Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

கீற்று படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

Enter your email address:

Keetru RSS Feed

அண்மைப் படைப்புகள்

கடைசி பதிவேற்றம்:

  • வியாழக்கிழமை, 30 மார்ச் 2017, 10:43:23.

தூங்கி எழுந்ததும் கால் மணி நேரத்திற்குள் எந்த தொந்தரவும் இல்லாமல் மலம் கழிக்க வேண்டும்... அப்படி இல்லாமல்..ஒரு மணி நேரம் சென்ற பிறகு மலம் கழிப்பவர்கள், பத்து நிமிஷம் மலங்கழிக்க உட்கார்ந்து இருப்பவர்கள், காலையில் ஒரு முறை மலங்கழித்து காபி, காலை உணவு உண்டவுடன் மலம் கழிப்பவர்கள் ஆகியோர் மலச்சிக்கல் உடையவர்கள்.... காலையில் போகாமல் மாலையில் மலங்கழிப்போர் மிகுதியான மலச்சிக்கல் உடையவர்கள்..... காலையில் போய்விட்டு மாலையிலும் போகலாம் ...போகாமலும் இருக்கலாம் ... இப்படி இருந்தால் மலச்சிக்கல் இல்லை.

அதிகமான மலச்சிக்கல் உள்ளவர்கள் பொதுவாக மல்லாந்து தான் படுப்பது எளிதாய் இருக்கும் என்பார்கள்.... அவர்களால் ஒருக்களித்து படுக்கவே முடியாது. அதிகமாக உண்டுவிட்டு படுப்பவர்களால் மல்லாந்து தான் படுக்க முடியும்...

இரவு உணவு முடித்தவுடன் படுக்கச் சென்றால் மலச்சிக்கல் உண்டாக வாய்ப்புள்ளது. உண்ட உணவு பாதி செரித்த பிறகே படுக்க செல்ல வேண்டும். இரவு உணவு முடிந்த வரை 7 மணிக்குள் முடிக்க வேண்டும். இயலாதவர்கள் 8 மணிக்குள்ளாக முடித்து கொள்ள வேண்டும்... இரவு உணவு முடிந்த வரை பழங்களை உண்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தூக்க குறைவினாலும் மலச்சிக்கல் வரும். இச்சிக்கல் உள்ளவர்கள் அதிகமாக டீ, காபி குடிக்க கூடாது..சிகரட் சுத்தமாக நிறுத்தி விட வேண்டும்...

யோகநூல்களில் பச்சிமோத்தாசனம் (மிருத்யுஞ்சய ஆசனம்) என்ற ஆசனத்தை தினசரி தொடர்ந்து செய்துவந்தால் மலச்சிக்கல் வரவே வராது...நோய்களும் அண்டாது...

பத்து நாட்களுக்கு அரக்கீரையை சமைத்து உணவோடு உண்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். சாதம் அளவுக்கு கீரையை சேர்த்துக்கொள்ள வேண்டும். (சாம்பார், ரசம், மோர் முதலியன தவிர்க்க வேண்டும்). பேயன் வாழைப்பழம் தினம் எடுத்து கொள்ளலாம்....அரக்கீரை கிடைக்கவில்லை என்றால் கலவைக்கீரை (அ) மிளகு, சீரகம், உப்பு சேர்த்து மூன்றையும் பொடி செய்து சூடாக இருக்கும் சாதத்தில் சிறிது நெய் ஊற்றி கலந்து உண்ண வேண்டும்... மலசிக்கலை நீக்க நிலையான வழி கடுக்காயை எந்த வகையிலும் உபயோகப்படுத்தலாம்...

இளைஞர் முதல் முதியவர் வரை இடப்பக்கம் ஒருக்களித்து தான் படுக்க வேண்டும்....நம் வலக்கை கீழிருக்க ஒருக்களித்து படுத்தால் நம் வயிற்றின் வலப்பக்கம் இருக்கும் பித்தப்பை வயிற்றின் கனத்தால் அழுத்தப்பட்டு பித்தநீர் குறைவாக சுரக்கும்...அதனால் சீரணம் குறைவாகும்... ஆங்கில மருத்துவரும் கூட அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களை இடப்பக்கம் ஒருக்களித்து தான் படுக்க சொல்கிறாகள்... இடக்கை கீழிருக்க ஒருக்களித்து படுத்தால் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்...

மலச்சிக்கல் உடல், மனம் இரண்டையும் கெடுத்து, நோயையும் தரும்...இச்சிக்கல் உள்ளவர்கள் ஒழுக்ககேடு மற்றும் பிறருக்கு தீங்கு விளைவிப்பவராகவும், காம உணர்ச்சி அதிகமாக கொண்டவராகவும் இருப்பர்...

நாட்பட்ட மலச்சிக்கல் உள்ளவர்கள் மனஉளைச்சல்(Depression), நீரிழிவு(Diabetes), மூலம் (Piles), கட்டிகள் (Tumor) என பல கொடிய வியாதிகளால் பாதிக்கப்படுகின்றனர்.....

வயிறுக்கு சாப்பாடு கிடைக்காமல் கூட பத்து நாட்கள் வரை தண்ணீரை குடித்து உயிர் வாழலாம்.. ஆனால் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றாமல் விட்டால் மூன்று நாட்கள் கூட தாக்கு பிடிக்க முடியாது.. எந்த ஒரு உடம்பில் இருந்து கழிவுகள் சிக்கலில்லாமல் வெளியேற்றப்படுகிறதோ அந்த உடலுக்கு நோய்கள் வரும் வாய்ப்புகள் பாதியாக குறையும்.

மலச்சிக்கலை மருந்து மாத்திரைகள் இன்றி அக்குபஞ்சர் மருத்துவத்தில் முற்றிலும் குணமாக்கலாம்...

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Add comment


Security code
Refresh