தேவையான பொருட்கள்:

கோழிக்கறி - 250 கிராம்
கடலை பருப்பு - 100 கிராம்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 5
துவரம் பருப்பு - 50 கிராம்
இஞ்சிப்பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
முருங்கை கீரை - கைப்பிடியளவு
உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை:

கடலை பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றை அரை மணி நேரம் ஊறவைத்து அரைக்க வேண்டும். எலும்பில்லாத கோழிக்கறியை அரைத்து உதிர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். முருங்கைக் கீரை, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்க வேண்டும்.

கோழிக்கறி, கீரை, பருப்பு, இஞ்சி விழுது, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் உப்பு சேர்த்து வடைகளாகத் தட்டி இலையில் வைக்க வேண்டும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், வடைகளைப் போட்டு பொன்னிறத்தில் பொரித்து எடுக்க வேண்டும்.

Pin It