Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

தொடர்புடைய படைப்புகள்

Rajini Kabali

தமிழ்ச் சமூகத்திற்கு நிரந்தர பிரபலங்கள் ஏற்புடையவையே. நிரந்தர பொதுச் செயலர், நிரந்தர தலைவர், நிரந்தர இளைஞரணி செயலாளர்... இதுபோலவே நிரந்தர கதாநாயகர்களும். இந்த வரிசையில் இன்றும் ரஜினிதான் நம்பர் ஒன். புதிதாய் திரைக்கு வரும் பூப்பெய்யாத பெண்கள்கூட, 'தாங்கள் ரஜினியுடன் நடித்துவிட்டால் ஜென்ம சாபல்யம் அடைந்துவிடுவோம்' என்பதாகத்தான் பேட்டி கொடுப்பார்கள்.

அப்பேற்பட்ட ரஜினியை ஒரு இளம் இயக்குனரான இரஞ்சித் இயக்கி இருக்கிறார் என்பது அவரது திறமைக்கு கிடைத்த வெற்றியே.

ரஞ்சித்திற்கு ரஜினி பார்முலா நன்றாக கைவந்திருக்கிறது. இந்த ரஜினி பார்முலா பல பிரபல இயக்குனர்களால் உருவாக்கப்பட்டது. அதாவது ரஜினியை நல்லவனாக, கெட்டவனாக, ரௌடியாக, தாதாவாக எப்படி வேண்டுமானாலும் காட்டலாம்; ஆனால் அத்தனை வேடத்திலும் ரஜினி பேசுகிற வசனங்கள் ஒரு ஞானியின் தோரணையில் அமைய வேண்டும். அவ்வளவுதான். படத்தை ஒட்டி, வசூலை அள்ளிவிடலாம்.

பாலச்சந்தர் தொடங்கி, சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ்.ரவிகுமார் என இதில் எல்லோரும் சிக்ஸர் அடித்திருக்கிறார்கள். ரஜினியின் வாயில் திணிக்கப்படுகிற இந்த மாதிரியான வசனங்களால் வருகிற விளைவுகளை அவர்போல அவ்வளவு சாதுர்யமாக யாராலும் எதிர்கொள்ள முடியாது. அதற்கு நல்லதோர் உதாரணம் “அளவுக்கு அதிகமா ஆசைப்படுகிற ஆம்பளையும், அளவுக்கு அதிகமா கோபப்படுற பொம்பளையும் வாழ்க்கைல நல்லா வாழ்ந்ததா சரித்திரமேயில்ல...” என்பதாகும். இது முதல்வருக்கு எதிராக பேசப்பட்டதாகக் கருதப்பட்டது.

இம்மாதிரி வசனங்கள் எல்லாம் ஏதோ பிரளயத்தை உருவாக்கிவிடும் என எப்போதும் பத்திரிகைகள் ஆர்ப்பரிக்கும். ஆனால் அப்படி எதுவும் நடக்காது. ரஜினி அடுத்த பஞ்ச் டயலாக்கிற்கு தயாராகிக் கொண்டிருப்பார். இதனால் உருவான சர்ச்சைகளையும், சச்சரவுகளையும் “சோக்கள்” பார்த்துக் கொள்வார்கள்.

கொள்கைக்கான வசனங்களைப் பேச ரஜினி எம்.ஆர்.ராதாவோ, எஸ்.எஸ்.இராஜேந்திரனோ அல்ல. ரஜினிக்கு எந்த கொள்கையும் கிடையாது. ரஜினி வெறும் ரஜினி.

இப்படி எல்லா கதாபாத்திரங்களிலும் ஒரு ஞாநியின் தோரணையில் ரஜினியை பேச வைப்பதாலும், அதை ரஜினி பேசுவதாலும் எல்லோர் கல்லாவும் நல்லா நிரம்பியிருக்கிறது. இந்த வகையிலான ரஜினி பார்முலா ரஞ்சித்திற்கு கைக்கூடி வந்திருக்கிறது. மற்றவர்கள் ஆன்மீக வசனங்களாலும், ஆணாதிக்க வசனங்களாலும் ரஜினியை ஞானியாக்கி கல்லா கட்டினார்கள் என்றால், ரஞ்சித் அம்பேத்கரிய வசனங்களால் கல்லா கட்டியுள்ளார்.

இது தலித் அரசியல் வெற்றியா?

