Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

கீற்று படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

Enter your email address:

Keetru RSS Feed

கடைசி பதிவேற்றம்:

  • சனிக்கிழமை, 21 அக்டோபர் 2017, 13:27:59.

uppu karuvadu

காட்சிக்கு காட்சி பகடி.... அதன் பின்னால் அழகான ஒரு கதை.. அதுவும் அற்புதமான வசனங்களோடு...எல்லாருமே.. நடிக்கத் தெரிந்தவர்கள்.... மயில்சாமி வழக்கம் போல்.... பின்னிப் பெடலெடுக்கிறார் என்று சற்று திரும்பினால்....."நீங்க எல்லாம் இன்னும் முன்னமே சினிமாவுக்கு வந்துருக்கணும்.." என்று கமல் சார் கூறிய பாஸ்கர்....சிரிப்போ....நடிப்போ... அழுகையோ... கோபமோ... பாத்திரம் படைக்கிறார்...அவர் சொல்லும் கவிதைகள்... அபாரம்.. சிந்தனைத் தூண்டும்.. சிறு சிறு வெடிகள்.... அப்படியே சற்று திரும்பினால்....சாம்ஸ்.... அடடா கிடைச்ச கேப்பில் எல்லாம்.... போல்ட் பண்ணிக் கொண்டே இருக்கிறார்.... அந்த MBA படித்த நண்பர்... அவர் மொழியில்... வெளுக்கிறார்....கருணாகரன்.... கண்டிப்பாக வேறு லெவல் நடிகன் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது....எல்லாவற்றையும் தாண்டி... அந்த சாமியார் சரவணன்... இது கடைசி பஸ் விட்றக் கூடாது என்று முடிவு செய்து பொளந்து கட்டுவது... ஆள் ஆளுக்கு டைமிங்கில் பட்டாசு கொளுத்துவது என்று.... படம் முழுக்க அதகளம்...

கருணாகரன் தோழி பிளஸ் காதலி..... அழகி....(ஆனால் அவர் நடித்துக் காட்டும் இடம் மட்டும் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் ) இவர்களோடு "டாடி எனக்கு ஒரு டவுட்" செந்தில் ..... தூள் கிளப்புகிறார்... அவர் நந்திதாவிடம் அடி வாங்கும் போதே தெரிந்து விட்டது.. அல்வாக்கடைக்காரன் ஆப்பு வைக்கப் போகிறான் என்று.. அது அப்படியே நடந்தது...இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் என்று கூறினால் அது கதாபாத்திரங்களின் ஸ்திரத் தன்மை....

கதை நாயகி....நந்திதா.... தனக்கு நடிக்கத் தெரியாதது போல நடிப்பதில்... அள்ளு கிளப்புகிறார்...குமாரவேல்.... ராதாமோகனின் பேனா என்றே கூறலாம்.. அவர் யோசித்த உடனேயே பாத்திரமாக பாத்திரமாக வடிந்து விடுவதில் அவருக்கு அவரே நிகர்... பேசிக் கொண்டே அழுவதும்.... அழுது கொண்டே.... நிறுத்த நிறுத்த தன்னை உணரவுதும்... ஆசம்....

படம் எடுக்க முயற்சிக்கும் ஒரு மனிதனின் கதை......அது சந்தர்ப்பங்களால் கும்மி அடிக்கப் படுவதுதான் கதை என்றாலும்.. கதை சொல்லும் விதம்.. அலாதியானது.. இதற்கு எப்படி ஸ்கிரிப்ட் எழுதியிருப்பார் என்று யோசிக்கிறேன்.... திருக்குறளை இப்படியும் பயன்படுத்தலாம் என்பதும்..சகுனதுக்கு மாற்று வழி சொல்வதும்.. இயக்குனரின் தனித்திறமை.. அது பொதுக் கோபத்தை உருட்டி உருட்டி நேர்மையான கேள்வியாக்கிய வித்தை...கல்கியின் பாத்திரங்கள் இலக்கிய பரிச்சயம் காட்டுகிறது......

யார் வசனம் என்று பார்க்காமல் இருக்கவே முடியாது...பொன் பார்த்திபன்.... நின்று விளையாடுவது என்பது இதுதான்.... வார்த்தைக்கு வார்த்தை.... வாழ்கையின் சூட்சுமத்தை அவிழ்க்கிறார்....பாடல்.... கேட்க முடிகிறது.... அந்த ஹீரோ பையன்.. ஆட்டம் செம... நடிக்கவும் செய்கிறார்.... சினிமா என்பது கூட்டு முயற்சி என்பதை இதை விட தெளிவாக சினிமாக்கவாகவே காட்ட முடியாது...அவரவர் பாத்திரம் நிரம்பி வழிகையில் மற்றவர் பாத்திரம் கனக்கச்சிதமாக ஏற்றுக் கொள்வதில்.. கதை வழிந்து நீரோடை ஆகிறது......

ஒரு ரசிகனாக அவர்களாகவே பேசிக் கொண்டு காட்சி பற்றிய ஒரு முடிவுக்கு வருவது... ஒரு சினிமாவின் ஆக்கம் பற்றிய புரிதலை தருகிறது.. ஒரே வசனத்தை முன் பின் மாற்றி போட்டு.. இன்றைய தலைமுறையின் வார்த்தைகளை சேர்த்து குமாரவேல் பேசுவது தலைமுறைப் புரிதல்..... நிறைய கருக்கள் நல்ல கதைகள் ஆவதற்கு முயற்சித்து மொக்கையாக மாறும் தருணம் அதிகம்..அதை கவனமாக கையாள வேண்டும் என்று சிரிக்க சிரிக்க சொல்லி இருக்கிறார் ராதாமோகன்...

ஒரு வசனத்தைக் கூட இங்கு உதாரணத்துக்கு கூற முடியாது.. ஏன் என்றால் ஒவ்வொரு வசனமும்.. நல்ல சினிமாவுக்கான உதாரணம்... பார்க்க தவற விடவே கூடாத படம்.. உப்புக் கருவாடு....

உப்புக்கருவாடு.. மணக்கிறது....

- கவிஜி

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 இ.பு.ஞானப்பிரகாசன் 2016-04-13 15:21
கொஞ்சம் மிகையாகவே பாராட்டியிருக்க ிறீர்கள் என்றாலும், உண்மையிலேயே இது சிறப்பான படம்! மிகவும் ரசித்துப் பார்த்தோம். எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். ஆனால், படம் ஓடவில்லையே! காரணம், போதுமான விளம்பரமின்மை. தம்பியின் நண்பர்கள் கூறித்தான் தெரியும் இராதாமோகன் அவர்களின் படம் ஒன்று வந்திருக்கிறது, பெயர் உப்புக் கருவாடு என்று. இரண்டு கோடி பட்ஜெட், ஒரு கோடி விளம்பரம் என்று படத்தில் வசனம் வைத்தார்கள். ஆனால், அவர்களே அதைக் கடைப்பிடிக்கவில ்லை எனத் தோன்றுகிறது. ஒவ்வொரு விளம்பர இடைவேளையிலும் ஒருமுறை என ஒரு நாளுக்கு ஆயிரம் முறை ஒரு படத்தை விளம்பரம் செய்யும் இந்நாட்களில் மருந்துக்குக் கூடத் தொலைக்காட்சியில ் விளம்பரம் செய்யாவிட்டால் படம் எப்படி ஓடும்? இப்படி ஒரு படம் ஓடவில்லையே என உண்மையிலேயே வருந்துகிறேன்!
Report to administrator

Add comment


Security code
Refresh