வெல்க்குரோ விளைவின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டது வெல்க்குரோ ஜிப். நம் அன்றாட வாழ்வில் வெல்க்குரோ ஜிப்பினை நாம் பலபொருட்களில் பயன்படுத்துகின்றோம். இதில் ஒரு பக்கம் குட்டி குட்டி வளையங்களையும் எதிர்ப்பக்கம் பிளாஸ்டிக்கிலான கொக்கிகளையும் கொண்டுள்ளது. வளையமும் கொக்கியும் ஒன்றையொன்று அழுத்தும் போது இணைந்து சிக்கிக் கொள்கிறது. பின்னர் அவற்றை இழுக்கும் போது பிரிந்து விடுகின்றது. கைப்பைகள், காலணிப்பட்டை, புத்தகப்பை, கோப்புகள், கேமரா உறை எனப் பல பொருள்களிலும் இணைப்பானாக வெல்க்குரோ ஜிப் பயன்படுகிறது.

ஜார்ஜெஸ் டீ மெஸ்ட்ரால் என்ற பிரெஞ்சு என்ஜினீயர் காட்டுப்பகுதியில் நடந்துச் சென்றபோது தனது கால்சட்டையில் ஒரு வித செடியின் முள்ளும் விதையும் ஒட்டியதன் அடிப்படையில் தற்செயலாக வெல்க்குரோ ஜிப்பினை கண்டுபிடித்து 1957ல் காப்புரிமை பெற்றார்.