Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய் - 4

உருளைக்கிழங்கு - 1

பெரிய வெங்காயம் - 1

வெண்ணெய் - 1 மேஜைக் கரண்டி

மல்லித் தூள் (தனியாதூள்) - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

எலுமிச்சம்பழச் சாறு - ஒரு மேஜைக்கரண்டி

கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி

பச்சை மிளகாய் - 2

பூண்டு - 3 பல்

மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி

 

செய்முறை

உருளைக்கிழங்கைத் தோல் சீவி வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் முருங்கைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். குக்கரில் உருளைக்கிழங்கு, வெங்காயம், முருங்கைக்காய் ஆகியவற்றை 200 மில்லி தண்ணீருடன் சேர்த்து 3 விசில் வரை வேகவைக்க வேண்டும். குக்கரில் ஆவி அடங்கியதும், முருங்கைக்காயின் சதைப் பகுதியை தனியே வழித்தெடுக்க வேண்டும். உருளைக்கிழங்கு, வெங்காயத்தை தனியே எடுத்து அரைக்க வேண்டும். ஏற்கனவே குக்கரில் வேகவைத்த தண்ணீரில் முருங்கைக்காய் விழுது, உருளைக்கிழங்கு வெங்காய விழுதைச் சேர்த்து கலக்க வேண்டும்.

மல்லித்தூள், பச்சை மிளகாய், பூண்டு, மிளகுத்தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். வெண்ணெயை உருக்கி அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம் கலந்த வேகவைத்த தண்ணீரைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கொதித்ததும் இறக்கி வைத்து எலுமிச்சம்பழச் சாறு, மல்லித்தழை சேர்த்து பரிமாற வேண்டும்.

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 கி.பிரபா 2011-09-09 13:16
முருங்கைக்காய் முற்றியவை 6 தேவை.அவற்றை நன்றாக வேக வை. பின் உள்ளிருக்கும் விதையையும் சதையையும் அரைப்பானில் பசை போல செய்.அரைத்த விழுதில் தேவையான அளவு மிளகுத்தூள்,உப் புபோடு.சூடான நீரில் அரைத்த விழுதைப் போட்டு கரைசலாக்கி அவற்றை அடுப்பில் வைத்து சிறிது சூடாக்கி குடித்து வந்தால் சர்க்கரை நோய்,களைப்பு,மய க்கம்,புளிப்பு ஏப்பம்போன்ற்வை வராது. அவரவர் வீட்டிலுள்ள அடுக்களையே மருத்துவமனை.அங் குள்ள பொருட்களே அன்றாட மருந்து ஆகும்.இதுதான் முருங்கைக்காய் சூப்பாகும். நன்றி
Report to administrator

Add comment


Security code
Refresh