Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

கீற்று படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

Enter your email address:

Keetru RSS Feed

கடைசி பதிவேற்றம்:

  • சனிக்கிழமை, 21 அக்டோபர் 2017, 13:27:59.

கேள்வி : என் வயது 22. எனக்கு மூன்று வயதிலிருந்தே தோலில் சிறிது அழுத்தமாகவோ அல்லது கூர்மையாகவோ ஏதாவது பட்டால் தடித்தும் சிவந்தும் விடுகிறது. புத்தகத்தை எடுத்து செல்லும்போது தோழியர் என் கைகளை பிடித்து விளையாடும்போதும் அவ்வாறு ஏற்படுகிறது. சிறுவயதிலேயே எங்கள் ஊரிலுள்ள தோல் மருத்துவரிடம் காண்ப்பித்தோம். பயனேதுமில்லை இந்த வியாதி எனக்கு அருவருப்பையும் தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்துகிறது. இதற்கு காரணம் என்ன? இது தீராத தோல் வியாதியா..?

பதில்: இதை நோய் என்றே கூறமுடியாது. உடலில் எங்கு அழுத்தம் தரப்பட்டாலும் அந்த இடம் தடித்துப்போகும். அழுத்தம் தவிர அலர்ஜிக்கு சொத்தைப்பல், தொண்டை அழற்சி (infection), வயிற்றில் பூச்சி, வெயில், மழைத் தண்ணீர், தூசு, வியர்வை, புழுக்கம் என்று பல காரணங்கள் இருக்கலாம். இவற்றில் ஒவ்வொன்றாக விலக்கிப் பார்த்து, அழுத்தம் தருவதால்தான் தோல் தடிப்பு ஏற்படுகிறதா என்று உறுதி செய்யவேண்டும் ( பஸ்ஸின் ஜன்னலில் கைவைத்து அழுத்திய படி பயணம் செய்வது, ஹேண்ட் பேக் தோளில் தொங்கி அழுத்தம் தருவது போன்றவை). உறுதியானால், அதிக அழுத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் தோலின் தன்மை அப்படி! மெத்தை மாதிரி துணி வைத்தும் அழுத்தத்தைத் தவிர்க்கலாம். ஒவ்வாமைக்கு (அலர்ஜிக்கு) மருந்து, cetrizine- 10mg மாத்திரை உண்டு. மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம். வெளியே, உடலுக்கு மேற்புறத்தில் Myconderm-c பவுடர் தடவினால் நமைச்சல் நிற்கும்.

நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்


கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 vetrivel 2013-08-06 20:35
என் வயது 21. எனது தோலில் வட்ட வடிவத்தில் தழும்பு போன்ட்ரு கானப்படுகிரது. அந்த தழும்பினுல் கருப்பாக சிரு சிரு புள்ளிகள் காணப்படுகிறது. அது என் உடலில் பரவுவதை போல் தெரிகிற்து. அரிப்போ, எரிசலையொ ஏற்படவீல்லை.
அது என்னவொ என்ட்ரு எனகு பயமக இருகிரது.
Report to administrator
0 #2 R.JEY 2013-10-09 12:12
ENAKU 2KAIYEIL MATTUM THOL NOI KAITE YULLLATHU. NAN ANATHU MARUTHU MANIYEL PARATHEN AVAGAL ONRUM ILLI. ETHU KOZHUPU KATTI THEN . ETHI ONRUM PANNA MUDIYATHU NU SOLLETAG.
Report to administrator
0 #3 govin 2013-12-16 16:59
சார் என் வயது 31 என் கால் முட்டியில் சிவப்பக இருக்கிறது எந்த உணர்ச்சியும் இல்லை உடல் அரிபென்னவொ என்ட்ரு எனகு பயமக இருகிரது. இருக்கிறது நண் கல்யாணம் பண்ணான்லமா ? எனக்கு நல்ல பதில் குறூண்கள் கடவூளாகா!!!!!!! !!!!!!!!!!!!!!! !!!!!!!!!!!!!!! !!!!!!!
Report to administrator

Add comment


Security code
Refresh