Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

தேவையான பொருட்கள்

பூண்டு – 500 கிராம்

கடுகு - ஒரு மேசைக்கரண்டி

பெருங்காயதூள் - ஒரு மேசைக்கரண்டி

எலுமிச்சைபழம் - 10

வெந்தயம் - ஒரு மேசைக்கரண்டி

மஞ்சள்தூள் - ஒரு சிட்டுகை

காய்ந்த மிளகாய்த் தூள் - 150 கிராம்

நல்லெண்ணெய் - 200 கிராம்

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

பூண்டை தோலுரித்து வைத்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சைப் பழத்தை நறுக்கி சாறுபிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து மஞ்சள்தூள், பெருங்காயத் தூள் போட்டு, அதனுடன் பூண்டையும் போட்டு வதக்க வேண்டும். பூண்டு வதங்கி பொன்னிறமாக வந்தவுடன் உப்பு சேர்க்க வேண்டும்.

பூண்டு நன்கு வதங்கியவுடன் எலுமிச்சைப்பழச் சாற்றை ஊற்றி நன்றாக கொதிக்கவிட வேண்டும். சாறு வற்றியவுடன் மிளகாய் தூளை கொட்டி கிளற வேண்டும்.

நன்றாக கிளறியபின்பு இறக்கி வைக்க வேண்டும்.

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 இளம்பிறை 2013-01-24 15:51
வெள்ளைப் பூண்டு - ஊறுகாய்! தக்காளி, உரித்த பூண்டு இவைகளை எண்ணெயில் வதக்குக. உப்பு, மஞ்சள்பொடி, பெருங்காயத்தூள் , காரப்பொடி இவற்றைச் சேர்த்து வதக்குக.நன்றாக வதங்கிய பின் இறக்கிவைக்க! பின்னர் கடுகைத்தாளித்து க் கலந்து வைக்க. ஒரு வாரம் கெடாமல் இருக்கும். சிறுகரண்டியில் எடுத்தால் கெடாமல் இருக்குமே!
Report to administrator

Add comment


Security code
Refresh