Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

தேவையான பொருட்கள்:

•    நண்டு இறைச்சி-கால்க் கிலோ
•    முட்டை -ஒன்று
•    வெங்காயம்-ஒன்று
•    நறுக்கிய செல்லரி-கால்க்கோப்பை
•    ரொட்டித்துண்டு-ஆறு
•    மயோனைஸ்-ஒரு மேசைக்கரண்டி
•    பார்ஸ்லி தழை-ஒரு மேசைக்கரண்டி
•    எலுமிச்சைசாறு-ஒரு தேக்கரண்டி
•    டீஜான் மஸ்டர்ட்-அரைதேக்கரண்டி
•    உப்புத்தூள்-அரைதேக்கரண்டி
•    மிளகுத்தூள்-அரைதேக்கரண்டி
•    ஹாட் பெப்பர் சாஸ்- அரைதேக்கரண்டி

செய்முறை:

•    ஒரு கோப்பையில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் மயோனைஸைப் போட்டு நன்கு கலக்கவும்.

•    பிறகு டீஜான் மஸ்டர்ட், எலுமிச்சைச் சாறு, மற்றும் உப்பு,மிளகு பெப்பர் சாஸ் ஆகியவற்றைச் சேர்த்து கலக்கவும்.தொடர்ந்து வெங்காயம்,செல்லரி,பார்ஸ்லி ஆகியவற்றைப் போட்டு சேர்த்து கலக்கி வைக்கவும்.

•    பிறகு ரொட்டித்துண்டுகளில் முத்லில் இரண்டு துண்டுகளைப் போட்டு மிக்ஸியில் தூளாக்கி தயாரித்துள்ள கலவையில் போட்டு அதனுடன் நண்டை போட்டு இலேசாக கலக்கி சிறிய உருண்டைகளாகச் செய்து, இலேசாக வட்டமாக தட்டி வைக்கவ்ம்.

•    பிறகு மீதியுள்ள ரொட்டிகளை தூளாக்கி தட்டியுள்ள கேக்குகளை அதில் போட்டு பிரட்டி வைக்கவும்.

•    இதேப்போல் எல்லா உருண்டைகளையும் செய்துக் கொண்டு நான்ஸ்டிக் சட்டியை அடுப்பில் காயவைத்து அதில் ஒரு மேசைக்கரண்டி வெண்ணெயையும், இரண்டு மேசைக்கரண்டி எண்ணெயையும் கலந்து சிறிது ஊற்றி, நண்டு கேக்குகளை சட்டியின் அளவிற்க்கு ஏற்றவாறு போட்டு சிவக்க சுட்டெடுக்கவும்.

•    இந்த சுவையான கிராப் கேக்குகளை தக்காளி கெர்சப்புடன் அல்லது பிடித்தமான சாஸுடன் சூடாக பரிமாறவும்.

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Add comment


Security code
Refresh