palak_paner_400தேவையானவை:

பாலக்கீரை/அரைக்கீரை.................1 கட்டு
பனீர்..................................................200 கிராம்
வெங்காயம்.....................................2
தக்காளி............................................2
பச்சை மிளகாய்..............................2
மிளகாய் பொடி...............................1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி.................................கொஞ்சம்
இஞ்சி,பூண்டு விழுது.....................1 தேக்கரண்டி
மிளகு...............................................1/4 தேக்கரண்டி
சீரகம்................................................1/2 தேக்கரண்டி
வெண்ணெய்/எண்ணெய்.....................2 தேக்கரண்டி
கறிவேப்பிலை.................................1 கொத்து
உப்பு..................................................தேவையான அளவு

செய்முறை:

கீரையை நன்கு கழுவி, சுத்தம் செய்து நறுக்கி,குக்கரில் கொஞ்சம் உப்பு போட்டு வேக வைக்கவும். கீரை ஆறியதும், அதனை கடைந்து வைக்கவும். பனீரை சதுரமாக நறுக்கி, வெண்ணெய்/எண்ணெயில் வறுத்து, எடுத்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை நறுக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து, வெண்ணெய்/எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும், சீரகம், மிளகு போட்டு வெடிக்க விட்டு அதில் இஞ்சி,பூண்டு விழுதைப் போட்டு பிரட்டவும். அதில் நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய்,கறிவெப்பிலை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், மிளகாய் பொடி, மஞ்சள் பொடி போட்டு பிரட்டவும். பின் அதில் உப்பு + தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும். தக்காளி வதங்கியதும், அதில் கடைந்த கீரையைப் போட்டு நன்கு பிரட்டவும்.

கீரை+மசால் கெட்டியானதும், அதில் ஒரு டம்ளர் நீர் ஊற்றி கொதிக்க விடவும். நன்றாக கொதித்து, நீர் சுண்டி வரும்போது, வறுத்த பனீர் துண்டுகளைப் போட்டு, கிளறி இறக்கவும். இதனை சாதம், சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.