தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 1 பெரியது

தக்காளி - 1 பெரியது

மிளகாய் - 3

ஏலம்,பட்டை,கிராம்புத்தூள்- அரைக்கரண்டி

சில்லிபவுடர் - 1 தேக்கரண்டி

சீரகத்தூள் - அரைக்கரண்டி

சோம்புத்தூள் - அரைக்கரண்டி

மல்லி புதினா - கொஞ்சம்

எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி

இஞ்சிபூண்டு பேஸ்ட்- 2 தேக்கரண்டி

மல்லித்தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் -அரைக்கரண்டி

தேங்காய் - 4 மேஜைக்கரண்டி

முந்திரித்தூள் - ஒரு கை பிடி

 

செய்முறை:

வெங்காயம், தக்காளி, மல்லி, புதினா, மிளகாய் இவற்றை நறுக்கி எடுக்க வேண்டும். இவற்றுடன் தேங்காய், முந்திரித்தூள் சேர்த்து அரைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெங்காயம் சிவக்க வதக்க வேண்டும். பின்பு அதனுடன் இஞ்சி பூண்டு, ஏலம், பட்டை, கிராம்புத்தூள், தக்காளி, மல்லி புதினா, மிளகாய், உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

பின்பு அத்துடன் சில்லிபவுடர், மல்லி, சீரக, சோம்பு, மஞ்சள் பொடிகளை சேர்க்க வேண்டும், நன்றாகப் பிரட்டி ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். மசாலா வாடை அடங்கியதும் அரைத்த தேங்காய் கலவை விட வேண்டும். தண்ணீர் தேவையான அளவு சிறிது சேர்க்க வேண்டும். கொதிக்கத் துவங்கியதும்,சிம்மில் வைத்து எண்ணெய் தெளிய இறக்க வேண்டும். சப்பாத்தி, சப்போட்டாவுக்கு இந்த சால்னா ருசியாக இருக்கும்.

 (நன்றி: அறுசுவை.காம்)