Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

தேவையானவை:

baby_potato_curry_360பேபி உருளைக்கிழங்கு.....................1/4 கிலோ
மிளகாய்ப் பொடி.................................1/2 தேக்கரண்டி
சீரகம்........................................................ 1/4 தேக்கரண்டி
தேங்காய்................................................. 2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம்..................................10
கறிவேப்பிலை .......................................ஒரு கொத்து
தே. எண்ணெய்......................................... 2 தேக்கரண்டி
கடுகு + உ.பருப்பு......................................... 1/2 தேக்கரண்டி
உப்பு ............................................................தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை உரித்து நைசாக நறுக்கவும். தேங்காய், சீரகத்தை நன்கு அரைக்கவும். பேபி உருளைக்கிழங்கை நன்கு கழுவி ஒரு ஊசியால் நான்கைந்து இடத்தில் துளை போடவும். குக்கரில் அளவான நீர் விட்டு, கொஞ்சம் உப்பு போட்டு அதில் உருளையை வேகவைக்கவும்.
உருளை வெந்ததும் தோல் உரிக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அதில் கடுகு+உ.பருப்பு போட்டு, வெடித்ததும், நறுக்கிய வெங்காயம் + கறிவேப்பிலை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், மி.பொடி போட்டு பிரட்டி, அதிலேயே அரைத்த தேங்காய் விழுது +உப்பு+உருளையை முழுசாகப் போடவும். தீயைக் குறைத்து வைக்கவும். லேசாகப் பிரட்டி விடவும். தண்ணீர் விடவேண்டாம். 10 நிமிடம் பெரட்டி விட்டு, இறக்கி விடலாம்.

பேபி உருளைக் கிழங்குக் கறி படு சூப்பராய் இருக்கும். நீங்களும் செய்யலாமே.. சாம்பார் சாதம், சப்பாத்திக்கு நல்ல துணை இது.

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Add comment


Security code
Refresh