தேசத்தின் விடுதலைக்காகவென்றும் சுதந்திரத்திற்காகவென்றும் படித்த வகுப்பார்களால் (பார்ப்பனர்களால்) கிளர்ச்சி ஏற்படும் போதெல்லாம் இந்து முஸ்லீம் கலவரங்களும் அபிப்பிராய பேதங்களும் ஏற்படாமலிருப்ப தில்லை.
ஆனால் மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ் ஏற்பட்டிருந்த ஒத்துழையாமையின்போது மாத்திரம் கலவரமும் அபிப்பிராய பேதமும் இல்லாமல் இருந்ததோடல்லாமல் நாம் அறிய இதுவரை நமது நாட்டில் ஏற்பட் டிராத இந்து முஸ்லீம் பரஸ்பர நம்பிக்கையும் அபிப்பிராய பேத மின்மையும் ஒற்றுமையும் சகோதரத் தன்மையும் தலைசிறந்து விளங்கிற்று.
ஆனால் இதற்கு சில பொறுப்பற்றவர்கள், அது சமயம் மகமதியர் களுக்குக் கிலாபத் சங்கடம் இருந்ததால் அவர்கள் இந்துக்களோடு ஒத்திருந் தார்கள் என்ற உள் எண்ணம் கற்பிக்கிறார்கள். அதற்கு ஒரு சிறிதும் ஆதார மில்லை என்றே சொல்லுவோம். ஒத்துழையாமை மகாத்மாவினால் அமுலில் ஆரம்பிக்கும் காலத்திலேயே கிலாபத்து விஷயம் பெரும்பாலும் முடிவ டைந்து விட்டது.
அதோடு துருக்கி நாட்டில் கமால் பாஷாவின் ஆதிக்கம் ஏற்பட்ட தும் கிலாபத்து விஷயம் வெளிநாட்டு மகமதியர்களால் கைவிடப்பட்டும் போய் விட்டது. ஆகவே, மகமதியர்கள் அந்த எண்ணம் கொண்டே இந்துக் களோடு கலந்திருந்தார்கள் என்று சொல்ல முடியாது. அப்படி இருக்க ஒத்து ழையாமையின் போது மாத்திரம் ஏன் தேசத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்பட்டது. மற்ற காலங்களில் ஏன் கலவரமேற்படுகிறது என்று ஒவ்வொரு இந்து முஸ்லீமும் யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது. படித்த வர்கள் என்று சொல்லப்படும் வகுப்பினரான பார்ப்பனரும் மற்றையோரும் தேசீயக் கிளர்ச்சி என்கிற பெயராலும் காங்கிரஸ் என்னும் பெயராலும் செய்து வந்த காரியங்களெல்லாம் தன் வகுப்பாரின் சுய நன்மையைக் கோரியும் அதில் கலந்த மற்றவர்களும் தங்கள் தங்கள் தனித்த நலத்திற்காகவும் உழைப் பதாயிருந்ததால், மற்ற வகுப்பார்கள் தாங்கள் அக்கிளர்ச்சியில் சம்மந்தப்பட வில்லை என்று காட்டிக் கொள்வதற்காகவும், அக் கிளர்ச்சியின் பயனாய் அவ் வகுப்பாருக்கு ஏதாவது பதவியோ நிர்வாக அதிகாரமோ ஏற்படுமானால் அவை தங்கள் சமூகத்திற்கு (முஸ்லீம் சமூகத்திற்கு) சரியான பங்கு அளிக் கப்படாமல் போவதோடு, ஒரு சமூகம் மாத்திரம் முன்னேறி விட்டால் மற்ற சமூகம் அதனால் அழுத்தப்பட நேரிடும் என்றும் பயந்தே முட்டுக்கட்டை யாய் நிற்க நேர்ந்தது. அதே காரணம்தான், வங்காள பிரிவினையின்போது முஸ்லீம்கள் இந்துக்களிடம் நம்பிக்கை கொள்ளாதிருந்ததும், பிறகு, லக்னோ காங்கிரசில் முஸ்லீம்கள் இந்துக்களை நம்பும் படியாக ஒப்பந்தமும் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவமும் ஏற்றுக் கொண்டதால் இந்துக்களிடம் அவநம் பிக்கையில்லாமலிருந்ததும் எல்லோருமறிந்த விஷயம்.
பின்னும் ரௌலட் சட்டத்தின்போது ஏற்பட்ட கிளர்ச்சியில் முஸ்லீம் கள் கலந்துகொண்டு மகாத்மாவோடு ஒத்துழைத்ததற்கு காரணம், மகாத்மா முஸ்லீம்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானதோடு இரு சமூகத்திற்கும் சமத்துவமாய் விடுதலையளிக்கத்தக்க திட்டங்களோடும் உழைத்ததாலும் மகாத்மா திட்டங்களில் எது நிறைவேறினாலும் அது பெரும்பாலும் முஸ்லீம் களுக்கும் சம பாகம் கிடைக்கக் கூடியதாகவும், ஒருவரை ஒருவர் மோசம் செய்ய முடியாததுமான திட்டங்களாய் இருந்ததாலும் அவற்றில் யாரும் சந்தேகப்படுவதற்கே வழியில்லாமல் போனதோடு இத்திட்டங்கள் நிறை வேறக்கூடிய நிலைமையிலும் இருந்தது.
