தொழிற்சாலைகள், தொழிற்கூடங்களில் பெண் தொழிலாளருக்கு தனி குளியல் அறைகள், கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அவை பூட்டுகள் உள்ள அறைகளாக இருக்க வேண்டும்.

முப்பதுக்கும் மேற்பட்ட மகளிர் பணியாற்றும் தொழிற்சாலைகளில் குழந்தைகள் காப்பகம் இருக்க வேண்டும். காலை ஆறு மணி முதல் மாலை ஏழு மணிவரை தான் வேலை நேரமாக இருக்க வேண்டும்.

மகளிரை ஓடிக்கொண்டிருக்கும் எந்திரத்தை சுத்தப்படுத்தும்படி, எண்ணையைத் துடைக்கும்படி கூறக்கூடாது.

மகளிர் ஒரு வாரத்தில் 48 மணிநேரத்திற்கு மேல் பணியாற்றும்படி கட்டாயப்படுத்தக் கூடாது.

ஒரே நேரத்தில் தொடர்ந்து 5 மணி நேரத்திற்கு மேல் பணியாற்றும்படி கட்டாயப்படுத்த முடியாது.

பூமிக்கடியில் நடைபெறும் எந்தப் பணியிலும் மகளிரை நியமிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

Pin It