தேவையான பொருட்கள்:

சுறா - 250 கிராம்

சோம்பு - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 5

பட்டை - 1

பெரிய வெங்காயம் - 1

இஞ்சி - 1 அங்குலத் துண்டு

செய்முறை:

சுறாவை குக்கரில் வேக வைக்க வேண்டும். ஆறியவுடன் உதிர்த்து விட வேண்டும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்க வேண்டும். பச்சை மிளகாயை கீறி விட வேண்டும்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் பட்டை, சோம்பு போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும். இஞ்சியை நறுக்கி தட்டி போட்டு வதக்கி உதிர்த்த சுறாவை போட்டு நன்றாக கலக்க வேண்டும்.

சிறிது நேரம் வதக்கிய பின் இறக்க வேண்டும். மல்லித்தழை தூவி பரிமாறினால் நன்றாக இருக்கும்.

Pin It