அந்தப்படி மகாத்மா திட்டங்கள் முழுவதும் நிறைவேறி விட்டால், சில வகுப்பார் முக்கியமாய் பார்ப்பனர்கள் இப்போது அனுபவிக்கும் அதிக சுதந்திரமும், ஏகபோக ஆதிக்கமும் அனுபவிக்க முடியாதாகையால் இத்திட் டங்களுக்கு விரோதமாக பார்ப்பனர்கள் கிளம்ப வேண்டியதாயிற்று. இதன் பலனாக தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள், வடநாட்டுப் பார்ப்பனர்களாகிய பண்டித மாளவியாவையும் மகாராஷ்டிரப் பார்ப்பனரையும் தூண்டி விட்டு அவர்களுக்கு உடந்தையாயிருந்து, மகாத்மாவையும் அவரது திட்டத்தை யும் எதிர்க்க வேண்டியதாயிற்று. மகமதிய சமூகம் எண்ணிக்கையில் மிகுந்தி ருக்கிற மாகாணமாகிய பஞ்சாப்பும், வங்காளமும் இத்துடன் சேர வேண்டிய தாயிற்று. லாலா லஜபதிராயும் தேசபந்து தாசும் மகாத்மாவையும் அவரது திட்டத்தையும் எதிர்க்கவும் அழிக்கவும் நேர்ந்தது. இந்த இரகசியத்தை அறிந்த பின்புதான் மகாத்மாவின் முதல் சிஷ்யராகவும் சட்டாம்பிள்ளை யாகவுமிருந்த ஸ்ரீமான் சக்கிரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரும் கடைசியாக அவர்களுக்கு உள்ளாளாயிருந்ததின் இரகசியமும் இந்த உணர்ச்சி ஏற்பட்ட தனால்தான். இந்த இரகசியம் வெளியாகாமலிருப்பதற்கு “பார்ப்பனர்கள் கூடி இப்படிச் செய்கிறார்கள்” என்பதை பொது ஜனங்கள் அறியாமலிருப்ப தற்கு தேசபந்து தாசைத் தலைவராக்கவேண்டிய அவசியம் நமது பார்ப்பனர் களுக்கு ஏற்பட்டது. நமது மாகாணத்தில் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைக் கொல்ல - ஜஸ்டிஸ் கட்சியைக் கொல்ல - பார்ப்பனரல்லாதாரிலேயே முதலியார் என்றும், பிள்ளை என்றும், செட்டியார் என்றும், நாயுடு என்றும், நாயக்கர் என்றும், பாவலர் என்றும், சாயபு என்றும் அப்போதைக்கப்போது எப்படித் தலைவர்களை சிருஷ்டித்துக் கொள்ளுகிறார்களோ அதுபோல் இந்தியாவுக்கே தேச பந்துவைத் தலைவராக்கி அவருக்கு வேண்டிய விளம்பரம் கொடுத்து அவர் கையாலேயே ஒத்துழையாமைக்குக் கொள்ளி வைக்கச் செய்து அவர் வாயாலேயே ஒத்துழைப்பை வெளியாக்கச் செய்து ஒத்துழையாமையும் தேசபந்துவும் மறைந்த பிறகு வார்த்தைக்கு வார்த்தை ஒத்துழையாமையையும் தேசபந்து பெயரையும் சொல்லிக்கொண்டு தங்கள் ஜாதி ஆக்கம் பெற வேட்டை ஆடுகிறார்கள்.
மகாத்மாவையும் அவர் திட்டத்தையும் ஒழிக்கவே பண்டித மாள வியா இந்து முஸ்லீம் கலகத்தை ஆரம்பிக்கக் கருதி இந்து மகாசபை என்று கிளப்பினார். ஒத்துழையாமைக்கு சில முஸ்லீம்கள் அனுகூலமாயிருந்ததால் அவர்களில் சிலரைக் கலைத்துத் தங்களுடன் சேர்த்துக் கொள்ளுவதற் காகவே சென்னையில் சில ஜனாப்களை ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் சேர்த் துக் கொண்டது போல் வங்காளத்தில் சில ஜனாப்களையும் மௌல்வி களையும் சுவாதீனப்படுத்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவங் கொண்ட வங் காள இந்து முஸ்லீம் ஒப்பந்தமொன்றை தேசபந்து தாஸ் ஏற்படுத்தினார். இவ்வொப்பந்தத்தை தேச பந்துகாக்கினாடா காங்கிரசில் பிரேரேபித்தபோது இதை ஆமோதித்தவர் யாரென்று வாசகர்கள் அறிய ஆசைப்படுவார்கள். ஆமோதித்தவர் யாரென்றால் தமிழ்நாட்டுக் காந்தியாகிய ஸ்ரீமான் சி. இராஜ கோபாலாச்சாரியாராகும். எந்த இராஜகோபாலாச்சாரியார் என்று கேட் பார்களேயானால் “வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இந்தியாவுக்குக் கூடாது; அது ஒற்றுமையையும் விடுதலையையும் அழிக்கும்; வகுப்புவாரி பிரதி நிதித்துவம் என்பது பார்ப்பனர்களை நசுக்குவதற்காக ஏற்பட்டது” என்பது போன்ற பத்து கற்பனைகள் எழுதி வருகிறாரே அந்த ஸ்ரீமான் இராஜ கோபா லாச்சாரியார்தான். இன்னும் கொஞ்சம் விவரமாய்த் தெரிய வேண்டுமானால் நமது நாட்டில் ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்ட போது அதற்கெதி ரிடையாய் சில பார்ப்பனரல்லாதாரைக் கொண்டே சென்னை மாகாணச் சங்கம் என்பதாக ஒன்றை ஏற்படுத்தி அதில் தாங்களும் கலந்து கொண்டு பார்ப்பனரல்லா தாருக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கொடுப்பதில் எங்களுக்கு ஆnக்ஷ பனையில்லை. ஆனால் அரசியலில் காங்கிரசை ஏற்றுக் கொண்டால் போதும் என்று சொல்லியும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை அப்போது ஒப்புக் கொண்டு காங்கிரஸ் திட்டத்திலும் தேசீய சங்க (நேஷனலிஸ்ட் கான்பரன்ஸில்) த்திலும் பார்ப்பனரல்லாதாருக்கு இத்தனை ஸ்தானம் என்றும் இத்தனை ஸ்தானங்களுக்குக் குறையாமல் என்றும் வேலைத் திட்டம் வெளியாக்கிவிட்டு