ஆம். இதுவும் ஒருவகை தலித் அரசியலின் வெற்றியே. சில முன்னாள், இந்நாள் ஐ.ஏ.எஸ் –சுகளும், தன்னார்வ குழுக்களின் நிறுவனர்களும் நடத்துகிற தலித் அரசியல் பயிற்சி வகுப்புகளை கவனியுங்கள். அவையனைத்தும் தலித்துகளின் முன்னேற்றம் என்ற தலைப்பிலேயே நடத்தப்படுகின்றன. அரசியலில், அரசுப் பணிகளில், தனியார்த் துறையில் என கிடைக்கிற எல்லா வாய்ப்புகளிலும் இருக்கிற அனைத்து குறுக்கு வழிகளையும் எப்படி பயன்படுத்துவது? என்பதுதான் அவ்வகுப்புகளில் நடத்தப்படுகிற பயிற்சி.

எல்லாவற்றையும், எப்படியாவது பயன்படுத்தி, ஏதோ ஒருவகையில் நாம் முன்னேறிவிட்டால் நம்மை சார்ந்தவர்களையும் நாம் முன்னேற்றிவிட முடியும் என்பதுதான் அங்கு மந்திரம்.

அப்புறமென்ன? ரஞ்சித் எல்லாவற்றையும் பயன்படுத்த பழகியிருக்கிறார். அவர் முன்னேறுவதன் ஊடாக அவரைச் சார்ந்தவர்களையும் முன்னேற்றக்கூடும். அது ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் சாதகமா என்றால், இல்லைதான். அதனாலென்ன?   

- திருப்பூர் குணா

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

-1 #1 லட்சுமணன் 2016-08-04 12:09
அருமையான பதிவு.
Report to administrator
+6 #2 K.Senthilkumaran 2016-08-04 17:22
திருப்பூர் குணா போன்ற போலி சமூக ஆர்வளர்களுக்கு :
-----------------------------------------------------------------------------------

திருப்பூர் குணா....., கீற்றில் நீங்கள் எழுதியுள்ளது விமர்சனமேயல்ல! சும்மா கண்துடைப்பு வார்த்தை கோர்வைகள்.... உங்களுக்கு தலித் முன்னேற்றம் பற்றி எழுதி அதனை கண்டிக்க விருப்பம் இருக்கு ஆனால் அப்படி எழுதினால் முற்போக்கு என்ற பட்டம் உங்களை விட்டு போயிடுமே என்ற பயமும் உங்களுக்கு இருக்கு! என்ன செய்ய யாரையும் பகைத்துக்கொள்ள முடியாது இல்லையா.... அப்படி பகைத்துக்கொண்டா ல் அச்சக பிசுனஸ் போயிடுமே உங்களுக்கு! மேலும் புத்தக விற்பனை நிலையத்தை வேற நீங்க தொடங்கியாச்சு.. .. அந்த பிஸினஸும் நல்லா போகணும் என்ற எண்ணம் உங்களுக்கிருக்குமில்லையா?

அவிங்க வேலைவாய்ப்பை பெற்று முன்னேறுவது குறுக்கு வழி என்றால் நீங்கள் புரச்சியை புத்தகம்.., அச்சகம் மூலம் விற்பனை செய்வதென்ன வழி?

போலியாய் உங்களை போன்று "போலியாய் கம்யூனிஸ்ட்டாக" வாழுவதை காட்டிலும் படித்து ,முன்னேறுவது நல்லது தானே குணா?

படிப்பாங்க டா .....முன்னேறுவா ங்க டா..... அது குறுக்கு வழியென்றால் அப்படி தாண்டா போவாங்க..... நீ வெம்புடா.... புகையூட்டா..... பொறாமையில் வெம்பி அழுகி போடா...(குணா இந்த கடைசி வாக்கியம் உங்களுக்கு அல்ல... தலித் மக்களின் முன்னேற்றத்தை பார்த்து வெம்புவர்களுக்க ு மட்டும் தான்)

