Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

tsunami

கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதியை உலக மக்கள் யாராலும் எளிதாக மறந்து விட முடியாது. அடுத்த நாள் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய கிருத்து பிறப்பு பண்டிகை கருப்பு தினமாகவே விடிந்தது. எங்கும் அழுகை ஓலங்களும் இழப்புகளும் மட்டுமே மிஞ்சி இருந்தன.

தற்போது வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது. அமெரிக்கா நினைத்தால் எவ்வளவு பெரிய சுனாமியை வேண்டும் என்றாலும் ஏற்படுத்த முடியுமாம். அமெரிக்காவிடம் அணு குண்டுகள் மட்டும்தான் இருக்கிறது என மூன்றாம் உலக நாடுகள் நினைத்துக் கொண்டிருக்கும் போது, நியூசிலாந்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான ரே வாரு ஒரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

1944ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அமெரிக்க கடற்படையினர் புராஜக்ட் சீல் என்று ஒன்றைத் துவங்கினார்கள். மிக ரகசியமாக நடந்து வந்த இந்த திட்டத்தின் அடிப்படையில் கடலுக்குள் குண்டுகள் போட்டு 33 அடி உயரத்திற்கு அலைகளை உருவாக்கி சுமார் 5 கிலோ மீட்டர் கடற்பகுதியை கடல் நீரைக் கொண்டே அழித்து விடலாம். இந்த திட்டத்தை 1950ம் ஆண்டில் நியூசிலாந்தின் நியூ கலிடோனியா மற்றும் ஆக்லாந்து ஆகிய கடற்பகுதிகளில் பரிசோதித்தும் பார்த்திருக்கிறார்கள். பரிசோதனையின் போது 3700 குண்டுகளை கடலுக்குள் வீசி உள்ளார்கள். இத்தகவலை பிரபல ஆங்கில பத்திரிக்கையான டெலிகிராப் வெளியிட்டு சர்வதேச அளவில் பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது. (sourse: http://www.telegraph.co.uk/news/worldnews/australiaandthepacific/newzealand/9774217/Tsunami-bomb-tested-off-New-Zealand-coast.html)

1944ம் ஆண்டு அவர்கள் கண்டு பிடிக்கும்போதே 5 கிலோ மீட்டர் அளவுக்கு சேதத்தை உருவாக்கியது என்றால் அதன் நவீன வளர்ச்சியை நினைக்கும் போது நமக்கு மூச்சு முட்டுகிறது. அமெரிக்கா நினைத்தால் இந்த உலகத்தில் எத்தனை சுனாமிகளை வேண்டும் என்றாலும் உருவாக்கி உலக நாடுகளை அழிக்க முடியும்.

உலக மக்களின் எதிரியான இந்த பயங்கரவாத நாடுதான் உலகத்தில் பயங்கரவாதிகளை தண்டிக்க வந்த தேவதூதர்களைப் போன்று உலக ஊடகங்களுக்கு முன்னால் காட்சி தருகிறார்கள். இந்த மீட்பர்கள் ஏழை நாடுகளிலும் இந்தியா உட்பட மூன்றாம் உலக நாடுகளிலும் ஏற்படுத்திய இழப்புகளை எத்தனை ஐ.எஸ் இயக்கங்களாலும் சாதிக்க முடியாது. உலகின் முதன்மை பயங்கரவாதியான அமெரிக்காவுடன் கை குலுக்கும் அனைத்து நாட்டுத் தலைவர்களும் அமெரிக்காவின் பிச்சைக்காரர்களாகவே பாவிக்கப்படுகிறார்கள்......அமெரிக்கா என்ற இந்த பயங்கரவாதியிடமிருந்து வல்லரசு சக்தி பறிக்கப்படும் நாள் என்று வருகிறதோ அன்றுதான் உலக மக்கள் பெரும் துன்பத்தில் இருந்து மீட்கப்படுவார்கள்....

- ஷாகுல் ஹமீது

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 நாற்று 2015-08-27 13:56
எப்படிரா இப்படி டிசைன் டிசைனா பொய் சொல்றிங்க.
Report to administrator
0 #2 சரவணன் கா 2015-09-14 15:30
உண்மை தான் அய்யா.. இதை பற்றி நானும் படித்திருக்கிறேன்...
சுனாமி மட்டும் அல்ல, நில நடுக்கம், எரிமலை என எல்லா வகை இயற்கை சீற்றங்களை செயற்க்கையாக உருவாக்கும் கருவிகளை கண்டுப்பிடிச்சி ட்டு வராங்க...

அமேரிக்கா தலைமையில் 18 நாடுகள் இதில் அடக்கம். "நாங்களும் எவ்வலொ நாள் தான் குண்டு போட்டே மக்கள கொல்லுறது" இப்படி இயற்கை சீற்றத்தால கொன்றால் யாருக்கும் சந்தேகம் வராது பாருங்க... திருட்டு பசங்க.. எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க.. இது எல்லாம் "New World Order" எனப்படும் உலக மக்கள் தொகையை குறைக்கும் ஒரு திட்டதின் பிரதிபலிப்பு...

அய்யா "நாற்று", துயரம் உங்களுக்கும் நடக்கும் பொழுது தான் அது புரியும்...
ஒரு இசுலாமிய பெயர் வைத்துக் கொண்டு அமேரிக்காவ பத்தி பேசினா அப்படியே பொங்கிடுவீங்களே .. googleல "human made tsunami" அப்படினு தேடி பாருங்க.. இவர் கொடுத்திருப்பதை விட பல தகவல் கிடைக்கும்.. எல்லாம், நம்ப இங்க அவனுங்கலோட சொப்பு, பேஸ்ட்டு, ஷாம்ப்பு, காரு, சட்டனு வாங்குரோம்ல.. அந்த காசு வச்சி தான் இதேல்லாம் நடக்குது...
Report to administrator
+1 #3 இ.பு.ஞானப்பிரகாசன் 2015-10-08 16:59
உண்மையிலேயே மிகவும் திகைப்புக்குரிய தகவல்!

//அமெரிக்கா என்ற இந்த பயங்கரவாதியிடமி ருந்து வல்லரசு சக்தி பறிக்கப்படும் நாள் என்று வருகிறதோ அன்றுதான் உலக மக்கள் பெரும் துன்பத்தில் இருந்து மீட்கப்படுவார்க ள்// - இந்த வார்த்தைகள் இந்தியாவுக்கும் பொருந்தும்!
Report to administrator

Add comment


Security code
Refresh