Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

kaaka muttai 418

ஊரையே அலற வைத்துக்கொண்டிருக்கும் இரண்டு சிறுவர்களைப் பற்றி ஒரு செய்தித் தொகுப்பை படமாக்கிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி ஊழியர்களுக்கு சம்பந்தப்பட்ட சிறுவர்கள் யாரெனத் தெரியவில்லை. எதேச்சையாக அவ்வழியே வரும் அச்சிறுவர்களை காமிரா வளையத்திற்குள் நுழைந்து விடாதபடி தடுக்கும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களின் அறிவுத்திறமை இருக்கே! அட...அட. காக்கா முட்டை இதுபோன்ற எதார்த்தங்களை இயல்பாகப் பேசுகிறது.

சிறையில் கணவன்; வயதான மாமியார்; வாண்டுகளாக இரண்டு ஆண்குழந்தைகள்; இவர்களைத் தாங்கும் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ். வாண்டுகளாக விக்னேஷ் (பெரிய காக்கா முட்டை), இரமேஷ் (சின்ன காக்கா முட்டை). இவர்கள் மட்டுமல்ல, இரயில்வே கலாஸ் தொழிலாளியாக ஜோ மல்லூரி, சிறுசிறு குற்றங்களில் ஈடுபடுகிறவர்களாக இரமேஷ்திலக், யோகி பாபு, பிஸ்ஸா நிறுவனங்களின் முதலாளியாக பாபு ஆண்டனி என கதாபாத்திரங்களின் உருவாக்கம் அற்புதம்.

இயக்குனர் எம்.மணிகண்டன் ஒளிப்பதிவாளராகவும் கலக்கியிருக்கிறார். கதாபாத்திரங்களை குளோசப்பில் காட்டி திரையை விழுங்காமல் சுற்றுப்புறங்களோடு காட்சிப்படுத்தல் அமர்க்களம். காட்சியமைப்புகளை திணறடிக்காமல் இசைந்து நிற்கும் இசையைத் தந்த ஜி.வி.பிரகாசை தட்டி கொடுக்கலாம். படத்தின் இன்னொரு பலம் தெளிவான திரைக்கதையை அழகாக்கி தந்திருக்கும் கிஷோரின் எடிட்டிங்.

பிஸ்ஸா தின்ன ஆசைப்படும் அந்த இரண்டு சிறுவர்களும் ஏழ்மையிலிருந்து வந்திருக்கும் எல்லோருடைய குழந்தைப்பருவத்தையும் நினைவூட்டி விடுகிறார்கள். பரோட்டா அறிமுகமான காலத்தில்தான் உணவகங்களின் தோசைக்கற்கள் வீதிக்கு வந்தன. பரோட்டா மாஸ்டர் கொத்துப்பரோட்டாவில் கறிக்குழம்பை ஊற்றி கரண்டியால் தாளம் போடும்போது வாசம் ஊரைத் தூக்கும். வாங்கித் தின்ன காசிருக்காது. நாவில் எச்சிலோடு அதை வேடிக்கைப் பார்ப்பது எங்கள் வழக்கம். கண்ணில் வெறியோடு பார்த்துக்கொண்டிருந்த ஒருநாளில் சுரீரென முதுகில் விழுந்தது. எனக்கு முன்னமே நண்பர்கள் காணாமல் போயிருந்தனர். "வீட்டுக்கு வா, ஒஞ்சித்தப்பங்கிட்ட சொல்லி தோல உரிக்கேன்" ஓடிக்கொண்டிருந்த என்னை பாட்டியின் வசவு துரத்தியது. தயங்கி தயங்கி வீட்டுக்குள் நுழைந்தபோது எனக்குப் பின்னால் வந்த பாட்டியின் கையில் கொத்துப்பரோட்டா இருந்தது.

இதுதான் ஏழ்மை! பிள்ளைகளை ஏங்க விட மாட்டார்கள். கறிக்குழம்பு காலாகாலமாய் மனிதர்களின் உணவு. ஆனால் பிராய்லர் கோழி வருவதற்கு முன்பு எல்லோருக்கும் அது வாய்க்காது. பிள்ளைகள் கேட்கும். பிள்ளைகளின் ஆசையை பண்டிகை நாட்களில் பெற்றோர்கள் நிறைவேற்றுவார்கள். அதுதான் ஏழ்மை. நினைத்தபோது கிடைக்காதே தவிர நிறைவேறாமல் போகாது ஏழைப் பிள்ளைகளின் ஆசைகள்.