‪#‎திருப்பூர்‬ குணா....., : //இதுவும் ஒருவகை தலித் அரசியலின் வெற்றியே. சில முன்னாள், இந்நாள் ஐ.ஏ.எஸ் –சுகளும், தன்னார்வ குழுக்களின் நிறுவனர்களும் நடத்துகிற தலித் அரசியல் பயிற்சி வகுப்புகளை கவனியுங்கள். அவையனைத்தும் தலித்துகளின் முன்னேற்றம் என்ற தலைப்பிலேயே நடத்தப்படுகின்ற ன. அரசியலில், அரசுப் பணிகளில், தனியார்த் துறையில் என கிடைக்கிற எல்லா வாய்ப்புகளிலும் இருக்கிற அனைத்து குறுக்கு வழிகளையும் எப்படி பயன்படுத்துவது? என்பதுதான் அவ்வகுப்புகளில் நடத்தப்படுகிற பயிற்சி..//...
Report to administrator
-2 #3 திருப்பூர் குணா 2016-08-05 14:23
k.senthilkumara n எடுத்த எடுப்பிலேயே முத்திரைக்குத்த ி, உங்களைப்போல் கீழ்த்தரமாக பேச நான் முகநூலில் இல்லை. இட ஒதுக்கீடு வேறு, பிழைப்புவாத அரசியல் வேறு. விருப்பமிருந்தா ல் "பின்நவீனத்துவம ் கம்யூன்சா எதிர்ப்பின் முற்போக்கு முகமூடி" மற்றும் "பின்நவீனத்துவம ும் அடையாள அரசியலும் - முதலாளித்துவத்த ின் புறவழிப் பாதை" நூல்களைப் படிக்கவும்.
Report to administrator
+3 #4 K.Senthilkumaran 2016-08-05 18:05
திருப்பூர் குணா, தலித் மக்கள் இடஒதுக்கீட்டின் மூலம் படித்து ,அரசு வேலை வாய்ப்பை பெறுவதனை தான் நீங்கள் குறுக்கு வழி என்று நேரடியாகவே உங்கள் பதிவின் மூலம் சுட்டிக்காட்டிய ுள்ளீர்கள் குணா. அது எப்படி பிழைப்புவாதம் ஆகும் என்று விளக்கவேண்டிய நிலையிலும் நீங்கள் தான் உள்ளீர்கள்...இத ற்கு விளக்கம் தேவைப்படுகின்றத ு குணா... இப்படிப்பட்ட ஒரு ஆதிக்கசாதிவெறிய ர்களின் மனப்பான்மையுடன் கூடிய குற்ற சாட்டை நீங்கள் தலித் மக்கள் மீது வைப்பதன் மூலம் நீங்கள் ஆதிக்க சாதியினரின் மனப்பான்மைக்கு தான் கொடிபிடிக்கின்ற ிர்கள் குணா...
Report to administrator
+1 #5 K.Senthilkumaran 2016-08-05 18:06
திருப்பூர் குணா, நீங்கள் சுட்டும் புத்தகங்களை படித்தால் தான் உங்களை நான் புரிந்து கொள்ளமுடியுமென் றால் திருப்பூர் குணா என்ற தனிப்பட்ட ஆளுமைக்கு தேவையே இல்லை அல்லவா இந்த உலகில் ? தலித் மக்களின் மீதான உங்களின் மோசமான ,கயமைத்தனமான குற்றசாட்டுகளுக ்கு நீங்கள் தான் பதிலளிக்க வேண்டுமே தவிர நீங்கள் சுட்டும் புத்தகங்களுக்கு அந்த வேலை கண்டிப்பாக கிடையாது... பின்நவீனத்துவ அறிவுசீவிகள் அ மார்க்சு போன்றவர்கள் அதனை ஆதரிக்கின்றார்க ள் என்பதற்காக நீங்கள் என்னிடம் பேசவேண்டிய அவசியமே இல்லை...அ.மார்க ்சுவின் முகநூலில் வேண்டுமானால் நீங்கள் சென்று பேசலாம்...மேலும ் ஒருவிஷயம் நீங்கள் கூறும் பிழைப்புவாதம் என்ற வார்த்தையை எப்படி நாம் புரிந்து கொள்ளலாம் என்றால் நீங்கள் விஜய்காந்த் ,வைகோ,திருமா,போ லியான கம்யூனிசுகளுக்க ு நடந்து முடிந்த தேர்தலில் நீங்கள் ஆதரவு அளித்தன மூலம் அனைவருமே அதனை உங்களின் பிழைப்புவாதமென் று புரிந்துகொள்ளலா ம்.... உங்கள் சிந்தனை பிடி இவர்களை ஆதரிப்பது தவறு இல்லை பிழைப்பு வாதம் இல்லை... ஆனால் தலித் மக்கள் படித்து முன்னேறுவது என்பது உங்களை பொறுத்தவரையில் குறுக்கு வழி ,பிழைப்பு வாதம் அப்படி தானே?

