முருகைக்கற் பாறைகள்:

 

 

KUiff;fw; ghiwfs;, madkz;ly kiof;fhLfs; Gw;wiufs; kw;Wk; /3 gq;F kPd;fs; ,r; #oy; njhFjpapNyNa fhzg;gLfpd;wJ. KUiff;fw;ghiwfs; 23° c 25 °c ntg;gepiyapYs;s cah; cg;G nrwpTs;s cah; xspr; nrwpTs;s mjpf miy mbg;Gs;s fly;ePu; nfhz;l ,lq;fspy; ed;F tsu;fpd;wd. cyfpy; 60000 rJu iky; gug;gpy; gue;Js;s ,it kpfTk; ke;jkhd tsUk; jpwd; cilait MFk;. tUlk; xd;wpw;F 2cm - 20cm tiu klLNk ,it tsuf;$ait. cyfshtpauPjpapy; 4000w;Fk; Nkw;gl;l ,dq;fs; fhzg;gLtJld; 60 rjtPjkhdit ,e;J rKj;jpuj;jpNyNa fhzg;gLfpd;wd. %d;W tpjkhd KUiffw; ghiwfs; cs;sd

1.விளிம்பு முருகைகற்பாறைகள் (Fringing reefs)

 

2.தடுப்பு முருகைகற்பாறைகள் (Barrier reefs)

3.முருகைகற்றீவுகள் (Atoll)

விளிம்பு முருகைகற்பாறைகள் கரையிலிருந்து ½ km தூரம் வரை வியாபித்திருக்கும். இவை அளவில் சிறியவை. கூடுதலாக அயனக் கரையோரங்களில் விருத்தி பெற்று காணப்படுகின்றன. செங்கடல் பகுதியில் 4000km நீளத்திற்கு பரந்து காணப்படுகின்றது. தடுப்புக்கற்பாறைகள் பெரியவை. கரையோரத்திலிருந்து 100km தூரம் வரையும் காணப்படும். இத்தகைய பாறைகள் அவுஸ்ரேலியாவின் வடகிழக்கு கரையோரமாகக் காணப்படுகின்றன. இலங்கையில் கிக்கடுவை பிரதேசத்திலும் இவை காணப்படுகின்றன. 50km ஆழம்வரை வியாபித்திருக்கும் இவை களப்புக்களால் பிரிக்கப்பட்டிருக்கும். வுங்காலி, சிலாவத்துறை போன்ற இடங்களிலும் காணப்படுகின்றது. முருகைகற்றீவுகள் நிலப்பகுதியிலிருந்து மிகவும் தூரத்தில் அமைவு பெற்றிருப்பதுடன் ஆயிரக்கணக்கான மீற்றர் ஆழத்திலிருந்து எழுச்சியடைந்திருக்கும். முருகைகற்றீவுகள் இந்திய மேற்கு சமுத்திரப்பகுதியில் அதிகம் காணப்படுகின்றன. மேலும் மாலைதீவிலுள்ள Suvadiva, மத்திய பசுபிக்கில் அமைந்துள்ள மார்ஸல் தீவுகளில் ஒன்றான Kwajalein பகுதிகளிலும் காணப்படுகின்றது. இவற்றைச் சுற்றி நிலப்பகுதிகள் காணப்படாது. மக்கள் வாழ்க்கைக்கு உகந்ததாகவும் காணப்படுகின்றது.

முருகைக்கற்பாறைகள் கல்சியம் காபனேற்றால் ஆக்கப்பட்டிருக்கும். இவை கல்முருகைகற்களாகும் (Stony corals). இவை தவிர மென் முருகைக்கற்களும் (Soft corals) காணப்படுகின்றன். முருகைகற்பார் வாழிடங்களில் கடல் விசிறி sea fans), sea whips போன்ற Cnidraianகளும் Cowries, கருநீலச்சிப்பி (Mussels), சிப்பி (Clams), Cone shells, மீன்கள் போன்றனவும் வேறுபல உயிரினங்களும் காணப்படுகின்றன.

