leg_370குளியலறைத் தரையில், ஈரக்கால் தரைப் பாதப் பதிவைப் பார்த்தால், குதிப்பகுதி (heel) அடை யாளத்திற்கும் விரல்பகுதிப் பாத அடையாளத் திற்கும் இடையில் வெற்றிடமாய் அமைந்து இருப்பதைக் காணலாம். காலின் பாத நடுப்பகுதி தரைக்கு மேல் உயர்ந்து இரண்டு தசைத் தொகுதிகளில் குருத்தெலும்புத்தசை, பெரோ னல் தசை (Peronal) எனப் பெயர் பெற்றுக் கவானாக (வளைவாக) அடிப்பாதம் அமைகிறது. இந்த முன்பின் தசைத் தொகுதிகள் வலுக் குறைந்தால் பாதம் அகன்று கவான் தாங்கித் தசைகள் மூழ்கடிக்கப்பட்டுத் தட்டையாகிறது. அதனால் பாதத்தின் தாரைகள் தட்டையாகக் காணப்படுகின்றன. இடையில் இடைவெளி ஏற்படு வதில்லை. இதைத்தான் தப்பட்டைக் கால் அல்லது வீழ்ந்த கவான்கள் என அழைக்கின்றனர்.

சில சமயங்களில் சிலருடைய தொழில்கள் பெரும்பாலும் நின்றே செய்ய வேண்டியிருந்தாலும் தப்பட்டைக்கால் ஏற்படும். காவல் துறையில் பணியாற்றுவோர், மேசைப்பணிப் பெண்கள், செவிலியர் அடிக்கடி தப்பட்டைக்காலால் துன்புறுவர்.

தசைகளை மறுபடியும் இறுக்கம் செய்வதற்கான பயிற்சி செய்வது இந்நோய் நீக்க வழியாகும். மூடு காலணிக்குள் தாங்கிகள் வருவது பயனில்லாததோடு அதிகப்படுத்தவும் செய்யலாம். அது வலுப்படுத்துவதற்குப் பதிலாகத் தசைகளை நெகிழச் செய்யும். 

Pin It