உங்கள் பிழைப்புக்கு நீங்கள் கம்யூனிச புரட்சியை பதிப்பகம், புத்தக விற்பனை நிலையம் விற்பனை செய்து பிழைப்பை ஓடுவதனை விட வேறு ஏதாவது தொழில் செய்து குட்டி முதலாளியாக வாழலாம்... எதற்கு இந்ததேவையற்ற புரட்சி போலி முகமூடி உங்களுக்கு?
Report to administrator
0 #6 K.Senthilkumaran 2016-08-05 18:07
திருப்பூர் குணா..,முதலில் தலித்மக்கள் கல்வி ,அரசு வேலைவாய்ப்பை பெறுவதனை நீங்கள் முதலில் குறுக்கு வழி என்றீர்கள்...இப ்பொது அதனை பிழைப்பு வாதம் என்று வசைபாடுகினரிகள் .... தலித் மக்களின் இடஒதுக்கீட்டை எதிர்க்கின்றிர் கள் என்று நான் உங்கள் மீது குற்றம் சாட்டும் போது நீங்கள் தானே இடஒதுக்கீடுக்கு ம் ,பிழைப்புவாதத்த ுக்கும் வேறுபாடு உள்ளது என்று பதில் அளித்திர்கள். அப்படி என்றால் தலித் மக்கள் பெரும் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகள் ஆகியவற்றை நீங்கள் தானே பிழைப்புவாதமென் று இன்னும் இன்னும் கயமைத்தனத்துடன் /நயவஙசகமாக பேசுகிறீர்கள்.. .. உங்கள் உள் உறங்கிக்கொண்டு இருந்த ஆதிக்க சாதிவெறி பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டதே குணா! அம்பலப்பட்டு போகின்றிகள்..., மிகவும் அசிங்கமாக.../// /பிழைப்பு வாதிகளை சொல்லும் போது தலித் மக்களையே சொல்வதாக திரிப்பது, பதிப்பக வேலையை ஏதோ மாஃபியா தொழில் மாதிரி கூறுவது .. இப்படி சிண்டி பார்ப்பதெல்லாம் எங்கிட்ட வேலைக்காகாது.// /
Report to administrator
+2 #7 K.Senthilkumaran 2016-08-05 18:08
திருப்பூர் குணா.., நீங்கள் தெளிவாக தான் தலித்மக்கள் கல்வி ,அரசு வேலைவாய்ப்பை பெறுவதனை குறுக்கு வழியென்றும் , பிழைப்பு வாதமென்றும் வசைபாடுகிறீகள். .. முதலில் அதனை எப்படி குறுக்கு வழியென்று கூறுகினரிகள் என்று விளக்கவும்...பி ன்பு அதனை எப்படி பிழைப்பு வாதமென்றும் வசைபாடுகிறீகள் என்று விளக்கவும்.... முதலில் பதிப்பக வேலையை மாபியா வேலை என்று கூறுவது ..., சிந்திப்பது நீங்கள் தான் ... நான் என்ன கூறுகின்றேன் என்று புரிந்தும் எதற்கு இப்படி ஒரு நடிப்பு? பதிப்பகம் மற்றும் புத்தக விற்பனை மூலம் புரட்சியை வியாபாரம் செய்யும் கயவர் நீங்கள் என்று தான் நேரடியாகவே குற்றம் சாடுகின்றேன்...
Report to administrator
+1 #8 Sivakumar V.K 2016-08-05 23:36
இந்திய சமூகத்தில் ஒதுக்கப்ட்ட மக்கள் கல்வி அறிவு பெற்று அரசுவேலைகளை பெறுவதை எப்படி தவறென்று கூறமுடியும்? அவர்களுக்கு என்று IAS ,IPS தேர்வுகளில் அவர்கள் தேர்வுபெற தனி சிறப்பான பயிற்சிகளை,வகுப ்புகளை அரசே கூட நடத்தும் நிலையில் ..., அந்த ஒடுக்கப்பட்ட மக்களில் சிறிது கல்வி ,வேலை ,பொருளாதாரம் என்று சிறிது முன்னேறியவர்கள் அவர்களின் மக்களுக்காக பயிற்சிகளை கொடுப்பதனை எப்படி நாம் தவறு என்று கூறமுடியும்?