இப்போது பார்ப்பனரல்லாதாருக்குள் கட்சி ஏற் படுத்தி அவர்களுக்கும் ஒற்றுமைக் குறைவு உண்டாகும்படி செய்து விட்டு “வகுப்புவாரி பிரதிநிதித் துவம் தேசத்தைக் கெடுக்கும் பிசாசு” என்கிறாரே அந்த ஸ்ரீமான் இராஜ கோபாலாச்சாரியாரால் ஆமோதிக்கப்பட்டு, வேறு பல ஆட்களை விட்டு அதை தோற்கடிக்கச் செய்து இப்போது ஒத்துழை யாமை அடியோடு நசுக்கப் பட்டுப் போனபின், கல்கத்தா ஒப்பந்தம் கூடாது என்று ஒரு கக்ஷியும், அதைப்பற்றி பேசவே கூடாது என்று ஒரு கக்ஷியுமாய் இருவரும் சேர்ந்து அதைக் கொல்ல நினைப்பதின் ரகசியமும் இதுதான். ஆகவே ஒத்துழையாமை ஒழிந்து விட்டதாலும் மகாத்மா தலைமை ஸ்தானத்தில் இருந்து விலகி விட்டதாலும் அந்த ஸ்தானங்களுக்கு சுயநலமும் பார்ப்பன ஆதிக்கமும் வந்து மகமதிய சமூகத்திற்கு இதற்கு முன் ஏற்பட்டிருந்த நன்மைகளையும் அழிக்க சில முஸ்லீம்களை விலைக்கு வாங்கி அவர்களை உபயோகித்துக் கொள்வதாலும், அவநம்பிக்கையும் ஜாக்கிரதையும் மகமதிய சமூகத்திற்கு அவசியமாகி விட்டது. இதன் பலனாய் எங்குப் பார்த்தாலும் இந்து முஸ்லீம் கலகங்கள் ஏற்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுப் போய் விட்டது. ஒரு பக்கம் பண்டித மாளவியா‘உரிமை’ ‘உரிமை’ என்று சொல்லிக் கொண்டு இந்துக்களுக்கு முஸ்லீம்கள் பேரில் ஆத்திரம் உண்டாகும்படி பிரசாரம் செய்வதும் இதை எதிர்க்கவேண்டி மற்றொரு பக்கம் மகமதிய தலைவர்கள் என்போர் ‘மதம் மதம்’ என்று சொல்லிக்கொண்டு இந்துக்கள் மீது துவேஷம் உண்டாகும்படி பிரசாரம் செய்வதுமாய் ஏற்பட்டுப் போய்விட்டது. இருவர் சொல்லிக் கொள்ளும் உரிமையிலும் மதத்திலும் உண்மையான தத்துவம் இருப்பதாக நாம் நினைக்கவில்லை. பசுக் கொலை யைப் பற்றி இந்துக்கள் முஸ்லீம்களை உபத்திரவிப்பது அனாவசியமென்றே கருதுகிறோம். முஸ்லீம்கள் பசுக் கொலை செய்வதால் இந்துக்களுக்கு எந்த விதக் கஷ்டமோ நஷ்டமோ இருக்கிறது என்பது நமக்கு விளங்கவில்லை. இந்துக்களுக்கு எப்படி ஒரு ஆட்டையோ, கோழியையோ, பன்றியையோ விலை போட்டு வாங்கி வளர்த்து கொன்று தின்பதற்கு பாத்தியமுண்டோ, அதுபோல் முஸ்லீம் களுக்கும் பசுவையோ, ஆட்டையோ, கோழியையோ விலை போட்டு வாங்கி கொன்று தின்னப் பாத்தியமுண்டு. இப்படி இருக்க, முஸ்லீம்களுக்கு மாத்திரம் ஒரு ஜெந்து விஷயத்தில் நிர்பந்தம் ஏற்படுத்துவதின் பொருள் என்ன? மாடு சாப்பிடுவதும் மாட்டைக் கொல்லுவதும் நமது தேசத்தில் முஸ்லீம்கள் மாத்திரம் செய்யவில்லை. நமது நாட்டில் பஞ்சமர் என்று சொல்லுவோரில் கோடிக்கணக்கான பேர்கள் அப்படியே செய்கிறார்கள். நாம் இப்போது எந்த அரசாங்கத்தின் கீழ் இருக்கிறோமோ அந்த அரசாங் கமே மாடு தின்கிற வகுப்பைச் சேர்ந்தவர்கள். அதைப்பற்றி நாம் ஒரு சிறிதும் கவலைப் படுவதில்லையே. முஸ்லீம்களும் பஞ்சமர் என்று சொல்லு வோர்களும் பெரும்பாலும் ஏழைகளாயிருப்பதால் முறையே வயதாகி சாகப்போகும் மாடுகளையும், செத்த மாடுகளையும் உபயோகிக்கிறார்கள். நம்மை ஆளும் ஜாதியாரோ நல்ல வாலிபமுள்ளதாய் - காளைத்தரமாய் - உழைக்கக் கூடியதாய் - அழகுள்ளதாய்ப் பார்த்து வாங்கி கொன்று சாப்பிடு கிறார்கள். நமது நாட்டிலிருந்து வருஷம் ஒன்றுக்கு 10 லக்ஷக்கணக்கான மாடுகளையும் பசுக்களையும் விலை போட்டு வாங்கி கப்பலேற்றி மேல் நாட்டுக்குக் கொண்டு போகிறார்கள். இவைகள் எதற்காகக் கொண்டுபோகப் படுகிறது? ஐரோப்பா தேசத்தில் பசு மடம் கட்டப்பட்டிருக்கிறதா? அல்லது உழவு வேலைக்காவது பாரமிழுக்கும் வேலைக்காவது கொண்டு போகிறார் களா? கொன்று தின்பதற்குத்தான் என்று நமது பார்ப்பனர்களுக்குத் தெரி யாதா? இதனால் இந்த ராஜாங்கத்தை ஒழித்து விட்டோமா? அல்லது வேறு மாடு தின்னாத தேசத்திற்குக் குடிபோய் விட்டோமா? பஞ்சமர்கள் என்று சொல்லுவோரையாவது மாடு தின்னும் காரணத்திற்காக, இந்துவல்ல என்கி றோமா? நமது அரசாங்கத்தாரும் நமது மதத்தாரும் செய்யும் காரியத்தை முஸ்லீம்கள் செய்தால் மாத்திரம் அவர்களோடு கலகத் திற்குப் போவது என்பதின் இரகசியம் என்ன? அல்லாமலும் ஒவ்வொரு பட்டணங்களிலும் முனிசிபாலிட்டியிலும் மாடு அறுப்பதற்கென்றே தனித் தொட்டியும், மாட்டு மாம்சம் விற்பதற்கென்றே தனி கசாப்புக் கடையும் ஏற்பாடு செய்துகொடுத்து அதினால் நாம் பணம் சம்பாதிக்கவில்லையா? இவ்வளவு காரியங்கள் நடக்கும்போதும் இவற்றிற்கு நாம் உடந்தையாய் இருக்கும் போதும் பசுக் கொலை என்பதற்குப் பொருள் என்ன?
