தேவையான பொருட்கள்

வாளை மீன் - 250 கிராம்

மசாலாதூள் - 3 தேக்கரண்டி

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

சின்ன வெங்காயம்- 250 கிராம்

பச்சைமிளகாய் - 3

தேங்காய் பூ- 2 மேசைக்கரண்டி

மஞ்சள்தூள் - தேவையான அளவு

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

மீனை சுத்தம் செய்து அதில் 2 தேக்கரண்டி மசாலாதூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிட வேண்டும். தண்ணீர் முழுவதும் வற்றி மீன் வெந்ததும் இறக்கி நன்கு ஆறவிட வேண்டும். பின்பு மீனில் உள்ள முட்களை நீக்கிவிட்டு சதைப் பகுதியை மட்டும் தனியாக வைக்க வேண்டும். வெங்காயம், பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

ஒரு தவாவை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்க வேண்டும். பின் பச்சைமிளகாய், தேங்காய் பூ, மசாலாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, உதிர்த்துவைத்த மீனை ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்க வேண்டும். பின் தீயை மிதமானதாக வைத்து, சிறிது தண்ணீர் தெளித்து நன்கு கிளற வேண்டும். அடி பிடித்து விடாமல் கிளறிக்கொண்டு இருக்க வேண்டும். வெங்காயம், தேங்காய் பூ நன்கு வதங்கி மீனுடன் சேர்ந்ததும் இறக்கி பரிமாற வேண்டும்.

Pin It