தேவையான பொருட்கள்:

அவல் - 500 கிராம்
நெய் - 2 மேசைக்கரண்டி
அச்சு வெல்லம் – 250 கிராம்
ஏலக்காய் - 5
தேங்காய் - ஒரு மூடி துருவியது.
 
செய்முறை:

வெல்லம், ஏலக்காயை பொடி செய்ய வேண்டும். வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரைய விட வேண்டும். வெல்லம் கரைந்ததும் எடுத்து மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். வடிகட்டிய வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விட வேண்டும். கொதிக்கும் போதே ஏலக்காயைப் பொடி செய்து போட வேண்டும். இரண்டு நிமிடம் கொதித்ததும் அதில் அவலை போட்டு தீயைக் குறைத்து அவல் வேகும் வரை கிளறி விட வேண்டும். ஒரு கரண்டி நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவல் நன்கு வெந்ததும் அதில் துருவிய தேங்காயைச் சேர்த்து கிளறி விட வேண்டும். பிறகு மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி கிளறி விட்டு 5 நிமிடம் கழித்து இறக்கிப் பரிமாற வேண்டும்.