அது போலவே மசூதி முன் மேளம் என்பதும் பொருளற்றதாகவே இருக்கிறது. ஒரு வகுப்பார் தங்கள் பள்ளியில் சுவாமியைத் தொழுவதானால் மற்றொரு வகுப்பார் தெருவில் மேளமடித்துக் கொண்டு போகக்கூடாது என்பது கொஞ்சமாவது வாதத்திற்குப் பொருத்தமானதல்ல. இது நமது பார்ப்பனர்கள் தங்கள் வீதியில் மற்ற வகுப்பார்களை நடக்கக் கூடாது என்று சொல்லுவது போலவே இருக்கிறது. ஒருவர் தொழுகைக்கும் மற்ற வகுப்பார் மேளத்திற்கும் என்ன சம்பந்தம்? மேளமடிப்பதால் கடவுளை வணங்கு வதற்கு முடியாமல் போய் விடுமென்று சொல்லுவதானால் அந்த வணக்கத் திற்கு மதிப்பு ஏது? அநேக பள்ளிவாசல்கள் சந்தைக்குப் பக்கத்திலும் அதிகமான ஜனப் புழக்கம், கூச்சல், வண்டிப் போக்குவரத்து முதலியவைகள் உள்ள தெருவிலும், சதா டிராம் வண்டி,ரயில் வண்டி, மோட்டார்கள் முதலி யன கத்திக்கொண்டு போகும் வழிகளிலும் சமுத்திர அலை சதா சர்வகாலம் இரைச்சல் போட்டுக் கொண்டிருக்கும் ஸ்தலங்களிலும், பள்ளி வாசல்களும் தொழுகைகளும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. பள்ளி வாசல்க ளுக்குப் பக்கத்தில் உள்ள இந்து, கிறிஸ்தவர்கள் முதலிய வீடுகளிலும் கோவில்களிலும் கல்யாணம், சாவு, உற்சவம் முதலியவைகள் மேளத் தோடும் வாத்தியத்தோடும் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்து வரு கின்றன. இவைகளெல்லாம் ஆnக்ஷபிக்கப்படுவதில்லை; ஆnக்ஷபிக்க முடிவதுமில்லை. இப்படியிருக்க தெருவில் மாத்திரம் வாத்தியத்தோடு போகக்கூடாது என்பது இஸ்லாம் பள்ளிக்கு இந்துக்கள் மரியாதை செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகத்தான் ஏற்படுமே அல்லாமல் தொழு கைக்கு விரோதம் என்று சொல்லுவதில் பொருளே இல்லை. இம்மாதிரி பொருளற்ற இரு விஷயங்களைத் தங்கள் தங்கள் சுயநலத்திற்காக உபயோ கப்படுத்தி பாமர ஜனங்களைக் கிளப்பி விட்டு கலகங்களை உண்டாக்கி லாபமடைகிறார்கள்.
இது நிற்க, சிலர் தென் இந்தியாவில் இவ்வித கலகம் இல்லை என்று சொல்லிக்கொண்டும் அதற்குக் காரணம் இங்கு ஜனங்கள் பரஸ்பரம் ஒற்றுமை யோடும் இருப்பதாக சொல்லியும் பாசாங்கு செய்து கொண்டும் அவ்வகுப்புக்கு எவ்வளவு கெடுதி செய்யலாமோ அவ்வளவும் செய்து வருகிறார்கள். தென் இந்தியாவில் கலகம் இல்லாதிருப்பதற்கு இந்து முஸ்லீம் பரஸ்பர நம்பிக்கையும் ஒற்றுமையும் ஒருக்காலும் காரணமே அல்ல. முஸ்லீம்களின் எண்ணிக்கைக் குறைவும் இந்துக்கள் எண்ணிக்கை அதிக மும்தான் முக்கியக் காரணம். அப்படிக்கில்லாமல் சம எண்ணிக்கையோ அல்லது இப்போதிருப்பதை விட இன்னும் ஒரு பங்கு அதிகமாகவோ இருந்திருந்தால் தென்னாட்டு இந்து முஸ்லீம் ஒற்றுமை தெரிந்திருக்கும். நமது பார்ப்பனர் தங்கள் பணத்திமிரால் இரண்டொரு மகமதியரை விலைக்கு வாங்கி அவர்களைக் கொண்டு இந்துக்களின் ஓட்டுப் பெற இந்து விக்கிர கங்களை வணங்கச் செய்வதும் நெற்றியில் விபூதி குங்குமம் அணியச் செய் வதும் முஸ்லீம் சமூக நன்மைக்கும் மத உரிமைக்கும் விரோதமாய் அவர் களை பேசச் செய்வதும் எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை வேண்டாம் என்று சொல்லச் செய்வதுமாய் நடந்து கொண்டிருந்தால் யார்தான் சகிப்பார்கள். இது எல்லாம் அடியோடு தப்பு என்று நாம் சொல்லவில்லை. ஆனாலும் சரியோ தப்போ அவரவர்களுக்கு அவரவர் மதக் கொள்கையும் அவரவர் நம்பிக்கையுமேதான் பிரதானமே தவிர வேறொருவரின் உபதேசம் பிரதானமல்ல. ஆதலால் நமது நாட்டில் முஸ்லீம் எண்ணிக்கைக் குறைவாயிருப்பதாலேயே அவர்களை எப்படி வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாம் என்று எண்ணினாலும் அதன் கர்மபலனை அடைய வேண்டி வந்தே தீரும். உண்மையிலேயே நமது பார்ப்பனர்கள் தாங்கள் முன்னால் ஒப்புக்கொண்ட வகுப்புவாரிப் பிரதிநி தித்துவத்தை இப்போது தங்களுக்குப் பலம் அதிகம் ஏற்பட்டு விட்டதென்கிற அஹம்பாவத்தால் எதிர்ப்பார்களேயானால் முன்னால் ஒப்புக் கொண்ட பார்ப்பனரல்லாதாரிலேயே சிலரை விலைக்கு வாங்கி அவர்களைக் கொண்டே விஷமப் பிரசாரம் செய்யச் செய்வார்களேயானால் முடிவில் இந்து முஸ்லீம் கலகமாத்திரமல்ல, பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் கலவரம் கோஹட், கல்கத்தா முதலிய இடங்களைப் போலும் அதற்கு மீறியும் கலவரம் நடந்துவிடுமோ யென்று கவலைப்படுகிறோம். ஆனால் இவ்வளவு அக்கிரமங்கள் செய்யப்பட்டும் இன்னும் நடைபெறாமல் இருப்பதற்குக் காரணம் என்ன என்று சிலர் கருதுவார்கள். இதன் இரகசியங்களும் சூழ்ச்சிக ளும் இன்னும் பொது ஜனங்களுக்கு முழுதும் தெரியத்தக்க காலம் ஏற்பட வில்லை. அல்லாமலும் பார்ப்பனரைப்போல் சில ஆட்களை விலைக்கு வாங்கி வசப்படுத்திவிட பார்ப்பனரல்லாத இதரர்களும் முஸ்லீம்களும் இன் னும் மனம் துணியவில்லை; பாவ புண்ணியத்தை மதிக்கிறார்கள். அப்பேர்ப் பட்ட சமயம் வரும் காலத்தில் இப்போது நமது பார்ப்பனர்களுடன் திரிபவர் களும் அவர்களால் தலைவர்களானவர்களும் அவர்களைக் கை விட்டு விட்டு அவரவர்கள் வகுப்போடு சேர்ந்துக்கொள்ளுவார்களே தவிர இவர்க ளுக்கு உதவியாய் வரவு மாட்டார்கள்; வந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது என்கிற சத்தியத்தை இப்போதே உணர்வது நலம் என்றே நினைக்கிறோம்.
