நாம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்துகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.  அதில் ‘கீற்றில் நீங்கள் விரும்பிப் படிக்கும் பகுதி’ எனக் கொடுத்து 1. கட்டுரைகள், 2. நேர்காணல்கள், 3. கவிதைகள், 4. துணுக்குகள் என நான்கு வாய்ப்புகளைக் கொடுக்க விரும்புகிறோம்.  இது போன்ற நேரத்தில் பயனர்களிடம் இருந்து உள்ளீடுகளைப் பெறுவதற்கு இந்த நான்கு வாய்ப்புகளும் உள்ள பட்டியல் ஒன்று தேவைப்படும்.  இதை எப்படி எக்செலில் செய்வது என்று பார்ப்போம். முதலில் தேவையான கட்டத்தில் சுட்டியை வைத்துக்கொள்ளுங்கள்.

எக்செல் 2003: ‘Data -> Validation’ என்பதைத் தேர்ந்தெடுக்கும் பொழுது ஒரு மேல்மீட்புப்பெட்டி வரும்.

எக்செல் 2007:  ‘Data’ என்னும் பட்டியைத் தேர்ந்து கொள்ளுங்கள்.  படத்தில் உள்ளது போல் ‘Data Validation -> Data Validation’ என்பதைத் தேர்ந்து கொள்ளுங்கள்.

இப்போது வரும் மேல் மீட்புப் பெட்டியில் ‘Settings’ பக்கத்தில் ‘Allow’ என்னும் கீழிறங்கு பட்டியலில் ‘List’ என்பதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.   பின்னர் ‘Source’ பெட்டியில் 1. கட்டுரைகள், 2. நேர்காணல்கள், 3. கவிதைகள், 4. துணுக்குகள் என நான்கு வாய்ப்புகளைக்  கொடுத்து விடுங்கள்.  ‘Ok’ பொத்தானைச் சொடுக்க, நம்முடைய தேவை நிறைவடைந்தது.   இப்போது சுட்டி இருக்கும் கட்டத்தில் சொடுக்க, வலப்புறம் ஒரு முக்கோணக்குறி தெரியும்.  அதைச் சொடுக்குங்கள்.  நம்முடைய பட்டியல் தெரியும். 

Pin It