ஆனால் படத்தில் சிறுவர்கள் 300 ரூபாய் பிஸ்ஸாவுக்கு ஆசைப்படுகிறார்கள். சிறையிலிருக்கும் கணவனை மீட்பதற்கு காசு சேர்க்க்கும் தாய் அதை நிராகரிக்கிறாள். இது ஏழைகளின் எதார்த்தமா? இல்லவே இல்லை. தந்தை அருகில் இல்லாதபோதுதான் ஏழைத்தாய் இன்னும் அதிக அக்கறையோடு பிள்ளைகளை கவனிப்பாள். ஒரு பண்டிகை நாள் அல்லது கால அவகாசத்தோடு அதை வாங்கித் தருவதாக சொல்லியிருப்பாள். புரியாத பிள்ளைகளுக்கு அடித்தும், அதட்டியும், அரவணைத்தும் புரிய வைப்பாள். பிள்ளைகளின் எல்லா ஏக்கமும் அந்த தாயின் அரவணைப்பில் தள்ளிப்போகும். இதுதான் ஏழைகளின் உண்மை.

இயக்குனருக்கு இந்த உண்மை புரியவில்லை. ஏழ்மையின் பாசமும், அய்யோ என்பிள்ளைகள் ஏங்கிப்போகுமே என்ற பரிதவிப்பும் புரியவில்லை. ஆகையால் இயக்குனர் அந்த ஏழைத்தாய் பாத்திரத்தை மேல்தட்டு வர்க்கத்தின் மனநிலைக்கு மாற்றுகிறார். அப்பா அருகிலில்லாதப் பிள்ளைகளை அடிக்கவே கூடாதென்னும் ஏழைத்தாயை வறட்டு கண்டிப்பு, கறார்தன்மை ஆகியவைகளுக்குப் பலியாகும் நடுத்தரவார்க்க அம்மாவாக ஆக்குகிறார்.

அப்புறமென்ன? அம்மா பிள்ளைகளின் ஆசையை நிராகரிக்கிறாள்; பிள்ளைகள் பிஸ்ஸாவுக்காக அப்பாவே வேண்டாமென நிராகரிக்கிறார்கள்; தங்களை தலையில் வைத்துக் கொண்டாடிய பாட்டியை வார்த்தையால் கொல்கிறார்கள்; நிலக்கரியைத் திருடி நண்பரான கலாஸ் தொழிலாளியின் வேலையிழப்புக்கு காரணமாகுகிறார்கள்; பணக்கார சிறுவர்களின் பானிப்பூரி ஆசையைப் பயன்படுத்தி அவர்களின் புதுத்துணிகளை ஆட்டையைப் போடுகிறார்கள். மொத்தத்தில் வயதுக்கு உகந்த எல்லா அயோக்கியத்தனங்களையும் செய்கிறார்கள்.

ஏழைகளின் இயல்பை கொன்றுவிடும் இயக்குனர் அவர்களின் தன்மானத்தை காட்டுவதாக முயற்சிக்கும் இடமும் அபத்தமானது. சிறுவர்களின் பிஸ்ஸா ஆசையை உணர்ந்த அவர்களின் நண்பனான அபார்ட்மெண்ட் சிறுவன் தனக்கு கிடைத்ததை மிச்சப்படுத்தி எடுத்து வருகிறான். அதை ஏழைச்சிறுவர்கள் வேண்டாமென மறுப்பதுதான் தன்மானமாம்! பிஞ்சுள்ளங்களில் பெரிய வர்க்க பேதங்கள் இருப்பதில்லை என்கிற எதார்த்தமும் இயக்குனருக்குத் தெரியவில்லை.

இயக்குனரின் நடுத்தர வர்க்க கண்ணோட்டம் ஏழைகளின் இயல்பான பாசத்தை உணர முடியாமல் தடுப்பதுபோல் முதலாளிகளின் இயல்பான கொடூரத்தையும் காண முடியாமல் தடுத்திருக்கிறது. பிஸ்ஸா வாங்க கடைக்கு வரும் ஏழை சிறுவர்களை தொடர்ந்து வாட்ச்மேன் தடுக்கிறார். ஒரு கட்டத்தில் கடையின் மானேஜர் சிறுவர்களை அடிக்கவும் செய்கிறார். மானேஜர் அடித்தது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக பிஸ்ஸா கார்னர் முதலாளி கையைப் பிசைந்து நிற்கிறார். இப்படி செய்யலாமா? என மானேஜரைக் கண்டிக்கிறார். முதலாளிக்கு தெரியாமலும், மானேஜரின் அதிகப்பிரசங்கித்தனத்தாலும் இது நடப்பதாக இயக்குனர் கதை சொல்கிறார்.

