நம் அண்டை உலகமான சந்திரன் நோக்கிய பயணச் சாதனைகள் தொடங்கி ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்தேறி வருகின்றன.

அப்போலோ பயண சாதனைகளுக்குப் பிறகு ஏறத்தாழ 20 ஆண்டுகள் கழித்து, 1992 டிசம்பர் 7 அன்று சந்திரனை உற்று நோக்கிய கலிலியோ எனும் அமெரிக்க விண்கலம் சந்திர வட துருவம் அருகே நிலாப்  பள்ளங்களில் நிரந்தரப் பனிக்கட்டி படிந்திருப்பதனை அறிவித்தது. அவ்வளவுதான். 

moon_370தொடர்ந்து 1994 பிப்ரவரி-மார்ச் மாதங்களில் அமெரிக் காவின் ‘கிளமென்டைன்’ (Clementine) எனும் ஆய்வுக் கலம் சந்திரனின் தென் துருவத்தில் தண்ணீர்ப் பனிக்கட்டிகள் உறைந்தி ருப்பதாகத் தெரிவித்தது. நிலாவின் வட கோளத்தில் 10,000 முதல் 50,000 சதுர கிலோமீட்டர் பரப்பிலும், தென் பகுதியில் 5000 முதல் 20,000 சதுர கிலோ மீட்டர்கள் அளவிலும் ஏறத்தாழ 30 கோடி டன்கள் தண்ணீர் ஒளிந்தி ருப்பது நிச்சயம்.

இது ஏற்கனவே அறிவித்ததை விட ஏறத் தாழ 20 மடங்கு அதாவது 600 கோடி டன்கள், ஏறத்தாழ 30 கோடி லாரிகள் தண்ணீர் என்றால் சும்மாவா? இதையே வேறு விதமாகச் சொன் னால் சந்திர நிலத்தடி நீரின் அளவு இந்துமாக் கடலின் தண்ணீர் அளவில் ஒரு கோடியில் ஒரு பங்கு விண்வெளி நாடுகள் யாவுமே நிலாத் தண்ணீரைக் குறிவைக் கின்றன. 

நிலாப் பயணங்கள் மேற் கொண்ட நாடுகளின் வரிசையில் ரஷியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குப் பிறகு இன்று ஐரோப்பாவும், ஜப்பானும், சீனாவும் சேர்ந்து கொண்டன. அதற்கு அடுத்த ஆறாம் இடம்   இந்தியாவிற்கே என்று சொல்லவேண்டியது இல்லை.

எப்படியோ, சந்திராயன் விண்கலம் நிலாவை 100 கிலோ மீட்டர் துருவப்பாதையில் சுற்றியது. 

சந்திரனின் கனிம வளங்கள் பற்றி ஆராய்ந்ததில்  நம் நாட்டின் சந்திரயானில் இடம் பெற்ற  அமெ ரிக்காவின் ‘எம்-3’ (Moon Mineralogy Mapper -MMM) என்று குறிப் பிடத் தக்கது. அமெ ரிக்கா வின் ஜே.பி.எல். என்கிற‘ஜெட் புரொப்பல்ஷன்’ லேபோரட்டரி  (தாரை உந்தும ஆய்வுச்சாலை) ஆராய்ச்சிக் கூடமும், பிரௌன் பல்கலைக் கழகமும் இணைந்து வடிவமைத்த கருவி. இது ஏறத்தாழ 95 விழுக்காடு நிலாவைத் தனக்குள் பொதிந்து கொண்டது. சந்திரனில் செறிந்து உள்ள ஹைடிராக்சில் நீர்க்கூறு அம்சம் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

உலக வரலாற்றில் இது முற்றிலும் புதிய கண்டுபிடிப்பு என்பது இருக்கட்டும்.

2009 ஆகஸ்ட் அன்று வடதுருவப் பனி அளவை ஆராய்வதற்கு சந்திரக் கண்காணிப்புச் சுற்றுகலம் (Lunar Reconnaissance Orbiter) என்கிற விண்கலனை நிலவுக்கு அனுப்பிற்று. அதில் நாசாவின் சிறு வானலை அதிர்வுஏற்பி (Miniature Radio Frequency) ஒன்று இடம் பெற்றது. அதன் பிம்பங்கள் நிலாவை முப் பரிமாணத் தில் பதிவு செய்தது. அங்குத் துரு வப் பகுதிக  ளில் பனி உறைந்து இருந்ததைக் கண்டுபிடித்து அறிவித்து உள்ளது.