குடி அரசு - கட்டுரை - 11.07.1926
தேசத்தின் விடுதலைக்காகவென்றும் சுதந்திரத்திற்காகவென்றும் படித்த வகுப்பார்களால் (பார்ப்பனர்களால்) கிளர்ச்சி ஏற்படும் போதெல்லாம் இந்து முஸ்லீம் கலவரங்களும் அபிப்பிராய பேதங்களும் ஏற்படாமலிருப்பதில்லை.
ஆனால் மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ் ஏற்பட்டிருந்த ஒத்துழையாமையின்போது மாத்திரம் கலவரமும் அபிப்பிராய பேதமும் இல்லாமல் இருந்ததோடல்லாமல் நாம் அறிய இதுவரை நமது நாட்டில் ஏற்பட்டிராத இந்து முஸ்லீம் பரஸ்பர நம்பிக்கையும் அபிப்பிராய பேதமின்மையும் ஒற்றுமையும் சகோதரத் தன்மையும் தலைசிறந்து விளங்கிற்று.
ஆனால் இதற்கு சில பொறுப்பற்றவர்கள், அது சமயம் மகமதியர்களுக்குக் கிலாபத் சங்கடம் இருந்ததால் அவர்கள் இந்துக்களோடு ஒத்திருந்தார்கள் என்ற உள் எண்ணம் கற்பிக்கிறார்கள். அதற்கு ஒரு சிறிதும் ஆதார மில்லை என்றே சொல்லுவோம். ஒத்துழையாமை மகாத்மாவினால் அமுலில் ஆரம்பிக்கும் காலத்திலேயே கிலாபத்து விஷயம் பெரும்பாலும் முடிவ டைந்து விட்டது.
அதோடு துருக்கி நாட்டில் கமால் பாஷாவின் ஆதிக்கம் ஏற்பட்டதும் கிலாபத்து விஷயம் வெளிநாட்டு மகமதியர்களால் கைவிடப்பட்டும் போய் விட்டது. ஆகவே, மகமதியர்கள் அந்த எண்ணம் கொண்டே இந்துக்களோடு கலந்திருந்தார்கள் என்று சொல்ல முடியாது. அப்படி இருக்க ஒத்துழையாமையின் போது மாத்திரம் ஏன் தேசத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்பட்டது. மற்ற காலங்களில் ஏன் கலவரமேற்படுகிறது என்று ஒவ்வொரு இந்து முஸ்லீமும் யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது. படித்த வர்கள் என்று சொல்லப்படும் வகுப்பினரான பார்ப்பனரும் மற்றையோரும் தேசீயக் கிளர்ச்சி என்கிற பெயராலும் காங்கிரஸ் என்னும் பெயராலும் செய்து வந்த காரியங்களெல்லாம் தன் வகுப்பாரின் சுய நன்மையைக் கோரியும் அதில் கலந்த மற்றவர்களும் தங்கள் தங்கள் தனித்த நலத்திற்காகவும் உழைப்பதாயிருந்ததால், மற்ற வகுப்பார்கள் தாங்கள் அக்கிளர்ச்சியில் சம்மந்தப்பட வில்லை என்று காட்டிக் கொள்வதற்காகவும், அக் கிளர்ச்சியின் பயனாய் அவ் வகுப்பாருக்கு ஏதாவது பதவியோ நிர்வாக அதிகாரமோ ஏற்படுமானால் அவை தங்கள் சமூகத்திற்கு (முஸ்லீம் சமூகத்திற்கு) சரியான பங்கு அளிக்கப்படாமல் போவதோடு, ஒரு சமூகம் மாத்திரம் முன்னேறி விட்டால் மற்ற சமூகம் அதனால் அழுத்தப்பட நேரிடும் என்றும் பயந்தே முட்டுக்கட்டையாய் நிற்க நேர்ந்தது. அதே காரணம்தான், வங்காள பிரிவினையின்போது முஸ்லீம்கள் இந்துக்களிடம் நம்பிக்கை கொள்ளாதிருந்ததும், பிறகு, லக்னோ காங்கிரசில் முஸ்லீம்கள் இந்துக்களை நம்பும் படியாக ஒப்பந்தமும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் ஏற்றுக் கொண்டதால் இந்துக்களிடம் அவநம் பிக்கையில்லாமலிருந்ததும் எல்லோருமறிந்த விஷயம்.
பின்னும் ரௌலட் சட்டத்தின்போது ஏற்பட்ட கிளர்ச்சியில் முஸ்லீம்கள் கலந்துகொண்டு மகாத்மாவோடு ஒத்துழைத்ததற்கு காரணம், மகாத்மா முஸ்லீம்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானதோடு இரு சமூகத்திற்கும் சமத்துவமாய் விடுதலையளிக்கத்தக்க திட்டங்களோடும் உழைத்ததாலும் மகாத்மா திட்டங்களில் எது நிறைவேறினாலும் அது பெரும்பாலும் முஸ்லீம்களுக்கும் சம பாகம் கிடைக்கக் கூடியதாகவும், ஒருவரை ஒருவர் மோசம் செய்ய முடியாததுமான திட்டங்களாய் இருந்ததாலும் அவற்றில் யாரும் சந்தேகப்படுவதற்கே வழியில்லாமல் போனதோடு இத்திட்டங்கள் நிறைவேறக்கூடிய நிலைமையிலும் இருந்தது.
