Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

 

     கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது. இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பத்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

     நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல. அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.

     கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.

     திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர்சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரியவந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

     இதுதவிர நீரழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10- இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டுமென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

     தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும்.

(மாற்று மருத்துவம் ஏப்ரல் 2011 இதழில் வெளியானது)

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 somserode 2011-09-11 12:25
தமிழ்மணத்தில் நீண்ட நாட்களுக்கு முன்பு எழுதியதை உங்களுடன் பகிவதில் மகிழ்ச்சிகறிவேப்பிலை{BERGERA KOENIGII}
ENG :CURRY LEEF TREE


பெருப்பாலான வீட்டுத்தோட்டங் களில் வழர்க்கப்படும் சிறுமர வகுப்பைச்சார்ந் தது .நமது எல்லாவிதமான சமையலிலும் மணமூட்டியாகவும் சுவைக்காகவும் சேர்க்கப்படுகிறது.


லேசான கார,கைப்பு சுவையும் வெப்பத்தன்மையும ் கொண்டது.
பசி,உடல்வன்மை,சீரணத்தை சீராக்குதல்,நரை நீக்கும் இத்தகைய சிறப்புக்கள் நிறைந்த கறிவேப்பு கண்பார்வைக்கும் நல்லது.


தேவையான அளவு இதன் இலைகளை நெய்யில் வறுத்து பொடிசெய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட கண்பார்வைக்கு நல்லது.


மலச்சிக்கள் தீர :–
கறிவேப்பிலை+இஞ்சி+மிளகு+சீரகம்+பெருங்காயம்
இவைகளை வெய்யிலில் காயவைத்து இடித்து வைத்துக்கொண்டு இரவில் சாதத்துடன் சாப்பிடலாம்.


குமட்டல்,வாந்தி,சீதபேதி[ Dysentery ]க்கு
நெய்யில் வதக்கிய கறிவேப்புடன் சிறிது உப்பு புளி காரம் சேர்த்து அரைத்து துவையல்செய்து உண்ணலாம்.


சளி,இருமல்,சீதக்கழிச்சல்,மதுமேகம்[ Diabetes ]குறைய:
இலைகளை சுத்தம்செய்து [2 கொத்து]2 டம்லர் நீர்விட்டு ஒரு டம்லராக காய்ச்சிவடித்து ¼ பங்காக 4 வேளை குடித்துவரலாம். முடிந்தால் இலைகளைப்பச்சையா கவும் உண்ணலாம்.


இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யானது குளிர்ச்சிதருவத ாகவும் ,கண்களுக்கு நன்மைபயப்பதாகவும்
நரை நீக்குவதாகவும் அறியப்பட்டுள்ளது.
விஷப்பூச்சிகள் கடித்த இடத்தில் இலைகளை பாலில் வேகவைத்து அரைத்துக்கட்ட வலி,தடிப்பு,எரி ச்சல் குறையும்.


posted by சித்தன் @ 9:09 AM
Report to administrator

Add comment


Security code
Refresh