அமெரிக்காவின் நிலாக் கண்காணிப்புச் சுற்று கலமும், சந்திரயானின் மினி சார் எனும் சிறிய செயற்கைத்துளை ரேடார் (Mini-Synthetic Aperture Radar) கருவியும் சேர்ந்து ஒரே தருணத்தில் நிலாவின் வட துருவத்தில் மேலாக நின்று ‘எர்லாங்கர்’ குழுவினைப் படம் பிடித்தன. நான்கு நிமிடங்களாக இவை பதிவு செய்த தகவல்கள் பூமியில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தின் பயன்பாட்டு இயற்பியல் ஆய்வுக்கூடத்தில் பெறப்பட்டு ஆய்வுகள் நடந்தன.

அதே ஆண்டு செப்டம்பர் 7-8 ஆகிய நாள்களில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், அமெரிக்காவின் நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளிக் கழக அறிவியறிஞர் கள் கூடி அலசி ஆராய்ந்தனர். அதன்படி நிலாத்தண்ணீர் உறுதி செய்யப்பட்டுவிட்டது. அது குடிக்கிற மாதிரி திரவ நீர் அல்ல. பனிக்கட்டிகளும் அல்ல. மண் படிகங்களிலும், மணலிலும் பிணைந்து உள்ள நீர்க்கூறுகள் அவ்வளவே.

moon_1_370இதற்கிடையில் நிலாப் பாறைகளில் ஆக்சிகரணப்படுத்தப்பட்ட உலோகத் தாதுக்கள் உள்ளன என்பதால், அவற்றில் இருந்த சுவாசிக்க ஆக்சிஜனைப் பிரித்து எடுக்கும் ஆராய்ச்சியில் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் வெற்றி பெற்று உள்ளனர். இத்தனைக்கும் மத்தியில், சந்திரனின் சுற்று வட்டமும் ஆண்டு தோறும் 4 செமீ வீதம் விரிவடைந்து வருகிறது என்பது அதிர்ச்சித் தகவல்.

அது நம்மில் இருந்து மெல்ல மெல்ல விலகி வருகிறதாம். 2004ஆம் ஆண்டு கிரிகொரி ஏ.கிராசின்ஸ்கி (Gregory A.Krasinsky) மற்றும் விக்டர் ஏ.பரம்பர்க் (Victor A.Brumberg) ஆகியோர் ஆய்வுப்படி புவிக்கும், சூரியனுக்கும் இடையிலான தூரம் கூட ஒவ்வோர் ஆண்டும் 15 செமீ வீதம் அதிகரித்து வருகிறதாம்.

நிலாத் தண்ணீர் மனதுக்குக் குளிர்ச்சி. விலகும் சந்திரன் சந்திரனுக்கே குளிர்ச்சி தரும். இந்த நிலையில் சந்திரன் குறித்து இன்று புரியதோர் தகவல் கண்டு அறியப்பட்டு உள்ளது.

வேறு ஒன்றுமில்லை. சந்திரனின் பருவ ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறதாம். நிலாக் கண்காணிப்புச் சுற்று கலன் பார்வையில் நிலாவின் தரைப்பரப்பில் பல்வேறு ‘முண்டு விரிசல்கள் (Lobate Scarps) பதிவாகி உள்ளன - நிலா முகத்தில் வயதான சுருக்க ரேகைகள் மாதிரி.

கடந்த 100 கோடி ஆண்டுகளுக்குள் 100 மீட்டர்கள் அளவு சுருங்கி விட்டது என்கிறார் அமெரிக்காவில் ஸ்மித்சோனியப் பல்கலைக் கழகத்தின் ஆய்வுக் குழுத் தலைவர் தாமஸ் வாட்டர்ஸ். அதாவது ஒவ்வொரு நூற்றாண்டும் நம் நிலா 10 மைக்ரோன் அளவு மெலிந்து வருகிறது. சராசரி தலைமுடி அளவில் பத்தில் ஒரு பங்கு. இதற்குப் போய்ப் பயப்படுவானேன் என்கிறீர்கள்?

ஆனாலும் நம் நிலா சும்மா அழகுப் பதுமையாய்ச் சுற்றிவராமல் புவி வரலாற்றியல் அடிப்படையில் சதா இயங்கிக்கொண்டு இருக்கிறது என்பதுதான் இன்றைய புதிய தகவல்.  

(அறிவியல் ஒளி டிசம்பர் 2011 இதழில் வெளியானது)

Pin It