அந்தப்படி மகாத்மா திட்டங்கள் முழுவதும் நிறைவேறி விட்டால், சில வகுப்பார் முக்கியமாய் பார்ப்பனர்கள் இப்போது அனுபவிக்கும் அதிக சுதந்திரமும், ஏகபோக ஆதிக்கமும் அனுபவிக்க முடியாதாகையால் இத்திட்டங்களுக்கு விரோதமாக பார்ப்பனர்கள் கிளம்ப வேண்டியதாயிற்று. இதன் பலனாக தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள், வடநாட்டுப் பார்ப்பனர்களாகிய பண்டித மாளவியாவையும் மகாராஷ்டிரப் பார்ப்பனரையும் தூண்டி விட்டு அவர்களுக்கு உடந்தையாயிருந்து, மகாத்மாவையும் அவரது திட்டத்தையும் எதிர்க்க வேண்டியதாயிற்று. மகமதிய சமூகம் எண்ணிக்கையில் மிகுந்திருக்கிற மாகாணமாகிய பஞ்சாப்பும், வங்காளமும் இத்துடன் சேர வேண்டியதாயிற்று. லாலா லஜபதிராயும் தேசபந்து தாசும் மகாத்மாவையும் அவரது திட்டத்தையும் எதிர்க்கவும் அழிக்கவும் நேர்ந்தது. இந்த இரகசியத்தை அறிந்த பின்புதான் மகாத்மாவின் முதல் சிஷ்யராகவும் சட்டாம்பிள்ளை யாகவுமிருந்த ஸ்ரீமான் சக்கிரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரும் கடைசியாக அவர்களுக்கு உள்ளாளாயிருந்ததின் இரகசியமும் இந்த உணர்ச்சி ஏற்பட்டதனால்தான். இந்த இரகசியம் வெளியாகாமலிருப்பதற்கு “பார்ப்பனர்கள் கூடி இப்படிச் செய்கிறார்கள்” என்பதை பொது ஜனங்கள் அறியாமலிருப்பதற்கு தேசபந்து தாசைத் தலைவராக்கவேண்டிய அவசியம் நமது பார்ப்பனர்களுக்கு ஏற்பட்டது. நமது மாகாணத்தில் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைக் கொல்ல - ஜஸ்டிஸ் கட்சியைக் கொல்ல - பார்ப்பனரல்லாதாரிலேயே முதலியார் என்றும், பிள்ளை என்றும், செட்டியார் என்றும், நாயுடு என்றும், நாயக்கர் என்றும், பாவலர் என்றும், சாயபு என்றும் அப்போதைக்கப்போது எப்படித் தலைவர்களை சிருஷ்டித்துக் கொள்ளுகிறார்களோ அதுபோல் இந்தியாவுக்கே தேச பந்துவைத் தலைவராக்கி அவருக்கு வேண்டிய விளம்பரம் கொடுத்து அவர் கையாலேயே ஒத்துழையாமைக்குக் கொள்ளி வைக்கச் செய்து அவர் வாயாலேயே ஒத்துழைப்பை வெளியாக்கச் செய்து ஒத்துழையாமையும் தேசபந்துவும் மறைந்த பிறகு வார்த்தைக்கு வார்த்தை ஒத்துழையாமையையும் தேசபந்து பெயரையும் சொல்லிக்கொண்டு தங்கள் ஜாதி ஆக்கம் பெற வேட்டை ஆடுகிறார்கள்.
மகாத்மாவையும் அவர் திட்டத்தையும் ஒழிக்கவே பண்டித மாள வியா இந்து முஸ்லீம் கலகத்தை ஆரம்பிக்கக் கருதி இந்து மகாசபை என்று கிளப்பினார். ஒத்துழையாமைக்கு சில முஸ்லீம்கள் அனுகூலமாயிருந்ததால் அவர்களில் சிலரைக் கலைத்துத் தங்களுடன் சேர்த்துக் கொள்ளுவதற்காகவே சென்னையில் சில ஜனாப்களை ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் சேர்த் துக் கொண்டது போல் வங்காளத்தில் சில ஜனாப்களையும் மௌல்வி களையும் சுவாதீனப்படுத்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவங் கொண்ட வங் காள இந்து முஸ்லீம் ஒப்பந்தமொன்றை தேசபந்து தாஸ் ஏற்படுத்தினார். இவ்வொப்பந்தத்தை தேசபந்து காக்கினாடா காங்கிரசில் பிரேரேபித்தபோது இதை ஆமோதித்தவர் யாரென்று வாசகர்கள் அறிய ஆசைப்படுவார்கள். ஆமோதித்தவர் யாரென்றால் தமிழ்நாட்டுக் காந்தியாகிய ஸ்ரீமான் சி. இராஜகோபாலாச்சாரியாராகும். எந்த இராஜகோபாலாச்சாரியார் என்று கேட்பார்களேயானால் “வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இந்தியாவுக்குக் கூடாது; அது ஒற்றுமையையும் விடுதலையையும் அழிக்கும்; வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பது பார்ப்பனர்களை நசுக்குவதற்காக ஏற்பட்டது” என்பது போன்ற பத்து கற்பனைகள் எழுதி வருகிறாரே அந்த ஸ்ரீமான் இராஜகோபா லாச்சாரியார்தான். இன்னும் கொஞ்சம் விவரமாய்த் தெரிய வேண்டுமானால் நமது நாட்டில் ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்ட போது அதற்கெதிரிடையாய் சில பார்ப்பனரல்லாதாரைக் கொண்டே சென்னை மாகாணச் சங்கம் என்பதாக ஒன்றை ஏற்படுத்தி அதில் தாங்களும் கலந்து கொண்டு பார்ப்பனரல்லாதாருக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கொடுப்பதில் எங்களுக்கு ஆnக்ஷ பனையில்லை. ஆனால் அரசியலில் காங்கிரசை ஏற்றுக் கொண்டால் போதும் என்று சொல்லியும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை அப்போது ஒப்புக் கொண்டு காங்கிரஸ் திட்டத்திலும் தேசீய சங்க (நேஷனலிஸ்ட் கான்பரன்ஸில்) த்திலும் பார்ப்பனரல்லாதாருக்கு இத்தனை ஸ்தானம் என்றும் இத்தனை