இலங்கையில் 68 வேறுபட்ட சாதிகளுக்குரிய 171 இனத்தைச் சேர்ந்த முருகைகற் பாறைகள் காணப்படுகின்றது. இவற்றுடன் தொடர்புடைய கடல்வாழ் பச்சை அல்காக்கள், கபில அல்காக்கள், சிவப்பு அல்காக்கள் வாழகின்றன. 350 ற்கும் மேற்பட்ட மீனினங்கள், கடற்கரைக்குரிய அலங்கார மீனினங்கள், பல்வேறு நிறங்களைக் கொண்ட கடல் புக்கள், பல்வேறு Mollusca விலங்குகள், புழுக்கள், இன்னும் பல்வேறு வகையான விலங்குகள் போன்றவை இச் சூழலில் வாழ்கின்றன. அக்குறல தொடக்கம் தங்காலை வரையான தெற்கு கடற்கரை பிரதேசம், கல்முனையைச் சூழவுள்ள கிழக்கு கடற்கரைப் பிரதேசம், யாழ்ப்பாணத்தையும் அதனைச் சூழவுள்ள தீவுகளையும் உள்ளடக்கிய வடக்கு கடற்கரைப் பிரதேசம், வங்காலை, சிலாவத்துறை உள்ளடங்கிய வடமேற்கு கடற்கரைப் பிரதேசம் ஆகியவை அதிகளவில் முருகைக்கற்பாறைகளளைக் கொண்ட பிரதேசங்களாகும்.

முருகைக்கற்பாறைகளின் முக்கியத்துவத்தை நோக்கும் போது உயிர்ப்பல்வகைமை மிக்க வாழிடமாகும். ஆழமற்ற கடல் நீரில் அதியுயர் இனப்பல்வகைமை உடைய வாழிடமாக உள்ளது. கடல்வாழ் விலங்குகளிற்கு போசணையையும், வாழிடத்தையும் வழங்குகின்றது. பலவகையான மீனினங்களின் விசேட வாழிடமாகக் காணப்படுகிறது. ஏற்றுமதியில் பயன்படும் பல அலங்கார மீன்களின் இயற்கை வாழிடமாக உள்ளது. Molluscaக்களும், நண்டுகள், சிங்க இறால்கள், உணவுக்கான மீனினங்களின் இருப்பிடமாக உள்ளதனால் மீன்பிடி வளத்தைப் பேணுவதற்கு உதவுகின்றது. கடல் அலைகளின் தாக்கத்திற்கு எதிரான தடுப்புக்களாக அமைவதன் மூலம் கரையோர மண்ணரிப்பிலிருந்து பாதுகாப்பைத் தருகின்றன. புமியின் பெரும்பாலான தரைச்சூழல் தொகுதிகளிலும் பார்க்க கூடிய முதல் உற்பத்தித்திறன் உடைய சூழற் தொகுதியாக விளங்குகிறது. இவை பல்வேறு வடிவங்களிலும், பல்வேறு நிறங்களிலும் காணப்படுவதாலும் பல்வேறு இன அலங்கார மீன்களை, பல்வேறுபட்ட இறால், நண்டு கடல் அனிமனி இனங்களை இவை கொண்டிருப்பதனாலும் அழகியல் பெறுமதி மிக்க சூழல் தொகுதியாக அமைவதால் சுற்றுலாத்துறையில் முக்கியத்துவம் உடையவையாக விளங்குகின்றன. அத்துடன் மருத்துவப் பெறுமதி வாய்ந்தனவாகவும் உள்ளன. குறிப்பாக UV கதிர்களில் இருந்து உடலைப் பாதுகாக்கும் நிறப் பொருட்கள், என்பு மாற்றீட்டு சிகிச்சைகளில் பயன்படும் பெறுதிகள் இங்கிருந்து பெறப்படுகின்றன.

முருகைக்கற்பாறை அழிவிற்கான காரணங்களாக இயற்கைக் காரணிகளும், மனித நடவடிக்கைகளும் அமைகின்றன. இயற்கைக்காரணிகள் என்னும் போது,

· பலமான சூறாவளி போன்ற கடுங்காற்றினால் நீர் கலக்கப்படுதல்

· ஒருவகை நட்சத்திர மீன்களால் முருகைகற் பொலிப்புக்கள் அழிக்கப்படுதல்

· பூகோள வெப்ப உயர்வு காரணமாக அல்லது எல் - நினோ காரணமாக கடல் நீரின் வெப்பநிலை அதிகரிப்பதனால் முருகை வெளிறல் (Coral bleaching) ஏற்படுகின்றது.

முருகைகற்பாறை அழிவிற்கான மனித நடவடிக்கைகளாக,

· அளவிற்கு அதிகமான மீன்பிடி நடவடிக்கைகள், குறிப்பாக அடியில் பதியம் பயன்படுத்தல்(Bottomset net).

· முருகைகற்களை, சிப்பிகளை அகழ்ந்தெடுத்தல்

· உள்நாட்டிலிருந்து ஆறுகள், மழை வெள்ளம் வழியாக வரும் வண்டல்கள் படிதல், இதன் வழியாக கடல் நீரை வந்தடையும் விவசாய இரசாயன பதார்த்தங்களான அசேதன வளமாக்கிகள் பீடைநாசினிகளாலும் அழிவடைகின்றன.