இந்த பதிவின் இறுதி பகுதி ஒடுக்கப்பட்டவரக ்ள் முன்னேறுவதை குறுக்கு வழி என்று கூறுவதன் மூலம் கட்டுரையாளர் ஏற்படுத்தும் பிம்பம் என்னவென்றால் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி வேலை ஆகியவற்றை பெற கூடாது அத்தகைய போக்குக்கு யாரும் உதவக்கூடாது என்று இந்த கட்டுரையாளரால் வலியுறுத்த படுகின்றது என்பதேயாகும். இது மிகவும் பிற்போக்கு தனமானது என்பது மட்டும் அல்லாமல் தமிழக பிஜேபி யின் தலைவர் ஒடுக்கபட்டமக்கள ில் முன்னேறியவர்கள் இடஒதுக்கீட்டை விட்டுக்கொடுக்க வேணும் என்று கோருவது போன்றதே ஆகும்.

எனவே கட்டுரையாளர் கருத்துக்களை மறுபரிசீலனை செய்வார் என்று நினைக்கின்றேன். ..ஒருவேளை இவர் தன் கருத்துக்களை மாறிக்கொள்ளாவிட ்டாலும் சமூகத்தில் இவர் போன்றவர்களால் எந்த ஒரு மாற்றத்தையும் நிகழ்த்த முடியாது என்பதால் ஒடுக்கப்பட்ட மக்கள் இவரைக்கண்டு பயம் அடைய தேவை இல்லை...ஆனால் நாம் இவரைபோன்றவர்களி டம் விழிப்போடு இருக்கவேண்டும்.
Report to administrator
+2 #9 K.Senthilkumaran 2016-08-06 10:53
நண்பர் Feroz Babu ,

(என்னுடைய முகநூல் கணக்கை அதன் நட்பை குணா பிளாக் செய்து விட்டதால் நண்பர் சிவா மூலம் இங்குள்ள விவரங்ககளை பெற்று இந்த விஷயத்தை எழுதுகிறேன்...) அவர் மூலமே இதனை வெளியிடவும் உள்ளேன்...)

திருப்பூர் குணா எனக்கு முகநூலில் மட்டுமே அறிமுகம். அவர் ம க இ க-வில் இருந்தாரா ,இல்லை ம ஜ இ க -வில் இருந்தாரா என்ற விஷயம் எல்லாம் எனக்கு தெரியாது... ம க இ க-வில் உள்ள நண்பர்களுடன் நான் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக விவாதம் செய்து உள்ளேன் என்ற பின்னணியில் இந்த விவாதத்தை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் எந்த குழப்பமும் ஏற்படாது... இவர் தலித் மக்கள் பெரும் கல்வி வேலைவாய்ப்புகளை குறுக்கு வழி என்றும் பிழைப்பு வாதம் என்று கூறுவதால் மட்டுமே நான் இவருடன் இங்கு விவாதித்துகொண்ண ்டு உள்ளேன்...இவர் கூறுவது படி தலித் மக்களின் முன்னேற்றம் என்பது குறுக்கு வழியில், பிழய்பிழைப்பு வாதம் என்றால் இவர் புரட்ச்சியை பதிப்பகம் மூலமும் , புத்தக விற்பனை நிலையம் மூலமும் விற்பனை செய்யும் வியாபாரி தானே என்ற கேள்வியை எழுப்புகின்றேன் ... மேலும் வைகோ கூட்டணியை ஆதரித்தும் இவரின் பிழைப்பு வாதம் தானே என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளேன்

-k.senthilkumaran
Report to administrator
+4 #10 K.Senthilkumaran 2016-08-06 18:47
தலித் விரோத திருப்பூர் குணா மற்றும் பாவெல் சக்திக்கு என்னுடைய கணடனங்கள் :
------------------------------------------------

கடந்த இருநாட்களில் இவர்களின் இரு கட்டுரைகளை கீற்றில்படிக்க நேர்த்தமைக்காக மிகவும் வேதனை படுகின்றேன்.. அதிலும் கீற்றில் கம்யூனிச முற்போக்கு என்ற பெயரில் வரும் இந்த தலித் விரோத கட்டுரைகள் என்னை மிகவும் குழப்பத்திலும் , கோபத்திலும் ஆழ்த்தியது. நின்று யோசனைச்செய்யும் போது கீற்று கொடுக்கும் ஜனநாயக பூர்வமான வழிகளை இந்த இரு கட்டுரையாளர்களு ம் உள்நோக்கத்துடன் தலித்-மார்சியசெ யல்பாட்டாளர்களி டையே வேற்றுமையை ஏற்படுத்த செய்யும் நோக்கத்துடனேயே இந்த கட்டுரைகளை எழுதியுள்ளார்கள ் என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது.

