தனித்த வேதிப்புலன் உயிர்க்கலன்கள்: (Solitary chemosensory cells)

படிமலர்ச்சிப் போக்கில் முதலில் தனித்த வேதிப்புலன் உயிர்க்கலன் உடலில் ஆங் காங்கே தோன்றியிருக்க வேண்டும். பிறகு அவை கூடுதலாகத் தேவைப்படும் இடங்களில் வேதிப்புலன் கொத்துகளாகி இரண்டும் இணைந்த விரவு நிலை வேதிப்புலன் மண்டலம் உள்ளுறுப்புகளில் ஏற்பட்டிருக்க வேண்டும். பிறகு தனிப்புலன் உறுப்பு தோன்றிய நிலையில் இவை அவ்வுறுப்புகளின் வேதிப்புலன் உணரிகளாக உருமாற்றம் கண்டுள்ளன. குறிப்பாக, மோப்ப, சுவை, புலன் உறுப்புகளில் இவை புறச்சூழலின் புலன் வாங்கும் அல்லது பெறும் உணரிகளாக  உருமாற்றமுற்றன.

இந்தப் புலன் உறுப்பு படி மலர்ச்சி ஐம்புலன்களுக்கும் கூடப்பொருந்தும். தனித் தனி புலன் கலன்கள் பொதுவான உயிர்க்கலன் களிலிருந்து தகவமைந்து தோன்றுகின்றன. பிறகு அவை புலன் கொத்துகளாக உடலின் குறிப்பிட்ட பகுதிகளில் திரண்டு புலன் கொத்துக்கள் தோன்றுகின்றன. புலன் கலன் களும் கொத்துகளும் மயங்கிய விரவு நிலை புலன் மண்டலம் முதலில் தோன்றுகின்றது. பிறகே இவை புலன் உறுப்புகளான கண், காது, மூக்கு., நாக்கு போன்றவை உருவானதும் புலன் வாங்கிகளாக, அதாவது தனிக் கூறுகளாக அந்த உறுப்புகளில் உருமாறுகின்றன. எனவே, உயிரினப் படி மலர்ச்சியில் ஐம்புலன் விரிவாக் கம் என்பது மிகவும் சிக்கலான சூழல் ஊடாட்ட வினையில் ஏற்படுவதாகும். எனவே ஐம்புலன் வளர்ச்சி என்பது தனித்தனிப் புலன் என நேர்க் கோட்டில்  உருவாவதில்லை.

மின்னணுவியல் மூக்கு: (Electronic Nose)

1.0. அறிமுகம்:

மின்னணுவியல் மூக்கு என்பது மணத்தை அல்லது  நறுமணத்தைக் (flavour) கண்டறியும் கருவியாகும்.

தொழில் வணிக வளர்ச்சிக்காகக் கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்த செறிந்த ஆராய்ச்சியாக  மின்னணுவியல் புலனுணர்வு தொழில் நுட்பமும், கருவிகளும் உருவாக்கப்பட்டுள் ளன.  மின்னணுவியல் புலனுணர்வு என்பது மனிதப் புலனுணர்வைத் தக்க உணரிகளையும் உணர்ந்தறிதல் நுட்ப அமைப்புகளையும் கொண்டு மீளாக்கம் செய்யும் வழி முறை யாகும். 1982ஆம் ஆண்டிலிருந்தே மணத்தை யும், நறுமணத்தையும் ஒற்றி உணர்ந்தறியும் மின்னணுவியல் மூக்குக்கான தொழில் நுட்ப ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மணத்தையும், நறுமணத்தையும் ஒற்றி உணர்ந்தறியும் மின்னணுவியல் மூக்குக்கான தொழில் நுட்ப ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. மணத்தையும், நறுமணத்தை யும் செயற்கையாக உணர்ந்தறியும் செயல் முறையின் கட்டங்கள் மனித மோப்ப நிகழ்வின் கட்டங்களையே பின்பற்றுகின்றன.

அவையாவன, 1) மணத்தை இனங்காணல், 2) ஒப்பிடல், 3) அளவிடல், 4) தேவைக்கேற்ப பயன்படுத்தல் என்பனவாகும்.  மின்னணு மூக்கும், இச்செயல் முறைகளைத் திறம்பட நிறைவேற்ற வல்லதாக உள்ளது. இது அண்மையில் மிகப்பெரும் வளர்ச்சியை எய்தியுள்ளதால் தொழிலகங்களில் பரவலாக் கும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. என்றாலும் மனித மோப்பம் என்பது இன்ப அல்லது புலன் துய்ப்பு நாட்டத்தால் படி மலர்ந்து கூர்மையுற்றதாகும். மேலும், ஒவ்வொரு தனியர்க்கு வேறுபாடுடையதாகும்.