ஸ்தானங்களுக்குக் குறையாமல் என்றும் வேலைத் திட்டம் வெளியாக்கிவிட்டு இப்போது பார்ப்பனரல்லாதாருக்குள் கட்சி ஏற்படுத்தி அவர்களுக்கும் ஒற்றுமைக் குறைவு உண்டாகும்படி செய்து விட்டு “வகுப்புவாரி பிரதிநிதித் துவம் தேசத்தைக் கெடுக்கும் பிசாசு” என்கிறாரே அந்த ஸ்ரீமான் இராஜ கோபாலாச்சாரியாரால் ஆமோதிக்கப்பட்டு, வேறு பல ஆட்களை விட்டு அதை தோற்கடிக்கச் செய்து இப்போது ஒத்துழையாமை அடியோடு நசுக்கப் பட்டுப் போனபின், கல்கத்தா ஒப்பந்தம் கூடாது என்று ஒரு கக்ஷியும், அதைப்பற்றி பேசவே கூடாது என்று ஒரு கக்ஷியுமாய் இருவரும் சேர்ந்து அதைக் கொல்ல நினைப்பதின் ரகசியமும் இதுதான். ஆகவே ஒத்துழையாமை ஒழிந்து விட்டதாலும் மகாத்மா தலைமை ஸ்தானத்தில் இருந்து விலகி விட்டதாலும் அந்த ஸ்தானங்களுக்கு சுயநலமும் பார்ப்பன ஆதிக்கமும் வந்து மகமதிய சமூகத்திற்கு இதற்கு முன் ஏற்பட்டிருந்த நன்மைகளையும் அழிக்க சில முஸ்லீம்களை விலைக்கு வாங்கி அவர்களை உபயோகித்துக் கொள்வதாலும், அவநம்பிக்கையும் ஜாக்கிரதையும் மகமதிய சமூகத்திற்கு அவசியமாகி விட்டது. இதன் பலனாய் எங்குப் பார்த்தாலும் இந்து முஸ்லீம் கலகங்கள் ஏற்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுப் போய் விட்டது. ஒரு பக்கம் பண்டித மாளவியா‘உரிமை’ ‘உரிமை’ என்று சொல்லிக் கொண்டு இந்துக்களுக்கு முஸ்லீம்கள் பேரில் ஆத்திரம் உண்டாகும்படி பிரசாரம் செய்வதும் இதை எதிர்க்கவேண்டி மற்றொரு பக்கம் மகமதிய தலைவர்கள் என்போர் ‘மதம் மதம்’ என்று சொல்லிக்கொண்டு இந்துக்கள் மீது துவேஷம் உண்டாகும்படி பிரசாரம் செய்வதுமாய் ஏற்பட்டுப் போய்விட்டது. இருவர் சொல்லிக் கொள்ளும் உரிமையிலும் மதத்திலும் உண்மையான தத்துவம் இருப்பதாக நாம் நினைக்கவில்லை. பசுக் கொலை யைப் பற்றி இந்துக்கள் முஸ்லீம்களை உபத்திரவிப்பது அனாவசியமென்றே கருதுகிறோம். முஸ்லீம்கள் பசுக் கொலை செய்வதால் இந்துக்களுக்கு எந்த விதக் கஷ்டமோ நஷ்டமோ இருக்கிறது என்பது நமக்கு விளங்கவில்லை. இந்துக்களுக்கு எப்படி ஒரு ஆட்டையோ, கோழியையோ, பன்றியையோ விலை போட்டு வாங்கி வளர்த்து கொன்று தின்பதற்கு பாத்தியமுண்டோ, அதுபோல் முஸ்லீம் களுக்கும் பசுவையோ, ஆட்டையோ, கோழியையோ விலை போட்டு வாங்கி கொன்று தின்னப் பாத்தியமுண்டு. இப்படி இருக்க, முஸ்லீம்களுக்கு மாத்திரம் ஒரு ஜெந்து விஷயத்தில் நிர்பந்தம் ஏற்படுத்துவதின் பொருள் என்ன? மாடு சாப்பிடுவதும் மாட்டைக் கொல்லுவதும் நமது தேசத்தில் முஸ்லீம்கள் மாத்திரம் செய்யவில்லை. நமது நாட்டில் பஞ்சமர் என்று சொல்லுவோரில் கோடிக்கணக்கான பேர்கள் அப்படியே செய்கிறார்கள். நாம் இப்போது எந்த அரசாங்கத்தின் கீழ் இருக்கிறோமோ அந்த அரசாங் கமே மாடு தின்கிற வகுப்பைச் சேர்ந்தவர்கள். அதைப்பற்றி நாம் ஒரு சிறிதும் கவலைப் படுவதில்லையே. முஸ்லீம்களும் பஞ்சமர் என்று சொல்லு வோர்களும் பெரும்பாலும் ஏழைகளாயிருப்பதால் முறையே வயதாகி சாகப்போகும் மாடுகளையும், செத்த மாடுகளையும் உபயோகிக்கிறார்கள். நம்மை ஆளும் ஜாதியாரோ நல்ல வாலிபமுள்ளதாய் - காளைத்தரமாய் - உழைக்கக் கூடியதாய் - அழகுள்ளதாய்ப் பார்த்து வாங்கி கொன்று சாப்பிடு கிறார்கள். நமது நாட்டிலிருந்து வருஷம் ஒன்றுக்கு 10 லக்ஷக்கணக்கான மாடுகளையும் பசுக்களையும் விலை போட்டு வாங்கி கப்பலேற்றி மேல் நாட்டுக்குக் கொண்டு போகிறார்கள். இவைகள் எதற்காகக் கொண்டுபோகப் படுகிறது? ஐரோப்பா தேசத்தில் பசு மடம் கட்டப்பட்டிருக்கிறதா? அல்லது உழவு வேலைக்காவது பாரமிழுக்கும் வேலைக்காவது கொண்டு போகிறார் களா? கொன்று தின்பதற்குத்தான் என்று நமது பார்ப்பனர்களுக்குத் தெரி யாதா? இதனால் இந்த ராஜாங்கத்தை ஒழித்து விட்டோமா? அல்லது வேறு மாடு தின்னாத தேசத்திற்குக் குடிபோய் விட்டோமா? பஞ்சமர்கள் என்று சொல்லுவோரையாவது மாடு தின்னும் காரணத்திற்காக, இந்துவல்ல என்கிறோமா? நமது அரசாங்கத்தாரும் நமது மதத்தாரும் செய்யும் காரியத்தை முஸ்லீம்கள் செய்தால் மாத்திரம் அவர்களோடு கலகத்திற்குப் போவது என்பதின் இரகசியம் என்ன? அல்லாமலும் ஒவ்வொரு பட்டணங்களிலும் முனிசிபாலிட்டியிலும் மாடு அறுப்பதற்கென்றே தனித் தொட்டியும், மாட்டு மாம்சம் விற்பதற்கென்றே தனி கசாப்புக் கடையும் ஏற்பாடு செய்துகொடுத்து அதினால் நாம் பணம் சம்பாதிக்கவில்லையா? இவ்வளவு காரியங்கள் நடக்கும்போதும் இவற்றிற்கு நாம் உடந்தையாய் இருக்கும் போதும் பசுக் கொலை என்பதற்குப் பொருள் என்ன?
