Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

 சமீபத்தில் சிம்பு-அனிருத் கூட்டணியில் உருவாகி தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் ‘தத்துவப் பாடல்’ - “என்னா புண்டைக்கு லவ் பண்றோம்…….” என்ற பாடல். தமிழகமெங்கும் இந்தப் பாடலுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்திக் கொண்டு இருக்கின்றன. சிம்புவையும், அனிருத்தையும் கைது செய்ய வேண்டும் என்று வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இதுவரை அந்த நாயை நம்ம காவல்துறை கைது செய்யவில்லை. வழக்கம் போல பாதுகாப்பு வழங்கிக் கொண்டு இருக்கின்றது. இந்தப் பிரச்சினை பெரிய அளவிற்கு விஸ்வரூபம் எடுத்த பிறகே நாம் இந்தப் பாடலைக் கேட்க நேர்ந்தது. ஆனால் இந்தப் பாடல் உண்மையிலேயே எனக்கு எந்த வித அதிர்ச்சியும் கொடுக்கவில்லை. காரணம் இதைவிட பல கேவலமான பாடல்களை நாம் பல ஆண்டுகளாக கேட்டு வந்திருக்கின்றோம் என்பதால் தான்.

 simbu 320பெண்களின் உடலை பாலியல் வக்கிரத்துடன் வர்ணிக்கும் பல திரையிசைப் பாடல்கள் தமிழ்த்திரை உலகில் குவிந்து கிடக்கின்றன. கண்ணதாசனில் தொடங்கி வாலி, வைரமுத்து, யுகபாரதி, பா.விஜய், நா.முத்துக்குமார் என ஒரு பெரிய பட்டாளமே இப்படி ஆபாசாமாக பாட்டு எழுதுவதற்கு என்றே இருக்கின்றது. இவர்களின் வேலை அரிப்பெடுத்த இயக்குனர்களுக்கும், கலா ரசிகர்களுக்கும் காசு வாங்கிக் கொண்டு சொறிந்து விடுவதுதான். காசு கொடுத்தால் கூந்தலில் ஆரம்பித்து அல்குல் வரை அங்கம் அங்கமாக கவிதையால் அர்ச்சனை செய்துவிடுவார்கள். அப்படி செய்வதில் செத்துப்போன வாலியும், சாகாமல் இன்னும் கலைச்சேவை புரிந்து கொண்டிருக்கும் வைரமுத்துவும் தனித்துவமானவர்கள். இன்றைய போர்னோகிராபி எழுத்தாளர்களுக்கு எல்லாம் இவர்கள் தான் வழிகாட்டி. நா.முத்துகுமார் கூட ஒரு பாடலில் “வாலிபோலத்தான் பாட்டெழுத எனக்குத் தெரியலையே” என்று புலம்பி இருப்பார். அப்படி மற்றவர்கள் பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு பல கவித்துவமான வரிகளை இந்தத் தமிழ்ச்சமூகத்திற்கு விட்டுச் சென்றவர் ‘வாலிபக்’ கவிஞர் வாலி அவர்கள். அந்த சாக வரம் பெற்ற சில பாடல் வரிகளை நீங்களே கொஞ்சம் பருங்கள்:

 “ அடி பூத்து நிக்கிற பாப்பா, உன்னை பொண்ணு கேட்டா தப்பா, ஒன்னை நெனச்சுப் படுத்திருந்தேன் கிழிஞ்சு போச்சு ஜிப்பா” , “உட்டாலக்கடி செவத்த தோலுதான் உத்துப் பார்த்தா உள்ள தெரியும் நாயுடு ஹாலுதான்”, “கதவச் சாத்து கதவச் சாத்து மாமா, நான் கன்னிகழிய வேணுமையா ஆமா, கன்னி நான் கழிஞ்சிதான் தாலிய நீ கட்ட வேணும்…..”, ”பதினெட்டு வயது இளமொட்டு மனது…..”, “எப்படி எப்படி சமஞ்சது எப்படி….” - இது போன்ற பல சமூக சீர்திருத்தக் கருத்துக்களை தமிழ் இளைஞர்களுக்காக விட்டுச் சென்றவர் வாலி அவர்கள். அவரது புகழை இன்று வரையிலும் பலர் பாடுவதற்கு அவரது மேற்கூறிய அமர கவிதைகள் தான் காரணம்.

