Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

கீற்று படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

Enter your email address:

Keetru RSS Feed

கடைசி பதிவேற்றம்:

  • வியாழக்கிழமை, 23 மார்ச் 2017, 21:22:51.

காய்கறிகளில் உயிர்ச்சத்துகளும், ஊட்டச்சத்துகளும் அடங்கியுள்ளன. அவற்றிலுள்ள தாவர வேதிப்பொருட்கள், நெடுநாள் நோய்களான புற்றுநோய், இருதய நோய்கள் மற்றும் நீரிழிவு போன்றவற்றைத் தடுக்கும் திறன் கொண்டவை ஆகும். செரிபரோ வாஸ்குளார் நோயால் ஏற்படும் இறப்பிற்கும், பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்ளும் அளவிற்கும் எதிர்மறையான தொடர்பு காணப்படுகிறது.

human bodyஒரே தாவர வேதிப்பொருளைக் காட்டிலும், பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிக்கலவையில் இருந்து கிடைக்கும் பலவகை வேதிப்பொருட்கள் உடலை நன்கு காத்துப் பராமரிக்கின்றன. பொதுவாக நாம் காய்கறிகளை உணவில் சேர்த்து வருகிறோம். இதன் மூலம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து தாராளமாய் நமக்குக் கிடைக்கிறது. ஆனால் அதே சமயம் வேர் காய்கறிகளை அதிக அளவில் உட்கொள்வதால் சாதாரண காய்கறிகளில் இருந்து கிடைக்கும் சத்துக்களை விட அதிகமாக நம்மால் பெறமுடிகிறது. இவை ஊட்டச்சத்துக்கள் மட்டுமல்லாமல் நமது உடல் ஏற்படும் பலவிதப் பிரச்சனைகளையும் தீர்க்க வல்லது.

இதயம் காக்கும் டர்னிப்

டர்னிப் சாலட்டில் சேர்க்கக்கூடிய ஒரு சிறப்பான காய்கறி. அதிலும் முக்கியமாக இந்த டர்னிப் இதயத்திற்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடிய ஒரு வேர் காய்கறி. இதில் ஆன்டி- ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமான அளவில் அடங்கியுள்ளன.

எடையைக் குறைக்கும் உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் ஸ்டார்ச் நிறைய உள்ளது. மேலும் இவை உடலுக்கு அதிகப்படியான ஆற்றலையும் கொடுக்கக்கூடியவை. ஆனால் உடல் எடையைக் குறைக்க நினைத்தால், இதனை டயட்டில் சேர்க்கக்கூடாது.

நோய் எதிர்ப்புச் சக்தியளிக்கும் வெங்காயம்

வெங்காயத்தில் ஆன்டி – பாக்டீரியஸ் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சிப் பொருள் அதிகம் நிறைந்துள்ளதால், அவை நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும் மேலும் இதில் ஜிங்கு உள்ளதால், ஆண்களின் ஹார்மோன்களின் செயல்பாடுகளை அதிகரிக்கும்.

இருமல் போக்கும் இஞ்சி

இஞ்சியில் செரிமான நொதிகள் நிறைந்திருப்பதால் அவை அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது. குறிப்பாக இருமல், சளீ மற்றும் தொண்டையில் தொற்று உள்ளவர்களுக்கு இஞ்சி நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும்.

சருமம் காக்கும் கேரட்

கேரட் சாப்பிட்டால் கண்களுக்கு மிகவும் நல்லது ஏனெனில் இதில் கண்களுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. மேலும் இதனை நாள்தோறும் சாப்பிட்டால், சருமம் பொலிவாக இருக்கும்.

சர்க்கரைநோய் போக்கும் முள்ளங்கி

நீரிழிவு நோயாளிகளுக்கு முள்ளங்கி ஒரு சிறப்பான உணவுப் பொருள். ஏனென்றால் இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாக உள்ளது. மேலும் இதில் பொட்டாசியம் அதிக அளவில் நிறைந்துள்ளதால் இரத்த அழுத்தத்தைச் சீராக வைக்கும்.

நரம்புப் பிரச்சனை தீர்க்கும் சேனைக்கிழங்கு

சேனைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின் – பி காம்ப்ளக்ஸ் அதிகம் இருப்பதால், அவை நரம்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும்.

ஆற்றல் அதிகரிக்கும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உடலுக்கு வேண்டிய ஆற்றல் அதிகம் இருப்பதோடு உருளைக்கிழங்கைவிடக் குறைவாகவே ஸ்டார்ச்சானது உள்ளது. மேலும் இதில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிகம் இருப்பதால், இன்சுன் சுரப்பைச் சீராக வைக்கும்.

(இனிய திசைகள் – ஏப்ரல் 2015 இதழிலிருந்து)

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 Allwin Sahayaraj 2016-03-29 12:12
அருமையான தகவல்கள்
Report to administrator

Add comment


Security code
Refresh