Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

நிறைய வீடுகளில் கொசுக்களை விரட்ட கெமிக்கல்கள் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு அத்தகைய கொசு விரட்டிகளை பயன்படுத்துவதால், சருமம் மற்றும் கண்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, நுரையீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அத்தகைய கேடுகள் விளைவிக்கும் கெமிக்கல் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துவதை விட, வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்து கொசுக்களை விரட்டலாம். இதனால் கொசுக்கள் அழிவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அத்தகைய வீட்டு கொசு விரட்டிகள் என்னவென்று பார்ப்போமா!!!

இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட...

தேங்காய் நார்: தேங்காய் உடலுக்கு மட்டும் நன்மை தராமல், வீட்டில் பல செயல்களுக்கும் பயன்பட்டு நன்மை தருகிறது. எப்படியென்றால் தேங்காய் நார்கள், வீட்டில் பாத்திரங்களை கழுவுவதற்கு பயன்படுவதோடு, வீட்டில் இருக்கும் கொசுக்களை விரட்டவும் பயன்படுகிறது. எவ்வாறென்றால், இந்த காய்ந்த தேங்காய் நார்களை எரித்தால், அதில் இருந்து வரும் புகை கொசுக்களை எளிதில் விரட்டிவிடும். தற்போது தேங்காய் நார்கள் கூட கடைகளில் விற்கப்படுகிறது.

ஆகவே அந்த நார்களை வாங்கி வந்து, மாலை நேரத்தில் நார்களை நெருப்பில் காட்டி, அனைத்து ரூம்களுக்கும் அந்த புகையை காண்பித்து, சிறிது நேரம் கழித்து பாருங்கள், ஒரு கொசு கூட வீட்டில் இருக்காது. இந்த புகையால் உடலுக்கு பாதிப்பு வராதா? என்று கேட்கலாம். இயற்கை நார்களில் இருந்து ஏற்படுத்தும் புகையால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

கற்பூரம் : கொசுக்கள் அழிவதற்கு முக்கியமான பொருள், சல்பர். இந்த சல்பர் எங்கு இருந்தாலும், கொசுக்கள் வெளியில் தான் இருக்கும். கற்பூரம் இந்த சல்பரினால் ஆனது. ஆனால், ஒரு பிரச்சனை என்னவென்றால், கற்பூரத்தை காற்றில் வைத்தால், அது உடனே கரைந்துவிடும். ஆகவே இந்த கற்பூரத்தை ஒரு தட்டில் வைத்து, எரித்து வீட்டைச் சுற்றி காண்பித்தால், கொசுக்கள் அந்த வாசனைக்கு வராது. இல்லையென்றால், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அதில் கற்பூரத்தைப் போட்டு வைத்தால், அதில் இருந்து வரும் வாசனைக்கு கொசுக்கள் வீட்டை எட்டிக் கூட பார்க்காது.

கெரோசின் மற்றும் கற்பூரம் : இந்த இரண்டுமே மிகவும் சிறந்த, கொசுக்களை அழிக்க வல்ல பொருட்கள் ஆகும். அதற்கு கொசுக்களை அழிக்க கடைகளில் விற்கும் மிசின்களில் உள்ள காலி டப்பாவில், கெரோசினை விட்டு, அதில் சிறிது கற்பூரத்தை விட்டு, மின்சார பிளக்கில் மாட்டி விட வேண்டும். இதனால் கொசுக்கள் வீட்டில் வராமல் இருப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கு எந்த கெடுதலும் ஏற்படாமல் இருக்கும்.

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

+1 #1 Warrant Balaw - Law Researcher 2012-09-13 16:07
மனித குலத்தின் ஆணவத்தை அடக்க இயற்கையால் படைக்கப்பட்டு அனுப்பபட்டதே கொசு!

ஆம்! மனிதன் அனைத்து உயிரினங்களையும் பிடிக்க வலை விரிக்கிறான். ஆனால், கொசுவுக்கு பயந்து தானே வலைக்குள் புகுந்து கொள்கிறான்.

இந்த மாதிரி கொசுவுக்கு பயந்து வலையில் அடைபடாமல் சுதந்திரமாக இருக்க தேவையான பதிவு. இதில் விடுபட்டுள்ள கூடுதல் விவரங்களையும் தெரிந்து செய்து பாருங்கள்.

நிழலில் நன்றாகவோ அல்லது ஓரளவிற்கு காய்ந்த வேப்பந்தழைகளை அல்லது நொச்சித் தழைகளை அல்லது தைல மர தலைகளை பயன்படுத்தி புகை வரும்படி மூட்டம் போடலாம்.

வாசனை மிக்க ஊதுவத்திகளை கொளுத்தி வைத்தும் கொசுக்களை விரட்டலாம். கொட்டாங்குச்சி என்று சொல்லப்படும் காய்ந்த தேங்காய் ஓட்டில் நெருப்பை உண்டாக்கி, அதில் சாம்பிராணியைப் போட்டு புகை உண்டாக்கினாலும் கொசுக்கள் ஓடிவிடும்.

வாரத்திற்கு ஒருமுறை பினாயிலைக் கொண்டு வீட்டின் தரைகளை சுத்தம் செய்தாலே, பாதி கொசுக்கள் பறந்து விடும்.
Report to administrator
0 #2 Sakthi 2012-09-21 22:44
மிகவும் நன்றி!!!!!!
Report to administrator
0 #3 jasmine 2013-02-04 21:00
தினமும் பினாயிலைக் கொண்டு வீட்டின் தரைகளை சுத்தம் செய்கிரென் ஆனால் கொசு போன படிட்ல்லை
சம்பிரனி தினாமும் போடுகிரேன்
Report to administrator
0 #4 Rathi Devi 2013-02-20 18:31
நான் எங்கள் வீட்டை மிகவும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்கிறேன ்.ஆனாலும் எங்கள் வீட்டில் கொசுக்கள் வர தான் செய்கின்றன.எங்க ள் வீட்டை சுற்றிலும் செடிகள் இருக்கின்றன.என் ன செய்வது...?
Report to administrator

Add comment


Security code
Refresh