 அடுத்து தமிழ்த்திரை உலகில் பிரசவ வலியுடன் கவிதகளை எழுதும் ஒரே கவிஞன் வைரமுத்து அவர்கள் தான். அவர் பெத்துப் போட்ட சில ஆபாசக் குழந்தைகளைப் பாருங்கள்.

 “ஏய்…..மசாலா…. அரைக்கிற மைனா, ஒம் மத்தாளம் என்ன விலை”. “கண்ணா என் சேலக்குள்ள கட்டெறும்பு புகுந்துடுச்சு…..எதுக்கு?”, “இடுப்பு அடிக்கடி துடிக்குது, லவுக்கு எதுக்கடி வெடிக்குது”, “மாங்கா மாங்கா ரெண்டு மாங்கா, மார்க்கெட்டு போகாத குண்டு மாங்கா”, “ சுட்ட பால் போல தேகம் தான்டி உனக்கு அதில் பாலாடை மட்டும் கொஞ்சம் விலக்கு” - இந்த ரெண்டு இலக்கிய கேடிகளின் பாடல்களை எடுத்துப் பார்த்தால் இவர்களை விட மட்டமான போர்னோகிராபி எழுத்தாளர்களே எங்கும் இல்லை என ஒத்துக் கொள்வீர்கள். இப்படி எல்லாம் பாட்டெழுதிய வைரமுத்து “பாடலாசிரியர்கள் தங்களுக்குத் தாங்களே சுய தணிக்கை செய்து கொள்ள வேண்டும்” என்று ஊருக்கு உபதேசம் சொன்னால் அவரை எந்தச் செருப்பால் அடிப்பது? “ரெண்டுல நீ ஒண்ணத் தொடு மாமா, இந்தப் பொண்ணுகிட்ட வெட்கப்படலாமா?” என்று பாட்டெழுதிய கங்கை அமரன் இன்று சிம்புவுக்கு புத்தி சொன்னால் அவரது முகத்தில் காறித் துப்பலாமா? கூடாதா?

 சினிமா துறையில் சமூக அக்கறையுடன் படம் எடுப்பவர்களையும், பாடல் எழுதுபவர்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால் இவர்களை தயாரிப்பாளர்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பது கிடையாது. அவர்களைப் பொருத்தவரை சினிமா என்பது ரசிகனை திரைஅரங்கத்திற்கு வரவழைத்து அவனது வக்கிரங்களுக்குத் தீனிபோட்டு அவனிடம் இருந்து பணம் வசூலிக்கும் ஒரு தொழில் அவ்வளவுதான். உங்களுக்குத் திறமையிருந்தால் நீங்கள் எழுதும் கதையில் அயிட்டம் சாங்குகள், சண்டைக்காட்சிகள், இரட்டை அர்த்த கமெடி வசனங்கள், பொறுக்கி நாயகர்களின் பஞ்சு டைலாக்குகள், இவைகளுக்கு மத்தியில் ஒரு மெசேஜ் சொல்லி உங்களை சமூக அக்கறை நிறைந்த இயக்குனர்களாக காட்டிக் கொள்ளலாம். இதுதான் இன்று தமிழ்த் திரை உலகம் உள்ள நிலை. இயக்குனர்களுக்கே இந்த நிலை என்றால் பாடல் ஆசிரியனின் நிலை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

