ஆம் தவறுதான். அமெரிக்கா போன்ற குளிர்ப் பிரதேச நாடுகளில் பொருட்கள் பல நாட்கள் ஃப்ரெஷ்ஷாக இருக்கும். நம் நாட்டின் வெப்பநிலை அப்படி இல்லை. நாம் சந்தையி வாங்கும் காய்கறிகள் ஏற்கனவே நான்கைந்து நாட்கள் முதல் ஒரு வாரம் வரை பழசானவையாகத்தான் வருகின்றன. நாம் வாங்கும்போதே அவற்றிலுள்ள சத்துக்கள் பாதி அழிந்திருக்கும். எனவே வாங்கிய அன்றோ அதிகபட்சம் மறுநாள் வரையோ (ஃபிரிஜ்ஜில்) வைத்திருந்து சமைப்பதுதான் நல்லது. 10 நாட்கள் கழித்து சமைப்பது நல்லதல்ல. அதேபோல் சமைத்த பொருட்களை ஃபிரிஜ்ஜில் வைத்து திரும்பத் திரும்பச் சூடுபண்ணினால் அதிலுள்ள சத்துக்களும் அழிவதோடு, சுவையும் குறைந்துவிடும். தொடர்ந்து பழைய பாலையே சாப்பிடுவதால் ஜீரணக் கோளாறு, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

Pin It