அது போலவே மசூதி முன் மேளம் என்பதும் பொருளற்றதாகவே இருக்கிறது. ஒரு வகுப்பார் தங்கள் பள்ளியில் சுவாமியைத் தொழுவதானால் மற்றொரு வகுப்பார் தெருவில் மேளமடித்துக் கொண்டு போகக்கூடாது என்பது கொஞ்சமாவது வாதத்திற்குப் பொருத்தமானதல்ல. இது நமது பார்ப்பனர்கள் தங்கள் வீதியில் மற்ற வகுப்பார்களை நடக்கக் கூடாது என்று சொல்லுவது போலவே இருக்கிறது. ஒருவர் தொழுகைக்கும் மற்ற வகுப்பார் மேளத்திற்கும் என்ன சம்பந்தம்? மேளமடிப்பதால் கடவுளை வணங்குவதற்கு முடியாமல் போய் விடுமென்று சொல்லுவதானால் அந்த வணக்கத்திற்கு மதிப்பு ஏது? அநேக பள்ளிவாசல்கள் சந்தைக்குப் பக்கத்திலும் அதிகமான ஜனப் புழக்கம், கூச்சல், வண்டிப் போக்குவரத்து முதலியவைகள் உள்ள தெருவிலும், சதா டிராம் வண்டி,ரயில் வண்டி, மோட்டார்கள் முதலியன கத்திக்கொண்டு போகும் வழிகளிலும் சமுத்திர அலை சதா சர்வகாலம் இரைச்சல் போட்டுக் கொண்டிருக்கும் ஸ்தலங்களிலும், பள்ளி வாசல்களும் தொழுகைகளும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. பள்ளி வாசல்களுக்குப் பக்கத்தில் உள்ள இந்து, கிறிஸ்தவர்கள் முதலிய வீடுகளிலும் கோவில்களிலும் கல்யாணம், சாவு, உற்சவம் முதலியவைகள் மேளத் தோடும் வாத்தியத்தோடும் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்து வரு கின்றன. இவைகளெல்லாம் ஆnக்ஷபிக்கப்படுவதில்லை; ஆnக்ஷபிக்க முடிவதுமில்லை. இப்படியிருக்க தெருவில் மாத்திரம் வாத்தியத்தோடு போகக்கூடாது என்பது இஸ்லாம் பள்ளிக்கு இந்துக்கள் மரியாதை செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகத்தான் ஏற்படுமே அல்லாமல் தொழுகைக்கு விரோதம் என்று சொல்லுவதில் பொருளே இல்லை. இம்மாதிரி பொருளற்ற இரு விஷயங்களைத் தங்கள் தங்கள் சுயநலத்திற்காக உபயோகப்படுத்தி பாமர ஜனங்களைக் கிளப்பி விட்டு கலகங்களை உண்டாக்கி லாபமடைகிறார்கள்.
இது நிற்க, சிலர் தென் இந்தியாவில் இவ்வித கலகம் இல்லை என்று சொல்லிக்கொண்டும் அதற்குக் காரணம் இங்கு ஜனங்கள் பரஸ்பரம் ஒற்றுமை யோடும் இருப்பதாக சொல்லியும் பாசாங்கு செய்து கொண்டும் அவ்வகுப்புக்கு எவ்வளவு கெடுதி செய்யலாமோ அவ்வளவும் செய்து வருகிறார்கள். தென் இந்தியாவில் கலகம் இல்லாதிருப்பதற்கு இந்து முஸ்லீம் பரஸ்பர நம்பிக்கையும் ஒற்றுமையும் ஒருக்காலும் காரணமே அல்ல. முஸ்லீம்களின் எண்ணிக்கைக் குறைவும் இந்துக்கள் எண்ணிக்கை அதிக மும்தான் முக்கியக் காரணம். அப்படிக்கில்லாமல் சம எண்ணிக்கையோ அல்லது இப்போதிருப்பதை விட இன்னும் ஒரு பங்கு அதிகமாகவோ இருந்திருந்தால் தென்னாட்டு இந்து முஸ்லீம் ஒற்றுமை தெரிந்திருக்கும். நமது பார்ப்பனர் தங்கள் பணத்திமிரால் இரண்டொரு மகமதியரை விலைக்கு வாங்கி அவர்களைக் கொண்டு இந்துக்களின் ஓட்டுப் பெற இந்து விக்கிர கங்களை வணங்கச் செய்வதும் நெற்றியில் விபூதி குங்குமம் அணியச் செய்வதும் முஸ்லீம் சமூக நன்மைக்கும் மத உரிமைக்கும் விரோதமாய் அவர் களை பேசச் செய்வதும் எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை வேண்டாம் என்று சொல்லச் செய்வதுமாய் நடந்து கொண்டிருந்தால் யார்தான் சகிப்பார்கள். இது எல்லாம் அடியோடு தப்பு என்று நாம் சொல்லவில்லை. ஆனாலும் சரியோ தப்போ அவரவர்களுக்கு அவரவர் மதக் கொள்கையும் அவரவர் நம்பிக்கையுமேதான் பிரதானமே தவிர வேறொருவரின் உபதேசம் பிரதானமல்ல. ஆதலால் நமது நாட்டில் முஸ்லீம் எண்ணிக்கைக் குறைவாயிருப்பதாலேயே அவர்களை எப்படி வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாம் என்று எண்ணினாலும் அதன் கர்மபலனை அடைய வேண்டி வந்தே தீரும். உண்மையிலேயே நமது பார்ப்பனர்கள் தாங்கள் முன்னால் ஒப்புக்கொண்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை இப்போது தங்களுக்குப் பலம் அதிகம் ஏற்பட்டு விட்டதென்கிற அஹம்பாவத்தால் எதிர்ப்பார்களேயானால் முன்னால் ஒப்புக் கொண்ட பார்ப்பனரல்லாதாரிலேயே சிலரை விலைக்கு வாங்கி அவர்களைக் கொண்டே விஷமப் பிரசாரம் செய்யச் செய்வார்களேயானால் முடிவில் இந்து முஸ்லீம் கலகமாத்திரமல்ல, பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் கலவரம் கோஹட், கல்கத்தா முதலிய இடங்களைப் போலும் அதற்கு மீறியும் கலவரம் நடந்துவிடுமோ யென்று கவலைப்படுகிறோம். ஆனால் இவ்வளவு அக்கிரமங்கள் செய்யப்பட்டும் இன்னும் நடைபெறாமல் இருப்பதற்குக் காரணம் என்ன என்று சிலர் கருதுவார்கள். இதன் இரகசியங்களும் சூழ்ச்சிகளும் இன்னும் பொது ஜனங்களுக்கு முழுதும் தெரியத்தக்க காலம் ஏற்பட வில்லை. அல்லாமலும் பார்ப்பனரைப்போல் சில ஆட்களை விலைக்கு வாங்கி வசப்படுத்திவிட பார்ப்பனரல்லாத இதரர்களும் முஸ்லீம்களும் இன் னும் மனம் துணியவில்லை; பாவ புண்ணியத்தை மதிக்கிறார்கள். அப்பேர்ப்பட்ட சமயம் வரும் காலத்தில் இப்போது நமது பார்ப்பனர்களுடன் திரிபவர் களும் அவர்களால் தலைவர்களானவர்களும் அவர்களைக் கை விட்டு விட்டு அவரவர்கள் வகுப்போடு சேர்ந்துக்கொள்ளுவார்களே தவிர இவர்களுக்கு உதவியாய் வரவு மாட்டார்கள்; வந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது என்கிற சத்தியத்தை இப்போதே உணர்வது நலம் என்றே நினைக்கிறோம்.
(குடி அரசு - கட்டுரை - 11.07.1926)
Pin It