விசயம் என்னவென்றால் கபாலி விமசனம் என்று திருப்பூர் குணா அவர்கள் எழுதிய கீற்று கட்டுரையின் இறுதியில் அவர் தலித் மக்கள் மீது கூறும் கருத்துக்கள் கண்டனத்துக்கு உரியனவை மட்டும் அன்றி கயமை தனமானதும் கூட...அவருடைய வார்த்தைகளில் அப்படியே கூறுவது என்றால்

""இதுவும் ஒருவகை தலித் அரசியலின் வெற்றியே. சில முன்னாள், இந்நாள் ஐ.ஏ.எஸ் –சுகளும், தன்னார்வ குழுக்களின் நிறுவனர்களும் நடத்துகிற தலித் அரசியல் பயிற்சி வகுப்புகளை கவனியுங்கள். அவையனைத்தும் தலித்துகளின் முன்னேற்றம் என்ற தலைப்பிலேயே நடத்தப்படுகின்ற ன. அரசியலில், அரசுப் பணிகளில், தனியார்த் துறையில் என கிடைக்கிற எல்லா வாய்ப்புகளிலும் இருக்கிற அனைத்து குறுக்கு வழிகளையும் எப்படி பயன்படுத்துவது? என்பதுதான் அவ்வகுப்புகளில் நடத்தப்படுகிற பயிற்சி.""

குணாவின் கருத்துப்படி தலித் மக்கள் கல்வி பெறுவது, அரசுவேலைகளுக்கு முயல்வது தவறு என்று ஆகின்றது. இருநூறு ஆண்டுகளுக்கு முன் வரையில் பண்ணையடிமைகளாக இருந்த தலித் மக்கள் , ஆங்கிலேய அரசின் கீழ் மாற்றம் அடைந்த முதலாளித்துவ சமூகத்தில் தொழில்சாலைகளில் கூலி தொழிலாளர்களாக மறுபிறப்பு எடுத்தனர். மற்றும் சிலர் ஆங்கிலேய அரசு கொடுத்த நிலங்களிலும் நத்தம் புறம்போக்கு நிலங்களிலும் சிறு ,குறு விவசாயிகளாக வட தமிழ் நாட்டில் மாறினார்கள்.. இது மார்க்சு கூறும் சமூக இயக்கவியலின் அடிப்படையில் பார்க்கும் போது இயல்பான ஒன்றுதான்.. இன்றைய காலகட்டத்தில் கல்வி வேலை வாய்ப்புகளில் ஒடுக்கப்ட மக்கள் தமது இடங்களை முழுமையாக பூர்த்தி செய்ய இயலாத நிலையில் இருப்பதால் அவர்களுக்கு என்று வேலை வாய்ப்புகளில் அரசும் சரி ,தனி நபர்களின் நிறுவனங்களும் சரி சிறப்பு பயிற்சியினை கொடுக்கின்றன. இதனை தான் திருப்பூர் குணா என்ற உதிரி கம்யூனிஸ்டு குறுக்கு வழி என்று விஷத்தை கக்குகின்றார்.

ஒடுக்கப்பட்ட SC/ST மக்கள் அவர்களின் உரிமையான இடஒதுக்கீட்டை பூர்த்தி செய்ய ( 22.5% ) எடுக்கப்டும் முன்முயற்சிகளை கூட இவர் பிழைப்பு வாதம் என்று கூறுகின்றார். தலித்மக்கள் கல்வி ,அரசு வேலைவாய்ப்பை பெறுவதனை குறுக்கு வழியென்றும் , பிழைப்பு வாதமென்றும் வசைபாடுகின்றார் .. முதலில் அதனை எப்படி குறுக்கு வழியென்று கூறினார் என்று விளக்கவேண்டிய கடமையும் பின்பு எப்படி அத்தகைய முயற்சி பிழைப்புவாதமென் றும் விளக்கவேண்டிய கடமையும் இவருக்கு உள்ளது என்று கூறவிரும்புகிறேன்.