பிஸ்ஸா கார்னர் மட்டுமல்ல எல்லா நிறுவனங்களிலும் விதிமுறைகள் உள்ளன. நட்சத்திர உணவகங்களில் நுழைவதற்கு வாகனம், உடை மற்றும் செருப்பு குறித்த தகுதிகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. வரையறுக்கப்பட்ட தகுதிகளோடு வராதவர்களை உள்ளே அனுமதிப்பதில்லை. நிறுவனங்களின் விதிமுறைகளைத்தான் அதன் ஊழியர்கள் கடைப்பிடிக்கிறார்கள். யாராவது மீற முயற்சிக்கும்போது கைகலப்புவரைக்கும் சென்று விடுகிறது. இதில் குற்றம் ஊழியர்கள் சார்ந்ததல்ல, நிறுவனம் சார்ந்தது; நிறுவனத்தின் உரிமையாளர் சார்ந்தது. ஆனால் நமது இயக்குனருக்கு இந்த உண்மைத் தெரியவில்லை.

இயக்குனர், முதலாளியை அப்பாவியாகக் காட்டுகிறார். முதலாளி அப்பாவியாக இருப்பதால் அவருடன் இருக்கிற ஒட்டுண்ணிகள் அவரைத் தவறுதலாக வழிநடத்துவதாகக் காட்டுகிறார். சங்கிலித்தொடர் பிஸ்ஸா கார்னர்களை நடத்தும் முதலாளி அப்பாவியாக இருப்பதற்கு சிறுசிறு குற்றங்களில் ஈடுபடும் குப்பத்து இளைஞர்கள் வரை வில்லன்கள் போலாகின்றனர்.

இயக்குனரின் நடுத்தர வர்க்க கோமாளித்தன நல்லெண்ணம் நரகத்தில் விழுகிற உச்சக்கட்டம் என்ன தெரியுமா? அபார்ட்மெண்ட் நண்பன் மிச்சப்படுத்தி தருகிற பிஸ்ஸாவை வாங்கித் தின்பதை அவமானமாகக் கருதும் காக்கா முட்டை சிறுவர்கள், உண்மையிலேயே தங்களை அடித்து, அவமானப்படுத்திய நிறுவனம் இலவசமாக தருவதைத் தின்பதுதான்.

ஏழைகளைப் பற்றிப் பேச வெறும் நல்லெண்ணம் மட்டும் போதாது. கலைத்திறன் மட்டும் போதாது. ஏழைகளோடு வாழ்ந்துப் பார்க்கவும் வேண்டும்.

- திருப்பூர் குணா

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 இளம்பிறை 2015-07-06 11:40
பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றி வைக்கும் அம்மாக்கள். சிலவேளைகளில் இல்லாமையால் பிள்ளைகளின் மனத்தில் கலக்கங்களை உருவாக்கும் நிலையும் உருவாகும்.
Report to administrator
-1 #2 Sharavanan 2015-07-06 12:01
miga arumai
Report to administrator
+6 #3 Brittilla 2015-07-06 12:52
உங்கள் விமர்சனம் தான் மிகவும் எச்சத்தனமாக உள்ள்து. யாராவது நன்றாக உள்ளது என்று சொன்னால் குறை கூறும் எச்சத்தனம்... 3oo rs ku upper middle class enga veetula yae pizza thevai illai endru than solvanga.. 30000 rs kashta pattu serthu kondirupaval vendam endru solvar..
appartment payan thanaku kidaitha pizza vai eduthu vara villai, pathi kadithu meethi irukum bun ai than kondu varuvan.. athai tan avan vendam endru soluvan.. athu antha payan nin karuthu... director motha ஏழை payangalin karuthu athu tan endru sola villai...
muthalali ai appavi ena director engaeyum sola villa pirachanai vantha pin veru vazhi illamal samalipathaga vae solgirar...
Report to administrator
+1 #4 Nanthini 2015-07-06 12:58
oru padam vanthal, athuvum konjam sumaraga masala kuppai illamal irunthal, naallu peru paratti vittal athai udanae vari ku vari kurai kuruvathu ena vithamana mana nillai..

