என்றுதான் அடையாளப்படுத்தி கொண்டார்கள்.

பிறகுதான், மாறிவரும் சூழலுக்கு ஏற்றபடி, தங்களையும் ‘இந்து’ என்று அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் அவர்கள் எந்த மாநிலத்தில் வாழ்ந்தாலும், எந்த ஒரு மொழி பேசினாலும் இந்தோ ஐரோப்பிய மொழியான - ஆரியர்களின் மொழியான சமஸ்கிருதத்தை மட்டுமே தங்களின் தாய் மொழியாக மனதார ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

அதன் காரணமாகவே மக்கள் பயன்பாட்டில் இல்லாத மொழியான சமஸ்கிருதத்தைத் தெய்வ பாசை, அறிவியில் மொழி என்றெல்லாம் முட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவாகவே இந்தியாவில் உள்ள திராவிமொழிகளில் கூதங்களின் சமஸ்கிருதத்தைத் தங்களால் முடிந்த அளவு பல நூற்றாண்காலமாகத் திணித்துள்ளார்கள். உதாராணமாக, இந்தியாவின் முதல் செயற்கைக்கோளுக்கு ‘ஆரியப்பட்டா’ என்று தங்களின் இனப்பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்கள்.

பார்ப்பன எதிப்பு இல்லாமல் இந்தியத் துணைக்கண்டத்தில் எந்த ஒரு சமத்துவ சமுதாய அல்லது சமுதாய மறுமலர்ச்சி சாத்தியமில்லை. அதற்கு உதாரணம். கிட்டத்தட்அரை நுற்றாண்காலத்தில் கறுப்பின விடுதலை என்பது அமெரிக்காவில் சாத்தியமாயிற்று. அதற்கு முக்கியக்காரணம் கறுப்பின மக்களின் போராட்டம் மட்டுமில்லாமல் அங்குள்ள வெள்ளை நிற மக்களில் பெரும்பான்மையினர் நிற அடிப்படையில் மனிதர்களிடம் பாகுபாபார்ப்பது தவறு என்று உணர்ந்ததும்தான்.

ஆனால் இங்கு நடப்பது வேறு. தோழர் பெரியார் அவர்கள் கூறுவது போல, இன்றுவரை  ஊரு ஊருக்கு இருக்கும் பார்ப்பனர்கள் தங்களின் வாழ்நாள் முழுவதும் எந்த ஒரு பெரிய சமுதாய மாற்றம் நிகழாமல், தங்களின் ஆதிக்கம் குறையாதபடி பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இறுதியாக, இந்த கட்டுரையின் நோக்கம் எந்த ஒரு மனித இனத்தையும் இரத்தப் பரிசோதனை அடிப்படையில் பிரித்துக் காட்டுவது அல்ல. மாறாக பார்ப்பனர் அல்லாத திராவிமக்களிடம் ஐரோப்பாவில் இருந்து, மத்திய ஆசியா - கைபர் போலன் கணவாய் வழியாக வந்த ஆரியக் கூட்டம்தான் நம்மில் பிறவி ஏற்றத்தாழ்வான சாதியைத் திணித்து, தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி உள்ளார்கள் என்பதை உணர்த்துவதுதான்.

 

Pin It