 சினிமா என்பது சமுக அவலங்களைப் படம் பிடித்துக் காட்டும் ஒரு சிறந்த சாதனம் என்ற நிலை மாறி, சினிமா என்பது சமூக அவலங்களை ஏற்படுத்தும் பேரழிவு ஆயுதமாக உருமாறி இருக்கின்றது. ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு என அனைத்து வக்கிரம் பிடித்த கழிசடைகளின் பின்னால் தமிழக இளைஞர்கள் அணிதிரண்டு தங்களுக்குள் அடித்துக் கொண்டும் உதைத்துக் கொண்டும் திரிகின்றார்கள். தாங்கள் விரும்பும் நாயகர்களின் படம் வெற்றிபெற காவடி தூக்குவது, அலகு குத்துவது, மண்சோறு திண்பது, கட்அவுட்டர்களுக்குப் பால் அபிசேகம், பீர் அபிசேகம் செய்வது என தமிழக இளைஞர்களை எல்லாம் மட்டமான அரசியலற்ற பேர்வழிகளாக மாற்றி வைத்துள்ளனர்.

 இந்தக் கழிசடைகள் திரையில் எடுத்து வைக்கும் வாந்திகளைத் தின்றுதான் பல இளைஞர்கள் தங்களுடைய பொழுதைக் கழிக்கின்றார்கள். இப்படி தங்களின் அடிமைகளாய் உள்ள அந்த அரசியல் அற்ற அற்ப பிறவிகளைத் தொடர்ந்து தன்னுடைய ரசிகனாகவே இருத்தி வைத்திருக்க இந்தக் கழிசடைகள் கண்டுபிடித்த உத்திதான் அயிட்டம் சாங். எதாவது ஒரு மார்கெட் போன மானங்கெட்ட நாயகியை அழைத்துவந்து அவளை ஜட்டி, பிராவுடன் திரையில் ஆடவிட்டு அவளை நாயகன் வெறிபிடித்த சொறிநாயாக பிராண்டுவான். இதைத் திரையில் வாய் பிளந்து பார்க்கும் ரசிகன் ‘டே நம்ம தலய அடிச்சிக்க எவன்டா இருக்கான்’ என்று சவால் விடுவான். அப்புறம் என்ன படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டுதான். இப்படிதான் பல போர்னோகிராபி நடிகர்கள் தங்களின் வாழ்க்கையை சினிமாவில் ஓட்டிக்கொண்டு இருக்கின்றார்கள்.

 இந்த நாய்களுக்கு அயிட்டம் சாங் எழுதி கொடுத்துத் தன்னுடைய மானங்கெட்ட உயிரை வளர்ப்பவன்தான் சினிமா பாடலாசிரியன். சிம்பு போன்ற சில்லரைகளோ ‘ஆபாசமாக பாட்டெழுத எதற்கு அடுத்தவனுக்கு லட்சக்கணக்கில் பணம் தர வேண்டும், தானே ஒரு தரங்கெட்ட தறுதலையாக இருக்கும்போது’ என்று நினைத்து பேனாவை எடுத்து கடகட வென்று எழுதி விடுகின்றார்கள். ஏன்டா இப்படி எழுதின என்று கேட்டால் அப்படித்தான் எழுதுவேன், பாடுவேன் அது என்னுடைய தனிப்பட்ட விருப்பம் என்று சொல்கின்றான் இந்தப் புறம்போக்கு.

 இதுபோன்ற பாலியல் வக்கிரம் பிடித்த பொறுக்கிகள் ஒருநாளும் தங்களுடைய தவறுகளுக்காக வருந்த மாட்டார்கள். பல கோடிகளை சம்பளமாகப் பெறும் இந்த நாய்கள் சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுத்தது எவ்வளவு என்று நமக்குத் தெரியும். என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழ் அல்லவா? என்று பாடிய ஒரு கிழட்டு நாயகன் வெறும் 10 லட்சம் மட்டுமே கொடுத்தது உங்களுக்குத் தெரியுமா? இவனுக்காகவா நீங்கள் மொட்டை போட்டீர்கள், இவனுக்காவா நீங்கள் அக்கினி சட்டி தூக்கினீர்கள். இந்த கருமம் பிடித்தவனையா அரசியலுக்கு வர வேண்டும் என்று அடம்பிடிக்கின்றீர்கள். அட, பாவப்பட்ட ரசிகர்களே!

