Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

கீற்று படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

Enter your email address:

Keetru RSS Feed

கடைசி பதிவேற்றம்:

  • வியாழக்கிழமை, 23 மார்ச் 2017, 21:22:51.

                சுவாசத்தில் நுழையும் சுத்தமான காற்று நமது மனதையும், உடலை உறசாகப்படுத்தும். அது போல தாம்பத்யத்தில் உற்சாகமுடன் செயல்பட மூன்று முக்கிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கின்றனர் உளவியலாளர்கள்.

முத்தான மூன்று வழிகள் :

1.             பார்வையாளராக மட்டுமே இருப்பதை தவிர்க்க வேண்டும்

2.             உறவுகளுக்கிடையேயான தொடர்பை அதிகரிக்க வேண்டும்

3.             ஒருவருக்கொருவர் தவறாக புரிந்து கொள்வதை விடவேண்டும். 

பார்வையாளராக இருக்க வேண்டாம் :

                தாம்பத்தியத்தில் இருவரின் பங்களிப்புமே முக்கியமானது. ஒருவர் பார்வையாளராக இருந்து மற்றொருவர் மட்டுமே செயல்புரிந்தால் அது ஓரங்க நாடகம் போல ஆகிவிடும். இருவருமே இணைந்து செயல்புரிவதில் தான் சுவாரஸ்யமே உள்ளது. எனவே பார்வையாளராக மட்டுமே இல்லாது பங்களிப்பாளராக இருப்பதும் முக்கியம்.

ஸபரிசங்கள் உணர்த்தும் :

                தகவல் தொடர்பு என்பது தாம்பத்தியத்தில் மிகவும் முக்கியமானது. வார்த்தையாகவோ, தொடுகை யாகவோ எப்படியாகிலும் உங்கள் துணையுடன் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டும். எது நன்றாக இருக்கிறது என்பதை உணர்த்துவதில்தான் வெற்றியின் ரகசியம் இருக்கிறது. ஆயிரம் பேச்சு உணர்த்துவதை ஒரு ஸ்பரிசம் புரிய வைத்துவிடும் என்பார்கள். எனவே தாம்பத்தியத்தின்போது உங்கள் வாழ்க்கைத் துணைக்கு நீங்கள் என்ன விரும்புகிறீர் என்பதை புரிய வைக்க வேண்டும். பிறகு பாருங்கள்! உங்களுக்கு தேவையானவை தானாகவே கிடைக்கும்.

                தாம்பத்யத்தில் தொடுகையின் பங்கு முக்கிய மானது. தொடத் தொட மலரும் பூக்களைப் போல உங்களின் வாழ்க்கைத் துணை உங்களின் பங்க ளிப்பை கண்டு உற்சாகமடைவார் என்பது நிச்சயம்.

                அதற்காக ஓவர் ஆக்டிங் தேவையில்லை ஏனெ னில் அது முழுவதையும் சொதப்பி விடும். ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்து மகிழ்விப்பதில் இருவரின் பங்களிப்பு சரிசமமாக இருக்க வேண்டும்.

புரிதல் தேவை :                          தாம்பத்தியத்தைப் பொறுத்தவரை யார் பெரியவர் என்ற ஈகோ தேவை யற்றது. சரியான புரிந்து கொள்ளும் தன்மையுடன் அணுகினாலே அன் றைக்கு வீட்டில் அமர்க்களம்தான். அதை விடுத்து தன்னுடைய செயல்பாடுதான் சரியானது என்றும் தான் சொல்வதைக் கேட்டால் தான் சரியாக இருக்கும் என்று கூறினாலே அங்கே சிக்கல் எட்டிப்பார்க்க ஆரம்பிக்கும்.

                அந்த சமயத்தில் கட்டளையிடு வதை விட கவனத்தோடு பிரச்சினையை தீர்க்க முயல்வதே சரியானது. உளவிய லாளர்கள் கூறும் மூன்று முத்தான ஆலோசனைகளை பின்பற்றி பாருங்கள்! அப்புறம் உங்கள் காட்டில் (அதாவது வீடடில்) அன்பு மழைதான்!

(மாற்று மருத்துவம் ஏப்ரல் 2012 இதழில் வெளியானது)

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

-2 #1 M.M.SANTHOSH 2013-10-16 16:16
மிகவும் அறுமை உங்கள் செய்திகள் எனக்கு ரொம்ப உதவியாக இருக்கிறது....

உங்களுக்கு என்னுடைய நன்றி.நன்றி..நன ்றி...
Report to administrator
0 #2 RAJKUMAR C 2016-04-08 21:14
IT IS VERY NICE


THANK YOU
Report to administrator

Add comment


Security code
Refresh