Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

visaranaiஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால் "கடவுளுக்கு நிகராக அதிகாரம் படைத்தவர்களிடம் நீங்கள் மாட்டிக்கொண்டால் என்ன ஆவீர்கள்?​" அதுதான் கதை. ஆந்தராவில் ​வேலை பார்க்கும் தமிழக இளைஞர்கள் நான்கு பேர். விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப்பட்டு அவர்கள் மேல் பொய் வழக்கு போட முயற்சி செய்கிறார்கள். போலீஸ்காரர்களின் முயற்சி தோல்வியில் முடிகிறது. கோர்ட்டில் சரணடைய வரும் ஒருவரை இவர்களின் மூலம் சென்னைக்கு அழைத்து வருகிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி.

அழைத்து வந்தவரை விசாரணை என்ற பெயரில் கொலை செய்துவிட்டு தற்கொலையாக மாற்றுகிறார்கள். தங்களுடைய பிளான் இவர்களுக்கு தெரிந்து விட்டது என்று இவர்களையும் என்கவுண்டர் என்ற பெயரில் கொலை செய்து, பிடிபடாமல் இருக்கும் வங்கி கொள்ளையர்கள் சுட்டுக்கொலை என்று வழக்கை முடித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். என்கவுண்டர் ​நடக்கிறதா இல்லையா என்பதுதான் கிளைமாக்ஸ். ​ ​​​​

2G ​ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை உச்சநீதிமன்றம் நேரடியாக கண்காணித்து வந்த சமயத்தில் ​ஆ​.ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்சா திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். டெல்லி செல்வதற்காக சாதிக் பாட்ஷா டிக்கெட் வாங்கி வைத்திருந்ததாகவும், மேலும் அவர் அப்ரூவராக திட்டமிட்டிருந்தார் என்றும் தகவல் பரவியது. ​​வங்கிகளில் கொள்ளையடித்தாக சந்தேகப்பட்டு வட மாநிலங்களைச் சேர்ந்த 5 பேரை வேளச்சேரியில் ஒரு வீட்டில் போலீஸார் மிகவும் திட்டமிட்டு என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொன்றனர். ​​விசாரணை​ ​என்ற பெயரில் அழைத்துச் செல்லப்படுபவர்களின் ​​மீது பொய் வழக்கு போட்டு துன்புறுத்துகிறது காவல் துறை.​ இதற்கு உதரணமாக ராஜீவ்காந்தி கொலை வழக்கை சொல்லலாம்.

​கொள்ளை அடிப்பதே தியாகம்; நீதிமன்றங்கள் அரச மரத்தடி சொம்புகள்; ஊடகங்களோ மாமாக்கள்; அதிகார வர்க்கம்தான் கமிஷன் ஏஜெண்டு; போலீசு துறை ஏவல் நாய்; சர்வாதிகாரமே நிர்வாகத் திறன்; சதிச்செயலே சாணக்கிய​​​ம்​ என்பதுதான் இன்றைய அரசியல். ​​​போர் என்பது ரத்தம் சிந்தும் அரசியல். அரசியல் என்பது ரத்தம் சிந்தாத போர் என்பார்கள். ​இந்தப் படம் சமகால அரசியலைப் பேசுகிறது. இப்படி ஒரு படத்தை எடுப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும். ​கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

வாழ்த்துக்கள் வெற்றிமாறன். ​​

- தங்க.சத்தியமூர்த்தி

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 dasan 2016-02-15 02:46
Hello sir indha padathukkana vimarsanam illa keetru mela enaku miga periya nambikai mariyathai iruku adhe samayam inum yen thaarai thappatai madhiri yara ratha vasam adikira kupaiyana adhum bala madhi oru sico voda padatha pathi vimarsanam pannathathu keetru voda bayama illa neengalum corparate ku keela poiteengala.... .....padama adhu chi chi chi thoooooooo ipdi thupitey irukalam.ore oru varthailey sonna bala ku kudumbam irukka illa pondati kolanthai amma yellarayum konnutu ponathoda kudumbam nadathurara unmaiyana matters sa edunga bala but unga unmayana character ra padama edutha naanga bayanthuduvom.b ala na enna periya appa takkara balumahendra voda moodupani,moond ram pirai, sathileelavathi ,veedu,....etc ipdi padam edutha aalaoda sishyana nee enake vetkama iruku.sathai, tholu,ratham,ev anukuume puriyatha oru script(keta its real story) nu solvanga asinga asinga mana varthaigal yow un padathukku yevan ya dialogue eluthuravan avan kaila kidaicha .............ba la yedha indha ulagathukku adhum unga sico moolaiku utpattu solla vantha theliva sollunga thala .....veerasaamy padatha kuda 17 murai parthen yena sirichu sirichu ennoda health improve aaiduchi.but unnoda padatha partha 10 varusham kalichu saaguravam inniki indha nimidamey sethuduvuan padam edu adhan unna valarka media irukku illa but nalla padama edu illa nee bagayam hospital la admit aaidu.treatment mudinji apuram nalla padama eduthukkalam.th evai illama tamil pasanga manasula ratha veriyaiyum idhupondra valgar ana pathivai pathivai padhikathey.mud inja varikkum nee saapidura saapatula ratham illama paarthuko.yena andha ratham namma nanbargaloda rathama kuda irukkalam yena nee edukkra padam apdi ratham na bayapadura oru 3rd person ku adipatta kuda kattu pottu vidura paramparai unnoda padatha parthu ratha veri pudichu alaiyuthu pasam sentiment anniyonyam idhellam gali pana punniyam unna mattume serum.nerla nèe matum iruntha naalu varthai narukkunu kettu poitu irupen enna panna mudiyala adhukkana chance kidaicha nee yellam oru director ra da nu kettutu en velaiyaip parka poite irupen.
Report to administrator

Add comment


Security code
Refresh