கம்யூனிச புரட்சியினை முன்னெடுப்பதாக கூறிக்கொண்டு பதிப்பகம் மற்றும் புத்தக விற்பனை நிலையம் நடத்தும் இவர் கடந்த தேர்தலில் வைகோ-விஜயகாந்த் கூட்டணிக்கு தேர்தலில் ஆதரவு கொடுத்ததை நாம் பிழைப்புவாதம் என்று வகைமை படுத்தலாம் அல்லவா? இவர் போன்ற கம்யூனிச உதிரிகளுக்கு உதிர்ந்த முடிக்கு இருக்கும் சக்தி கூட கிடையாது என்பதால் இவரை கண்டு யாறும் பதட்ட பட தேவையில்லை என்றாலும் இவர்போன்றவர்களி டம் விழிப்போடு இருக்கவேண்டும்.

http://keetru.com/…/2014-03-14-11…/31235-2016-08-03-15-22-47

அடுத்த கட்டுரையில் பாவெல் சக்தி செய்கின்ற அலம்பரைகள் அளவில்லாதது...ச ாதி ஒழிப்பு - காலாவதியாகிப்போ ன அம்பேத்கரியம்! கைகொடுக்கும் மார்க்சியம்! என்ற தலைப்பில் உள்ள இவரின் கட்டுரை தலித் செயல்பாட்டாளர்க ளையும் ,மார்சிய செய்லபாட்டாளர்க ளையும் நேர் எதிரே நிற்கவைத்து மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் நோக்கத்துடன் தான் எழுதப்பட்டு உள்ளது... இந்த கட்டுரை இந்திய வரலாற்றில் திரு அம்பேதகரின் இன்றைய வரலாற்று தேவையை மறுதலிப்பதுடன் ,அவரின் ஒப்பற்ற பணிகளை சிறுமைப்படுத்து ம் நோக்கத்துடனேயே அமைந்து உள்ளது.

இன்னும் குறிப்பாக சொல்வது என்றால் ......சாதி ஒழிப்புக்கும் ,ஹிந்துத்துவாவை அம்பலப்படுத்தவு ம் பெரியாரும் , அம்பேத்காரும் ஆற்றிய அறிவுவார்ந்த பணிகளை ஒருமித்து மேலும் நாம் முன்னேற வேண்டுமே தவிர அம்பேத்காரை விமர்சிக்கின்றே ன்.., பெரியாரை விமர்சிக்கின்றே ன் என்று இறங்கி ஹிந்துத்துவாக்க ளுக்கு கொடிபிடிக்கும் வேலையை செய்யும் தருணம் அல்ல இது....அம்பேத்க ரை போன்று பெரியாரும் சீர்திருத்த வாதியாக தான் இருந்தார். எனவே சாதி ஒழிப்பு பெரிய பெரியாரின் கருத்துக்களை பாவெல் அவர்களால் விமர்சனத்துக்கு உட்படுத்தமுடியு மா? அப்படி பட்ட விமர்சனம் தேவை தானா ? அத்தகைய விமர்சனங்கள் முற்போக்கு சக்திகளின் ஒற்றுமையை சீர்குலைக்காதா? இதனை எல்லாம் எண்ணி பார்க்காமல் பாவெல் சக்தி குழப்பத்தை ஏற்படுத்த முயலுகின்றார்.

ஆம் பெரியாரும் ,அம்பேத்காரும் சீர்திருத்தவாதி கள் தான். சீர்த்திருத்தவா திகளின் குறைகளை ஆய்வு செய்வதைவிட அவர்கள் இந்த சமூகத்துக்கு என்ன பணியாற்றினார்கள ் என்று ஆய்வு செய்து கூறுவது தான் சரியானதாகும்... சாதி ஒழிப்புக்கும் ,ஹிந்துத்துவாவை அம்பலப்படுத்தவு ம் பெரியாரும் , அம்பேத்காரும் ஆற்றிய பணிகளை ஒருமித்து மேலும் நாம் சாதி ஒழிப்பில் முன்னேற வேண்டுமே தவிர அம்பேத்காரை விமர்சிக்கின்றே ன்.., பெரியாரை விமர்சிக்கின்றே ன் என்று இறங்கி ஹிந்துத்துவாக்க ளுக்கு கொடிபிடிக்கும் வேலையை நாம் செய்யக்கூடாது அல்லவே பாவெல் சக்தி?

http://keetru.com/…/2014-03-08-12…/31248-2016-08-05-07-46-37
Report to administrator

Add comment


Security code
Refresh