இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி குடியரசுத் தலைவருக்கு அடுத்தபடியாக உன்னத பதவி வகிப்பவர் துணைக் குடியரசுத் தலைவரே. பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அடங்கிய எலக்ட்ரல் காலேஜே இவரைத் தேர்ந்தெடுக்கிறது. இந்தியக் குடிமகன், 35 வயது ராஜ்யசபை உறுப்பினராவதற்கான ஏனைய தகுதிகள், ஆதாயம் தரும் பதவிகள் ஏதும் வகித்தல் கூடாது போன்றவை துணைக்குடியரசுத் தலைவராவதற்கான அடிப்படைத் தகுதிகள். பதவிக் காலம் ஐந்து வருடங்கள்.

சொல்லப்போனால் துணைக் குடியரசு தலைவருக்கென்று தனிப் பொறுப்புகள் எதுவும் அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனாலும் நடைமுறையில் இரண்டு விஷயங்களை அவர் கவனித்து வருகிறார். ராஜ்யசபை தலைவர் பதவி வகித்தல், குடியரசுத் தலைவர் இல்லாத போதோ, குடியரசுத் தலைவர் நோய்வாய்ப்பட்டிருந்தாலோ, வேறு பல காரணங்களால் அவர் தமது கடமையை நிறைவேற்ற இயலாமல் இருக்கும்போதோ குடியரசுத் தலைவரின் கடமைகளை நிறைவேற்றுவது. இவ்விதமாக குடியரசுத் தலைவரின் பொறுப்புகளை நிறைவேற்றும் நேரத்தில் அவரால் ராஜ்ய சபை தலைவராகச் செயல்பட முடியாது.

(நன்றி: மனோரமா இயர்புக்)

Pin It