பூமியின் தரைக்குக் கீழே 25 கிமீ அடியில் ஏகப்பட்ட அழுத்தத்தில் தண்ணீர் இருக்கிறது. அதைச் சுற்றியுள்ள பாறைகள் தண்ணீரை நசுக்கியபடியுள்ளன. அதனால் தண்ணீரானது வழுக்கும் கிரீஸ் மாதிரி மாறிவிடுகிறது. பாறைகள் இதனால் ஒன்றன் மேல் ஒன்று சுலபமாக நழுவி நகருகின்றன. லேசான விசை கொடுத்தாலும்கூட உடனே நிலநடுக்கம் ஏற்படுகிறது.rocks_317

நிலாவும் சூரியனும் நேர்க்கோட்டில் வரும்போது அவை தரையை இழுக்கின்றன. சில பாறைகள் நழுவி நில நடுக்கங்கள் ஏற்பட அந்த இழுப்பே போதும் என்று கலிபோர்னிய பல்கலைக்கழக நிலவியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

சேன் ஆன்டிரிஸ் பிளவு என்பது பூமியின் தரையில் காணப்படும் தழும்பு போன்ற கீரல். இந்தத் தழும்பு தரையின் அடியிலிருந்து மெல்ல மேலெழும்பிக் கொண்டிருப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக இதன் உயரம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதன் வளர்ச்சிக்குக் காரணம் நிலாவின் இழுப்பே என்று சொல்கிறார்கள்.

படத்தில் பார்ப்பது அந்தத் தழும்பின் ஒரு சின்ன பகுதிதான். அதன் முழுநீளத்தையும் இங்கே காட்ட முடியாது. அம்மிக் குழவி மாதிரி காணப்படும் பாறைகள் என்றோ நடந்த எரிமலைக்குழம்பினால் உருவானவை.

- முனனவர் க.மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It