director varumai yil ullavargalin vazhkai ai documentry eduka villa... antha characters ah appadi ae rasika vendum, athai viduthu avargalai ellaroda representative ah ninaithu kondu comment panna kudathu...
Report to administrator
-1 #5 subathra kamal 2015-07-06 14:55
super super
Report to administrator
0 #6 samaran 2015-07-06 15:33
அய்யா திரு. திருப்பூர் குணா அவர்களின் தொடர்பு எண் கொடுங்களேன்
Report to administrator
+3 #7 ராமகிருஷ்ணன் 2015-07-06 16:21
நிலக்கரியைத் திருடி நண்பரான கலாஸ் தொழிலாளியின் வேலையிழப்புக்கு காரணமாகுகிறார்கள்
//உதவுவதாக நினைத்து அந்த தொழிலாளியே நிலக்கரியை எடுத்துக்கொள்ள சொல்வது எப்படி இவர்கள் திருடுவதாகும். அது திருட்டு என்றும் இதனால் அந்த தொழிலாளி வேலை இழப்பார் என்றும் சிறுவர்கள் எப்படி அறிவார்கள்.

பிஞ்சுள்ளங்களில் பெரிய வர்க்க பேதங்கள் இருப்பதில்லை என்கிற எதார்த்தமும் இயக்குனருக்குத் தெரியவில்லை.
//பேதங்கள் இருக்கிறது என்பது அப்பட்டமான உண்மை. பிஞ்சுகள் என நீங்கள் குறிப்பிடுவது பிறந்த குழந்தையாகவே இருக்க முடியும். சமுதாயத்தின் வளர்ப்புமுறை அப்படி. குறிப்பிட்ட சிலருடன் விளையாடவோ பேசவோ கூடாது என சொல்லியே தனது பிள்ளைகளை வளர்க்கிறார்கள் . அபார்ட்மண்ட் சிறுவன் இவர்களை சக நண்பனாக நடத்தவில்லையே. நிஜத்திலும் அவ்வாறே வர்க்க பேதத்தோடு பிள்ளைகள் வளர்கிறார்கள் என்பது என் கருத்து.

முதலாளிக்கு தெரியாமலும், மானேஜரின் அதிகப்பிரசங்கித ்தனத்தாலும் இது நடப்பதாக இயக்குனர் கதை சொல்கிறார்.
//முதலாளியின் அதட்டல் அடித்ததற்காக இல்லை, கேமராவில் பதிவானதுதான். முதலாளி தன் வியாபாரம் கெட்டுவிட்டதே என கவலை படுகிறார். சிறுவர்கள் அடிபட்டதை அவர் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. முதலாளியை காப்பாற்ற இயக்குனர் நினைக்கவேயில்லையே

இயக்குனரின் நடுத்தர வர்க்க கோமாளித்தன நல்லெண்ணம் நரகத்தில் விழுகிற உச்சக்கட்டம் என்ன தெரியுமா? அபார்ட்மெண்ட் நண்பன் மிச்சப்படுத்தி தருகிற பிஸ்ஸாவை வாங்கித் தின்பதை அவமானமாகக் கருதும் காக்கா முட்டை சிறுவர்கள், உண்மையிலேயே தங்களை அடித்து, அவமானப்படுத்திய நிறுவனம் இலவசமாக தருவதைத் தின்பதுதான்.
//சிறுவர்களுக்கு தெரியாமல் பிஸ்ஸா கடைக்கு அவர்களை கூட்டி போகிறார்கள். அதுபோக, அடித்தது அந்த மேனேஜர் தானே, முதலாளி இல்லையே.. இத்தனைக்கும் மன்னிப்பு கேட்டு அவர்களை பிரபலம் போல நடத்தி அங்கு கூட்டி வருகிறார்கள். அப்பார்ட்மெண்ட் சிறுவன் நண்பனே இல்லை, ஏதோ zooவில் மிருகங்களை பார்ப்பது போல் இவர்களைப் பார்க்கிறான். இந்த இரண்டையும் சமப்படுத்தி பார்க்க தேவையில்லை.
Report to administrator
-1 #8 Ra 2015-07-06 16:26
Worst review.... Stop this...
Report to administrator
-2 #9 Iniyavan 2015-07-07 22:45
The most pathetic movie review.
Report to administrator
-1 #10 Ravi 2015-07-08 19:20
விமர்சனம் எழுத ரொம்பவே மெனக்கிட்ட மாதிரி தெரியுது.
Report to administrator
-2 #11 b.k.dasan .tamil 2015-07-08 21:39
Yaarachum yedhachum yepadiyachum oru nalla visayatha sollidanum nu mudhal adiya eduthu vacha vimarsanam or karuthu solren ra perla avanayum avan padaipayum kili kili nu kilichi elutha vendiyathu .. , . ivlo pesura trupur guna avargaley neenga oru padam edunga ungalukku dhan........ ..... . ... .. Yellam theriyumey
Report to administrator
-1 #12 Ramu Palaniappan 2015-07-09 02:11
எல்லோரும் சொல்லும் ஒன்றை மறுதலித்து நேர் எதிர் திசையில் செல்வது அறிவுஜீவித்தனம் என்று நம்பிக்கொண்டு அலையும் கூட்டத்தின் முன்னணியில் நின்ற ஒருவரை அழைத்து வந்து விமரிசனம் எழுத வைக்க வேண்டிய அவசியம்என்ன?

