Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

ஓட்டுநர்கள் கவனத்திற்கு

காலம் பொன் போன்றது என்பது பழமொழி. ஏனென்றால் சென்றால் வராது. அதேபோல் தான் உயிரும். தற்போதைய நிலவரப்படி சாலை விபத்தில் தான் அதிக உயிரிழப்பு ஏற்படுவது அனைவரும் அறிந்த ஒன்று. அதிலிருந்து உயிரிழப்பை எவ்வாறு தடுப்பது என்பதைப் பார்ப்போம்

நியூட்டன்

speed limitஎன்னடா எங்கேயோ கேட்ட பெயராக உள்ளது என்று யோசனை செய்கின்றீர்களா? பள்ளிகளில் பயின்ற எந்த வகுப்பு அறிவியல் புத்தகத்திலும் இவர் பெயர் காணலாம்.

இவருக்கும் விபத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? இருக்கிறது. அது எதுவென்றால் அதுவும் உங்களுக்குத் தெரியும்... அதாங்க இவருடைய மூன்று விதிகள்.

முதல் விதி:

நிலையாக இருக்கக்கூடிய ஒரு பொருள் மீது விசையை செலுத்தினால் அது இயக்க நிலைக்கு செல்லும். இயக்க நிலையில் இருக்கும் பொருள் அதன் மீது மற்றொறு எதிர் விசை செயல்படும் வரை தொடர்ந்து அதே இயக்க நிலையில் தான் இருக்கும்.

இரண்டாம் விதி:

விசையானது முடுக்கத்திற்கு நேர்தகவிலும் நிறைக்கு எதிர்தகவிலும் இருக்கும்.

மூன்றாம் விதி:

ஒவ்வொரு விசைக்கும் அதற்கு நிகரான எதிர்விசை உண்டு.

X என்ற ஒரு 20 வயது பையன் தன் அப்பாவிடம் எனக்கு 200 cc பைக்தான் வேண்டும் என்று அடம்பிடித்து உண்ணாவிரதம் இருந்து வாங்கிட்டான். அடுத்த கட்ட நடவடிக்கை high speed riding. அப்போது எதிர்பாராத விதமாக ஒரு விபத்து.

விபத்திற்கான காரணம்

1) அதிவேகம்

2) தலைக்கவசம் இல்லை

அவன் 100 kmphல் சென்று sudden brake போட்டு, எதிரே இருந்த சுவற்றின் மீது மோதியதில் அவன் உயிர் பரிபோனது என்றது காவல் துறை.

ஏன்?

இப்போது நியூட்டன் விதிகளுக்கு வருவோம்.

அவன் 100 ல் பைக்கை செலுத்தும் போது பைக் மட்டுமல்ல அவனுடைய உடலும் 100 Kmph என்ற இயக்கத்தில் தான் இருக்கும். உடனே அவன் Sudden brake போடும் போது Brakeன் உராய்வு விசையின் காரணமாக வாகனம் உடனடியாக ஓய்வு நிலைக்குத் திரும்பும். ஆனால் அவனது உடல் நியூட்டனின் முதல் விதிப்படி தொடர்ந்து 100 Kmph என்ற இயக்கத்திலேயே வாகனத்தை விட்டு வெளியே வீசப்படும்.

அப்படி வீசப்படும் அவன் உடல் மீது நியூட்டனின் இரண்டாம் விதிப்படி 1805 N என்ற அளவில் விசை செயல்பட்டு அதே அளவு விசையுடன் அவன் சுவற்றின் மீது மோதல் ஏற்படும்.

அப்போது மூன்றாம் விதிப்படி சுவரும் அவனது உடலின் மீது 1805 N என்ற அளவில் எதிர்விசையை செலுத்தும். புரியும் படி சொன்னால் 185 Kg உள்ள ஒரு பொருளை அவன் மீது வீசுவது போல் இருக்கும். அதனால் தான் ஓட்டுநர் உரிமம் பெற குறைந்தபட்சம் கல்வித் தகுதி வேண்டிய கட்டாயம் உள்ளது.

தீர்வு:

1) நிதானமாக செல்லுங்கள்..

2) தலைக் கவசம் அணியுங்கள்...

3) நான்கு சக்கர வாகனம் எனில், சீட் பெல்ட் அணியுங்கள்...

தலைக்கவசம், உங்கள் தலை மீது செயல்படும் எதிர் விசையை (நியூட்டனின் மூன்றாம் விதி) கட்டுப்படுத்தும்.

சீட் பெல்ட், உங்கள் மீது உருவாக்கப்படும் விசையை (நியூட்டனின் இரண்டாம் விதி) குறைக்கும்

எனவே... இன்றிலிருந்து இதைக் கடைபிடிப்போம்....

- ஷேக் அப்துல் காதர்

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

+1 #1 irfan 2016-03-29 20:54
நல்ல பதிவு
Thanks
Report to administrator
+1 #2 Vishal 2017-08-09 12:02
Super points
Thank you
Report to administrator

Add comment


Security code
Refresh