2.0. மணத்தைப் பகுத்தாயும் பிற நுட்பங்கள்:

அனைத்துத் தொழிலகங்களிலும் மணம் மதிப்பிடல் மனிதப் புலன் உணர்வாலேயே பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. வேதி உணரிகளும் வளிம எடைப் பகுப்பு முறையும் கூட அண்மையில் பயன்பாட்டுக்கு வந்துள் ளன.  பின்னர்க் குறிப்பிட்ட முறை ஆவியாகும் வளிமச் சேர்மங்களைப் பற்றிய தகவல்களைத் தருகிறதே ஒழிய, பகுப்பாய்வு முடிவுகளுக்கும் மணமறிந்துணர்தலும் மான ஒப்புரவு நேரடி யாக அமையாமல் பல மணக்கூறுகளின் இடைவினைகளால் குழப்பப்படுகிறது.

3.0. மின்னணுவியல் மூக்கின் செயல்பாட்டு நெறிமுறை:

மணமும், நறுமணமும் ஒருங்கிணைந்த முறையில் கண்டறியும் மனித மோப்பத்தை உருவகிக்க மின்னணுவியல் மூக்கு உருவாக்கப் பட்டது. மனித மோப்பம் மணத்தையும், நறுமணத்தையும் பிரிக்காமல் முழுமை வாய்ந்த பதிவு அடையாளமாக இனங் காண் கிறது.

மின்னணுவியல் மூக்கில் மூன்று பகுதிகள்(உறுப்புகள்)  உள்ளன. அவையாவன: அ) பதக்கூறு வழங்கல் அமைப்பு, ஆ) ஒற்றறியும் அமைப்பு, இ) கணிப்பு அமைப்பு என்பனவாகும்.

அ) பதங்கூறு வழங்கல் அமைப்பு:

பதங்கூறு வழங்கல் அமைப்பு பகுத்தாய வேண்டிய பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட பதக்கூற்றின் ஆவிநிலைச் சேர்மங்களை உருவாக்க வைக்கிறது. பிறகு இந்த ஆவியாகும் சேர்மங்கள் மின்னணுவியல் மூக்கின் ஒற்றறியும் அமைப்புக்குள் செலுத்தப் படுகின்றன. தொடர்ந்த இயக்க நிலைமைகளை மின்னணுவியல் மூக்குக்கு உட்ட தேவைப் படும் ஓர் இன்றியமையாத உறுப்பாகும்.

2. ஒற்றறியும் அமைப்பு:

ஒற்றறியும் அமைப்பு என்பது உணரி அணியாகும். இது இக்கருவியின் வினைப்படும் பகுதியாகும். ஆவியாகும் சேர்மங்களின் தொடர்பு ஏற்பட்டதும் இவ்வமைப்பின் உணரிகள் வினை புரிகிறது. அதாவது ஆவிச் சேர்மங்களால் ஏற்படும் மின்னியல்புகளின் மாற்றத்தை உணர்கின்றன. ஒவ்வோர் உணரி யும் அனைத்து ஆவிநிலைச் சேர்மங்களுக்கும்  வினைபுரியும் என்றாலும் குறிப்பிட்ட உணரி குறிப்பிட்ட சேர்மத்திற்கு வினை புரிதல், தனித்த பாங்கில் அமையும். பெரும்பாலான மின்னணுவியல் மூக்குகள் தொட்டதும் வினைபடும் உணரி அணிகளைப் பெற்றுள் ளன. உணரிப் பரப்பில் ஆவிச் சேர்மங்கள் பரப்பீர்ப்பால் கவரப்படும்போது உணரியின் இயற்பியல் மாற்றங்களை உருவாக்குகின்றன. இந்தத் தனிவகைப்பட்ட துலங்கல் ஓர் மின்னணுவியல் இடைமுகத்தால் இலக்க மதிப்புகளாக மாற்றப்படுகிறது. இங்ஙனம் பதிவாகிய தரவுகள் புள்ளியியல் படிமங்கள் வழியாகக் கணிப்பிடப் படுகின்றன.

(அறிவியல் ஒளி - 2012 ஜனவரி இதழில் வெளியான படைப்பு)

Pin It