மனித மூளை பற்றி நாம் அறிவதெல்லாம் உலகிலேயே மிகவும் சிக்கலான ஓர் அசாத்தியமான அமைப்பு. அது நமது நரம்பு மண்டலத்தின் தலைமை கட்டுப்பாட்டு அமைப்பு என்றும் அதுதான் நமது உடலை கட்டுப்படுத்துகிறது என்றும் அறிவோம். (இதனை ஆங்கிலத்தில் The brain is the part of the central nervous system located in the skull. It controls the mental processes and physical actions of a human being.) ஆனால் இன்னும் நமக்கு நமது மனித மூளை பற்றி தெரியாத தகவல்கள் என்பதைவிட, அறியாத தகவல்கள் நிறைய உண்டு என்றும் கூறலாம்.

கேட்டால் சிறு அதிர்ச்சி ஏற்படும் என நினைக்கிறேன்.

மனித மூளை பற்றி முதன் முதலில் ஆராய்ந்தவர் கி.மு ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்த அரிஸ்டாட்டில். அவர் மூளை பற்றி கூறுகையில் 'இதயம் செலுத்தும் இரத்தத்தை குளிர்விக்கும் வேலையையே மூளை செய்கிறது' என்று நம்பினார்.

அடுத்து முதலாம் நூற்றாண்டில் மருத்துவர் அலெக்சான்றியன் என்பவர், மனித எண்ணமானது இதயத்தை விட மூளையாலேயே கட்டுபடுத்தப்படுகிறது என்று நம்பினார், மேலும் ரோமன் மருத்துவரான காலன் என்பவர் மிருகங்களின் ஆன்மாக்களின் அமைவிடம் தான் மூளை என்று வரையறுத்தார். அதாவது மனித மற்றும் விலங்குகளின் உயிர் மூளையில் தான் உள்ளது என்று கூறினார்.

மனித மூளை என்பதை ஆங்கிலத்தில் Brain என்றும் அழைக்கிறோமே? அது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா? The Brain என்ற சொல் Braegen என்ற லத்தீன் சொல்லிலிருந்து தோன்றியது. Braegen என்றால் தேவையற்ற சதைப் பிண்டம் என்று பொருள். ஆம் ஆங்கில மருத்துவம் மேற்குலகில் வளர்ந்த ஆரம்ப காலகட்டத்தில் மூளை பற்றி இப்படித்தான் நினைத்தார்கள், இது நமது உடலில் தேவையில்லாத உறுப்பு என்று.

ஆனால் இதன் முக்கியத்துவம் இரண்டு திருடர்கள் மற்றும் லியானார்டோ டாவின்சியால் தான் உலகிற்குத் தெரிய வந்தது என்றால் நம்புவீர்களா? ஆம் அதுதான் உண்மை.

நண்பர்களை சுமார் ஆறு நூற்றாண்டுகள் பின்னோக்கிப் பயணிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். சரியாக கி.பி. 1543ம் ஆண்டு. மேலை நாடுகள் முழுவதும் கிறித்துவம் ஆழமாக வேரூன்றி அரசு, அரசன் என அனைத்தும் கிறித்துவப் பாதிரியார்களான மதத்தலைவர்கள் கையில் தான் இருந்தது. அதனால் மத வழக்கப் படி இறந்த உடலைத் தோண்டுவதும், அதுபற்றி ஆராய்வதும் கொடூர குற்றம் ஆகும். அப்படி தடையை மீறி செய்தால் மரண தண்டனை தான். ஏனெனில் அவர்கள் தங்கள் மதக் கோட்பாடுகளையும், பைபிள் கட்டளைகளையும் மீறுவோரை, இவனுக்கு சாத்தான் பிடித்துள்ளது என்று கொடூரமான முறையில் கொன்றனர். இது கொலைக் குற்றமாக கருதப்பட‌வில்லை, பாவ மன்னிப்பு என்றே அனைவராலும் கருதப்பட்டது.

இந்த காலகட்டத்தில் ஒரு மருத்துவர் மனித உடல் பற்றி மிகவும் ரகசியமாக ஆராய்ந்து வந்தார், அவர்தான் பலதுறை வித்தகரான‌ லியானார்டோ டாவின்சி. இப்படிப்பட்ட மத நெருக்கடிகளால் அவரால் தனது ஆராய்ச்சியை தொடர்ந்து மேற்கொள்ள இயலவில்லை. இதே காலகட்டத்தில் பாதுகாப்பும் பலப்படுத்தப்ப‌ட்டதால் திருடர்களின் நிலையும் மிகவும் பரிதாபமாக ஆகிவிட்டது. அவர்களுக்கும் மரண தண்டனைதான் விதிக்கப்பட்டது.

இந்த நேரத்தில் தான் வேலை இழந்த அந்த இரு திருடர்களும், இந்த வித்தகரும் சந்தித்துக் கொண்டனர். இவர்களுக்குள் ஓர் ஒப்பந்தம், யாரையும் காட்டிக் கொடுக்கக் கூடாது. திருடர்களுக்கு அவர் தங்கம் போன்று பணம் கொடுக்க வேண்டும். இப்படிதான் இந்த கூட்டுக் களவாணிகளின் வேலை ஆரம்பமானது.

ஆரம்பத்தில் இந்த இரு திருடர்கள் டாவின்சிக்கு பணத்திற்காக‌‌ மட்டுமே வேலை செய்தனர். பின் அவ‌ரின் அர்ப்பணிப்பு உணர்வு கண்டு, இவர்களும் அவருக்கு உண்மையாக உதவினர். இவர்கள் ஒரு பிணத்தைத் திருடி வந்தால் அவர்களின் பெயர், முகவரி, அவர் எந்த வியாதிக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்பது போன்ற‌ பிணத்தின் அனைத்து தகவல்களும் இவர்கள் கொண்டுவந்து விடுவர்.

இந்த நிலையில் தான் ஒருவரது (பிணத்தின்) மண்டையோட்டின் உட்பகுதியை டாவின்சி பிளந்து பார்க்கும்போது அவரது இடப்புற மூளை அனைத்தும் சிதைந்து காணப்பட்டது. அவரது குறிப்பை பார்க்கும்போது அவருக்கு வலப்புறப் பக்கவாத நோய் இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

இது தான் மனித மூளையின் செயல்பாடு உலகில் வெளியான முதல் நிகழ்வு. இதன் பிறகுதான் உடலின் இயக்கத்திற்கும், மூளைக்கும் மாபெரும் தொடர்பு உள்ளது என்று அறிந்து இது பற்றிய முழு ஆராய்ச்சியில் மேலை நாட்டு மருத்துவர்கள் இறங்கினர்.

இதன் பிறகுதான் பல விசேஷங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தது நம்மை கட்டுப்படுத்தும் நம் மூளை பற்றி. அத்தனை கட்டுப்பாடுகளையும், தண்டனைகளையும் தாண்டி இப்படி உதவிய அந்த இரு திருடர்களுக்கும் லியானார்டோ டா வின்சிக்கும் நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்வோமாக!!!

உசாத்துணை:
ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகம்.
அறிவியல் இதழ்: The secret life of the BRAIN