தேவையானவை:

pakarkay_fry1. சின்ன/பெரிய பாகற்காய்..........1 /4 கிலோ
2. மிளகாய் பொடி..........................1 தேக்கரண்டி
3. மல்லிபொடி................................1 தேக்கரண்டி
4. சீரகப்பொடி ................................1 /2 தேக்கரண்டி
5. மஞ்சள் பொடி..............................கொஞ்சம்
6. தயிர்..............................................1 தேக்கரண்டி
7. பூண்டு............................................4  பல்
8. சின்ன வெங்காயம்...........................10
9. உப்பு...............................................தேவையான அளவு
10. எண்ணெய்....................................4 தேக்கரண்டி
11. கறிவேப்பிலை+மல்லி தழை....கொஞ்சம்

செய்முறை:

சின்ன பாகற்காயை நீள வாக்கில் நான்காக நறுக்கி நீரில் போடவும். பெரிய பாகற்காய் என்றால் நீள வாக்கில் நான்காக நறுக்கி, அதனை ஒரு இன்ச் நீள துண்டாக வெட்டவும். பூண்டை நன்கு தட்டிகொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் பாகற்காயை நன்கு கழுவி எடுத்து வைக்கவும். அத்துடன், மிளகாய், மல்லி, மஞ்சள், சீரகப் பொடி, தயிர், பூண்டு + உப்பு போட்டு நீர் ஊற்றாமல் பிசையவும். இதனை அப்படியே ஒரு மணி நேரம் குளிர்பதனப் பெட்டியில் வைக்கவும்.வெளியிலும் வைக்கலாம். பிறகு, அடுப்பில் வாணலி/தவாவை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பின்னர் பிசறி வைத்த பாகற்காயை போடவும்.

தீயை மிதமாக வைக்கவும். அடிக்கடி பிரட்டி விடவும். 10 -15 நிமிடத்தில் காய் வெந்து, நல்ல கருஞ்சிவப்பு நிறம் வந்ததும் இறக்கவும். கறிவேப்பிலை+ மல்லி தூவவும். இந்த பாகற்காய் வறுவல் கசப்பாக இருக்காது. சாம்பார் சாதம், தயிர் சாதத்துக்கு நல்ல துணைக் கறி.

Pin It