குழந்தை உணவில் முதலிடம் வகிப்பது தாய்ப்பால் தான். குழந்தை பிறந்த முதல் சில நாட்கள் கிடைக்கும் தாய்ப்பால் மிகவும் சத்து நிறைந்தது. இது க்லஸ்ட்ராம் (Colostrum) என்று அழைக்கப்படும், இதில் அதிக அளவில் விட்டமின் A உள்ளது. Antibodies அதிகமாக உள்ளது. குழந்தைகளுக்கு பலவித நோய் நொடிகள் வராமல் தடுப்பதற்கு இந்த Antibodies மிகவும் உதவியாக இருக்கும். முதல் 3 மாதங்களிலிருந்து 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப் பாலே போதும். சில சமயங்களில் தாய்ப்பால் போதுமான அளவு கிடைக்கவில்லை எனில் பசும்பால், சிறிது பழரசம் போன்றவைகள் இடையில் கொடுக்கலாம்.

ஒரு நாளைக்கு பொதுவாக 6லிருந்து 9 முறை பிறந்த குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டியி ருக்கும். கிராமப்புறங்களில் குழந்தைகளுக்கு ஆட்டுப்பாலும் கொடுப்பது உண்டு. ஆனால் தற்போது வேலைக்குச் செல்லும் தாய்மார்களும், வீட்டிலிருக்கும் சில பேரும் விதவிதமாக டப்பாக்களில் அடைத்த (Milk powder) பால் உணவுகளை கொடுக்கின்றனர். இதனால் குழந்தைகள் குண்டாக ஆரோக்கியமாக வளரும் என்பது அவர்களது நம்பிக்கை. மிகவும் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் இதுபோன்று கொடுக்கலாம். ஆனால் அதுபோன்ற சந்தர்ப்பங்களிலும் பசும்பால் போன்றவற்றைக் கொடுப்பது ஆரோக்கியம் தரும். டப்பாக்களில் அடைத்த பால் கொடுப்பதால் பணவிரயம் தானே தவிர குழந்தைகளுக்கு அதிக நன்மை தராது. எனவே குழந்தைகள் உணவைத் தேர்ந்தெடுக்கும் போது மிகவும் கவனம் அவசியம்.

குழந்தை பிறந்த முதல் நாளிலிருந்து

3 மாதங்கள் வரை          -    தாய்ப்பால் மட்டும்

4 மாதங்கள் முதல் 9 மாதங்கள் வரை     - தாய்ப்பால், பழரசங்கள், மசித்த வாழைப்பழம்

10 மாதங்கள் முதல் 15 மாதங்கள் வரை  - பசும்பால், புரதம் நிறைந்த     உணவுகளான பருப்புகள்  

                                                                                     கொடுக்கலாம். மசித்த வாழைப்பழம், சாதம், கிச்சடி,
                                                                                   வேகவைத்த உருளைக்கிழங்கு போன்றவை                          

                                                                                   கொடுக்கலாம்.
                                                                                            
16 மாதங்களிலிருந்து 15 வயது வரை      -    பால், அரிசி, கோதுமை, முளைக்கட்டிய தானியங்கள்,

                                                                                     பாதாம்,  முந்திரி போன்ற யாவும் கொடுக்கலாம்.

சிறிய வயதிலேயே குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளில் விருப்பம் ஏற்படுத்த வேண்டும். எதையும் அவர்களுக்குப் பிடிக்காமல் திணிக்கக் கூடாது. குழந்தைகளே விரும்பி சாப்பிட வேண்டும். Seasonal fruits யாவையும் கொடுத்து பழக்கலாம். குழந்தைகள் சந்தோஷமாக இருப்பது மிகவும் முக்கியம். அதிகமாக அவர்களை பயமுறுத்தக் கூடாது. இது போன்று ஆரம்பித்திலிருந்தே கொடுத்துவந்தால் இப்போது எல்லாம் அதிகம் வரும் நோய்களான Primary Complex போன்றவற்றால் குழந்தைகள் சிரமப்படாது.

