சென்னை -.-.டி.யில், பெரியார் - அம்பேத்கர் படிப்பு வட்டத்திற்குத் தடை விதித்திருக்கிறது பா... அரசு. ஒரு மொட்டைக் கடுதாசியின் அடிப்படையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், ..டி. நிருவாகமும் இந்தத் தடையை விதித்திருக்கின்றன. பெரியார் - அம்பேத்கர் படிப்பு வட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள், இடஒதுக்கீடு தொடர்பாகப் பேசியதாகவும், பிரதமர் மோடியின் செயல்பாடுகளை விமர்சித்ததாகவும், இவையெல்லாம் பிரிவினையைத் தூண்டுகின்ற செயல் என்றும் குற்றம் சுமத்தி இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

IIT 600இதனை எதிர்த்துக் கடுமையான போராட்டங்கள், பல்வேறு அமைப்புகளாலும் நடத்தப்பட்டு வருகின்றன. தில்லியில் ஐவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தியிருக்கின்றனர்காங்கிரஸ்  பொதுச்செயலாளர் ராகுல்காந்தியும் கண்டித்திருக்கிறார். தமிழ்நாட்டில், இந்து மக்கள் கட்சி, .தி.மு.. தவிர்த்து, மற்ற அனைத்துக் கட்சிகளும் இந்தத் தடையைக் கண்டித்திருக்கின்றன.

பெரியார் - அம்பேத்கர் பெயர்கள் மாணவர்கள் மத்தியில் பரவிவிடக்கூடாது என்னும் அச்சத்தின் காரணமாகவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கண்டித்திருக்கிறார் திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன்.

பெரியார் - அம்பேத்கர் பெயரிலான வாசகர் வட்டம், பிரிவினையைத் தூண்டுகிறது என்றால், விவேகானந்தா குழு, வசிஷ்ட்டர் வட்டம் இவையெல்லாம் ஒருமைப்பாட்டையா வலியுறுத்துகின்றன? கேவலம், ஆழாக்குப் பூவைக் கூடக் கட்ட முடியாத அழுக்கு நூலை அறுத்தால், தேசத்துரோகமாம் - தேசப்பாதுகாப்புச் சட்டம் பாய்கிறது தமிழ்நாட்டில். எனில் இவை யாருக்கான அரசுகள்?

பா... ஆட்சிக்கு வந்த நாள் முதல் இதுபோன்ற ஜனநாயகத்திற்குப் புறம்பான செயல்பாடுகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. மோடியின் சாமியார் அமைச்சர்கள் நாளரு பிரிவினைப் பேச்சை வெடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உயர்கல்வியில் பிற்படுத்தப்பட் டோருக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து, இதே நிறுவனத்தின் வளாகத்திற்குள் போராட்டம் நடத்தலாம், ஆனால் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யக் கூடாது என்னும் பார்ப்பன நீதியை இனியும் அனுமதிக்கலாமா?

பெரியார் - அம்பேத்கர் இயக்கங்கள் ஒற்றுமையுடன் நின்று பொதுஎதிரியான பார்ப்பனியத்தைத் எதிர்த்துப் போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அம்பேத்கரைத் தங்கள் தலைவர் என்றும், பெரியாரைத் தேசத் துரோகி என்றும் பேசித்திரியும் இந்துத்துவ அமைப்புகளின்  பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

பெரியார் - அம்பேத்கரின் சமூகநீதிப் படையணியினர், பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டத்தின் மீதான தடையை நீக்கும் வரை ஓயமாட்டார்கள். பார்ப்பனர்களின் கூடாரமாக இருக்கின்ற சென்னை ..டி.யைக் அனைவருக்குமான கல்வி நிறுவனமாகக் கைப்பற்றும் போராட்டத்தையும் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.

சமூகநீதி மண்ணில் மனுநீதிக்கு ஒருநாளும் இடமில்லை!

Pin It