தேவையான பொருட்கள்:

கோழிக்கறி - 150 கிராம்
பச்சை மிளகாய் - 4
வெங்காயம் - 250 கிராம்
கிராம்பு - 6
தக்காளி - 2
கொத்துமல்லி - சிறிது
அப்பளம் - கொஞ்சம்
உப்பு, எண்ணெய், மைதா கரைசல் - தேவையான அளவு 

செய்முறை:

எலும்பு இல்லாத கோழிக்கறியை நன்கு கழுவி நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி, தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, கிராம்புடன் நறுக்கி பொருட்களையும் கோழிக்கறியையும் சேர்த்து வதக்க வேண்டும். கறி வெந்ததும் உப்பு சேர்க்கவும். நல்ல மணம் வந்ததும் இறக்கி ஆற வைக்க வேண்டும்.

அப்பளத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் நனைத்து எடுத்து வைக்க வேண்டும். அதன்மேல் கறி கலவையை வைத்து முக்கோணமாக மடித்து மைதா கரைசலால் ஓரத்தை ஒட்ட வேண்டும். கறிக்கலவை அனைத்தையும் இதுபோல் செய்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

Pin It