சத்தான உணவு

Child_3701.    1 வயதிலிருந்து 2 வயது வரை உட்பட்ட குழந்தைகளுக்கு கேழ்வரகு கஞ்சி கீழ்கண்ட முறையில் தயாரித்துக் கொடுக்கலாம். முதல் நாள் இரவு கேழ்வரகை நன்கு களைந்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். மறுநாள் காலை தண்ணீரை வடிகட்டி, நல்ல சுத்தமான மெல்லிய வெள்ளை துணியில் ஊறவைத்த கேழ்வரகை கட்டி ஒருநாள் முழுவதும் தொங்க விடவும். இடையில் இது காய்ந்து போகாமல் இருக்க சிறிது சிறிதாக நீர் தெளித்து வரவும். அடுத்த நாள் காலையில் துணியை அவிழ்த்துப் பார்த்தால் கேழ்வரவு நன்கு முளை விட்டிருக்கும். இதை எடுத்து உரல் (or) Grinderல் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

அரைத்ததை நன்கு தோசைமாவு பதத்தில் கரைத்து ஒரு பாத்திரத்தில், விட்டு அப்பாத்திரத்தை ஓர் இடத்தில் அசையாமல் வைக்கவும். சில மணி நேரங்களுக்குப் பிறகு மேல் பாகத்தில் உள்ள தண்ணீரை இறுத்துவிட்டு அடியில் உள்ள மாவை மட்டும் ஒரு சுத்தமான மெல்லிய துணியில் நன்கு வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய மாவை நிழலில் நன்கு காயவைத்து பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும். தேவையானபொழுது குழந்தைகளுக்கு இந்த Powder ½ tsp to 1 tsp எடுத்து 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து 5 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அதில் தேவையான அளவு காய்ச்சிய பசும்பால் சிறிது சர்க்கரை சேர்த்து கலந்து கொடுக்கவும். குழந்தைகளின் ஆரோக்கியமான உணவில் இதுவும் இன்று.

2.      2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கீழ்கண்ட தானியக் கஞ்சி செய்து கொடுக்கலாம். கோதுமை ½ kg புழுங்கல் அரிசி ¼ Kg சட்னி கடலை 3 பிடியளவு, பச்சை பயறு 1 tsp பாதம் பருப்பு சிறிது. முந்திரி சிறிது, ஜவ்வரிசி 1 tsp, சோளம் 1 கைப்பிடி, கம்பு கைபிடி, பார்லி 1 tsp இவற்றில் கோதுமை, பச்சைபயறு இவற்றை மேற்சொன்ன முறையில் ஊற வைத்து முளைகட்டி நிழலில் காயவைத்து வைத்துக் கொள்ளவும். பிறகு எல்லாவற்றையும் தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும். சுவைக்கேற்ப சிறிது ஏலக்காய் (or) ஓமம் சிறிது சேர்த்துக் கொள்ளவும் தேவையான பொழுது 2 tsp எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து நன்கு 5 நிமிடம் கொதிக்க வைத்து பால் சர்க்கரை (or) மோர், உப்பு கலந்து கொடுக்கவும். மிகவும் சத்தான கஞ்சி இது. புரதச்சத்து மிகுதியாக இருப்பதால் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

பொதுவாகவே குழந்தைகளுக்கு Chocolate/Chips/Sauce, Cold drinks போன்ற உணவுகளை அதிகம் கொடுக்காமல் ஆரம்பத்திலிருந்தே நல்ல காய்கறிகள், பழங்கள், முளைகட்டிய தானியங்கள், பழரசங்கள் போன்ற நல்ல சத்தான உணவாகக் கொடுத்து நல்ல சத்தான உணவை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டால் குழந்தைகள் எல்லாவிதத்திலும் நல்ல ஆரோக்கியமாக வளருவார்கள். அவர்கள் பெரியவர்களான பின்பும் இந்த உணவு பழக்கங்கள் அதிகம் மாறுவதற்கு வாய்ப்பில்லை. இதில் தாய்மார்களின் பங்கு மிகவும் முக்கியம். குழந்தைகளின் நல்ல உணவு பழக்கங்கள் எவ்வளவு முக்கியமானதோ, அதே போல் அவர்கள் மனதளவில் ஆரோக்கியமாக வளர்வது மிகவும் முக்கியமாகும்.