Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

தேவையான பொருட்கள் 

பாசுமதி அரிசி - ஒரு கிலோ

மட்டன் - ஒரு கிலோ

மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி

வெங்காயம் - 500 கிராம்

பழுத்த தக்காளி - 500 கிராம்

பச்சை மிளகாய் - 5

புதினா - ஒரு கொத்து

எண்ணெய் - 200 மில்லி

நெய் - 50 மில்லி

எலுமிச்சை -அரை பழம்

பட்டை, ஏலம், கிராம்பு - தலா 2

பிரியாணி இலை - 2

உப்பு தூள் - தேவையான அளவு

செய்முறை 

அரிசியை ஊற வைக்க வேண்டும். மட்டனை கொழுப்பெடுத்து கழுவி தண்ணீரை வடிக்க வேண்டும். வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஈரம் போக காய வைத்து எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, ஏலம், கிராம்பு, பிரியாணி இலை போட்டு வெடிக்க விட்டு வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி மிளகாய் தூள், பழுத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு புதினா, தயிர் சேர்க்க வேண்டும். அடுத்து தக்காளியும் கொத்துமல்லியும் சேர்க்க வேண்டும். 

அடுத்து உப்பு, மட்டன் சேர்த்து நன்கு கிளறி, தீயின் தனலை சிம்மில் வைத்து மட்டனை வேக விட வேண்டும். மட்டன் வெந்து கூட்டு கிரேவி பதம் வரும் வரை வேக விட வேண்டும். மட்டன் அதிகமாக இருந்தால் அதற்கு தகுந்தாற் போல் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்னேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்ற வேண்டும். தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு கொதிக்கவிட்டு கடைசியாக சிறிது நெய், லெமன் பிழிந்து, பாதி அளவு வற்றும் போது அடுப்பின் மேல் தம் போடும் கருவியை வைத்து சாப்பாடு சட்டியின் மேல் கனமான பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம்மில் விட வேண்டும். பிறகு லேசாக மேலிருந்து கீழாக சாதம் குழையாமல் பிரட்டி எடுக்க வேண்டும். இப்போது சுவையான ஆம்பூர் மட்டன் பிரியாணி ரெடி.

நன்றி: ஜலீலா

அனுப்பி உதவியவர்: நளன்

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

+1 #1 ezhilbharathi 2010-06-05 16:09
Briyani seimuraiyai padikkum pode romba pidichirukku..
chinis noodles, fried rice sei muraikalaiyum koduthal nalla erukkum.. hotel le 80,120 koduthu sapida vendi erukku.. seimurai therinthal veetileye seithu sapidalam..
Report to administrator
0 #2 annu 2011-03-01 06:53
இது அப்பட்டமாக திருமதி. ஜலீலாவின் பிளாகில் இருந்து எடுக்கப்பட்டது. இப்படிப்பட்ட திருடிய தகவல்களை தங்கள் வலையில் பதிப்பிக்கலாமா? ஆக்கம் சொந்தமானதா இல்லையா என்று நீங்கள் பார்க்க வேண்டாமா? தயவு செய்து இந்த இடுகையை நீக்கி விடுங்கள் அல்லது உண்மையாக, சொந்தமாக இடுகை எழுதியவரின் பெயரை போடுங்கள். நன்றி.
Report to administrator
0 #3 editor, keetru.com 2011-03-01 07:06
நளன் என்பவர்தான் கீற்றிற்கு சமையல் குறிப்புகள் அனுப்புகிறார். சமையல் குறிப்புகளுக்கு காப்பிரைட் பிரச்சினை இல்லை என்பதால், அவர் எங்கிருந்து எடுக்கிறார் என்பதை நாங்கள் இதுவரை சரிபார்க்கவில்ல ை... தவறுக்கு வருந்துகிறோம். ஜலீலா பெயர் சேர்க்கப்பட்டுள ்ளது. இனி கவனமாக இருக்கிறோம்.
Report to administrator
-1 #4 shuba 2013-11-27 19:52
கடைகலில் கிடைபது பொல் வென்காய தயிர் பஷடி
தயார் செய்வது யெப்படி?(biriya ni side dish)
Report to administrator

Add comment


Security code
Refresh