· அலங்கார மீன்களைப்பிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் வலைகளால் முருகைகற்கள் பாதிப்படைகின்றன.

· சுண்ணாம்பு உற்பத்திக்காக அழிக்கப்படுதல்

· சேதனக் கழிவுகள், கைத்தொழில் வெளிப்பாய்வுகள் வழியாக கடல் நீர் மாசுபடுதல்.

· கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள்.

· துறைமுகம் அகழ்தல்.

· கப்பல்களில் இருந்து ஏற்படும் எண்ணெய்க் கசிவுகள.;

முருகைக்கற்பாறைகள் அகழ்ந்தெடுக்கப்படுவதனால் ஏற்படும் பாதகமான விளைவுகள்

· மீன்பிடி தொழில் பாதிக்கப்படும்

· கரையோர அரிப்பு துரிதப்படுத்தப்படும்.

· முருகைக்கல் உயிரினங்களை அகழ்தலினால் அவற்றின் பல உயிரின அமைப்பில் பல எதிர் விளைவுகள் ஏற்படும். சில வகை உயிரினங்கள் இத் தொகுதியிலிருந்து அழிந்து போக இடம் ஏற்படும்.

· கரையோர சுற்றுலாத் தொழிலினை மறைமுகமாகப் பாதிக்கும்.

முருகைகற்பாறைகளை பாதுகாப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளாக

· முருகைகற்பாறைகள் அழியக்கூடிய மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுத்தல்

· முருகைகற்களை சுண்ணாம்பு உற்பத்திக்கு பயன்படுத்துவதை தடுத்து டொலமைற் போன்றவற்றை சுண்ண உற்பத்திக்குப் பயன்படுத்தல்

· முருகைகற்பாறைகளின் முக்கியத்துவத்தைப் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தல்

· கடற்பூங்காக்களை அமைத்து முருகைகற்பாறை தொடர்களை பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக பிரகடனப்படுத்தல்

· கடல்சார் அலங்காரப் பொருட்களின் வர்த்தகத்தைத் தடுத்தல்

· முருகைகற்பாறைகள் அழிவடைவதைத் தடுக்க சட்டரீதியான நடவடிக்கைகள் எடுத்தல்

· மக்களுக்கு மாற்றுத் தொழில் வாய்ப்பை ஏற்படுத்தல்

· கைத்தொழில் கழிவுகள் ஏனைய கழிவுகள் கடலிற்குள் விடப்படுவதைத் தடுத்தல்

· ஆய்வு நடவடிக்கைகளை விரிவுபடுத்தி இப்பகுதியில் உள்ள சூழற்பிரச்சனைகளை கற்பிக்கும் ஆய்விற்குரிய பகுதியாக மாற்றுதல்

· முருகைகற்பாறை உற்பத்திக்கு பயன்படும் நுண்ணங்கிகளைப் பாதுகாத்தல்

புவிவெப்ப அதிகரிப்பால் கடல்நீரின் வெப்பநிலை உயர்ந்;துகொண்டிருக்கின்றது. வளிமண்டலத்தில் அதிகரித்து வரும் கார்பன்டை ஒக்சைட் வாயு கடல் நீரில் கரைந்து போவதால் கடல் நீரின் அமிலத்தன்மையும் அதிகரிக்கின்றது. அடுத்த 50 ஆண்டுகளில் உலகில் அரைவாசிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகள் அழிந்து போய்விடும் என்பதே விஞ்ஞானிகளின் கருத்து. ஆனால் சில விஞ்ஞானிகள் வெப்பத்தைத் தாங்கி வளரும் தன்மையைச் சில வகைப் பவளப்பாறைகள் பெற்றிருப்பதால் அழிவின் வேகம் குறைவாக இருக்கும் என்று கண்டுபிடித்துள்ளனர்.

என்னதான் வெப்பத்தை ஏற்று வளரும் அல்காக்களால் பவளப்பாறைகள் வெளுத்துப்போவது தடுக்கப்பட்டாலும் மனிதர்களின் தவறுகளால் பவளப்பாறைகளின் அழிவின் வேகம் சற்று தூக்கலாகவே உள்ளது. மனிதத்தவறுகளினால் இன்னும் 50 ஆண்டுகளில் பல மில்லியன் ஆண்டுகள் பழமையான பவளப்பாறைகள் அழிந்து போவது நிச்சயம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

- தி.துஸ்யந்தனி, புவியியல் சிறப்புக் கற்கை, கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.

Pin It