ஏழைகளின் உணர்வுகளை மொத்தமாக குத்தகை எடுத்து சில்லறையில் வியாபாரம் செய்பவரை போன்று தன்னை கருதிக்கொண்டு வாய்க்கு வந்ததை திரை விமரிசனம் என்று நம்பிக்கொண்டு எழுதுவது குணாவின் உரிமையாக இருக்கலாம். ஆனால் அதையெல்லாம் பிரசுரிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் கீற்றுக்கு எங்கிருந்து வந்தது?
Report to administrator
0 #13 திருப்பூர் குணா 2015-07-09 10:07
தோழர்களே! குழந்தைகளின் ஆசைக்கு அடித்தோ, அரவணைத்தோ சமாதானம் செய்வதும், சாத்தியப்பட்டதை , சாத்தியமான நேரத்தில் தீர்த்து வைப்பதும் ஏழைத்தாயின் பாத்திரமா? வரட்டு கண்டிப்பும், நிராகரிப்பும் ஏழைத்தாயின் பாத்திரமா?

அடித்து அவமானப்படுத்திய வன் தந்திரமாக சமாளிக்கும்போது எதிர்த்து நிற்பது ஏழைகளின் பாத்திரமா? பகட்டுக்கும், பளபளப்புக்கும் மயங்கிப் பின்னால பலியாடு மாதிரிப் போவது ஏழைகளின் பாத்திரமா?

கிரிக்கெட் கிளப்புல வேட்டி கட்டினவங்கள விட முடியாதுன்னு நடந்த கூத்தையும், அது கிரிக்கெட் கிளப்பின் சட்டதிட்டத்தால் நடந்த கூத்தென்பதையும் நாடறியும். படத்தில் பிஸ்ஸா கார்னரின் சட்டதிட்டங்களும ், அதை கடைபிடிக்க சொல்லும் முதலாளியும் பிரச்சினையா? சட்டதிட்டங்களை பராமரிப்பதற்கான பணியில் சம்பளம் வாங்கும் வேலைக்காரர்கள் பிரச்சினையா?

இதை விவாதிப்பது விமர்சனத்தின் மீதான கருத்தாக எடுத்துக்கொள்ளல ாம். மாறாக நீ யார்? உன் குலம், கோத்திரம் என்ன? என்று எகத்தாளம் பேசுவதோ, கொச்சைப்படுத்து வதோ மதிப்புடையதல்ல. அது இயலாமையின் பரிதாபம்.

கொஞ்சம் நல்லதா, இதையாவது செய்கிறார்களே என்று ஏழைகளுக்கு தானம் செய்கிற தர்மகர்த்தா மனோபாவம் எங்களுக்கு தேவையில்லை. இதை நாங்கள் பாலச்சந்தர் காலத்திலிருந்து ப் பார்த்துக்கொண்ட ிருக்கிறோம். இந்த போக்குகளை நெடுங்காலமாய் பார்த்த அனுபவத்தில் விமர்சனங்கள் கூர்மையாகத்தான் இருக்கும்.
Report to administrator
0 #14 sethu 2015-08-18 20:15
Dear comrade
your review has been written from the perspective of middle class so called critical view point . The film is an attempt with so many pitfalls and weaknesses to portray the living conditions of poorest of the poor living in slum unlike madras which potrays the cinematic reality of slum and so called dalit life in absolute absurdity and stupitidity. Your review should have concentrated on strength of the film . you could accept that there is no heroism villains conspiracies and unrealistic potrayals of character . comradely sethu
Report to administrator
0 #15 மாற்றுச் சிந்தனைப் பேரியக்கம் 2015-12-30 15:03
எதார்த்த பதிவு வாழ்த்துக்கள்
Report to administrator

Add comment


Security code
Refresh