 சென்னை மக்களுக்காக தமிழகமே நிதி கொடுத்து உதவியபோது பல பாலியல் வக்கிரம் பிடித்த படங்களில் நடித்து பல நாயகிகளுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து உலக நாயகன் பட்டம் வாங்கிய கருத்துச் சொல்லி, கொடுத்தது வெறும் 15 லட்சம்தான் என்று உங்களுக்குத் தெரியுமா?

 இவர்கள் எல்லாம் எதற்காக படம் நடிக்க வருகின்றார்கள், எதற்காக இயக்குநர் ஆக வருகின்றார்கள், எதற்காக பாடல் எழுத வருகின்றார்கள், எதற்காக படம் தயாரிக்க வருகின்றார்கள். உங்களது சமூக சிந்தனையை வளர்க்கவா?,உங்களது அறியாமையைப் போக்கி உங்களைப் பகுத்தறிவாதிகளாக மாற்றவா?,சமூக அவலங்களைச் சுட்டிக்காட்டி உங்களை அரசியல்மயப்படுத்தவா? எதற்காக இவர்கள் வருகின்றார்கள். நீங்கள் என்றாவது அவர்களைப் பார்த்து உங்களது கொள்கை என்ன என்று கேட்டிருக்கின்றீர்களா?, கேட்டிருந்தால் வாலி, வைரமுத்து, சிம்பு, ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ், எஸ்.ஜே. சூர்யா போன்ற மாமா பயல்கள் எல்லாம் சினிமாவுக்குள் வந்திருப்பார்களா?

 இந்தச் சினிமா கழிசடைகளைத் தங்களுடைய வழிகாட்டியாக ஏற்றுள்ள என் அன்பு தமிழ் மக்களே, இனியாவது உங்களை திருத்திக் கொள்ளுங்கள். இல்லை எங்களுக்கு எல்லாமே எங்க சூப்பர் ஸ்டார்தான், உலக நாயகன் தான், லிட்டில் சூப்பர் ஸ்டார்தான், இளைய தளபதிதான், சியான் தான், புரட்சித்திலகம் தான் என்று சொல்லிக் கொண்டிருந்தீர்கள் எனில் நாளை உங்களது அக்காவோ, தங்கையோ ரோட்டில் நடந்துபோகும் போது “என்னா புண்டைக்கு லவ் பண்றோம்” என்று சிம்புவின் தம்பிகள் பாடுவார்கள் அதையும் நீங்கள் சூடு சுரணையே இல்லாமல் கடந்துபோகும் நிலை வரும். ஜாக்கிரதை!.

- செ.கார்கி

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

+2 #1 வே. பாண்டி 2015-12-23 12:51
50 ஆண்டுகளுக்கு முன் எம்ஜியார் என்ற கிழவன் செய்தவற்றை இன்று ரஜினி என்ற இன்னொரு கிழவன் செய்கிறான். ஒவ்வொரு காலத்திலும் திரைப்பட நாயகர்களுக்கு என்று ரசிகர்கள் கிளம்பத்தான் செய்கிறார்கள். 60 களில் நான் வாலிபனாக இருந்து தொப்பிக்காரன் மீது அபரிமிதமான அபிமானம் கொண்டு ஒவ்வொரு படத்தையும் பல தடவை பார்த்து திரிந்து போது அப்போதைய பெரியவர்கள் சொன்னதை நான் காது கொடுத்துக் கேட்டதில்லை. அதை இப்போது நினைத்து மிகவும் வெட்கப் படுகிறேன். அதுபோல் இப்போதைய ரசிகர்கள் அவர்கள் மூத்த குடிமக்களாக மாறும் போது இதை நினைத்து வெட்கப்படுவார்க ள். எல்லாம் வயசுக் கோளாறு. அடுத்து வெள்ள நிவாரணத் தொகை குறித்தது. ஒருவர் எவ்வளவு தொகை கொடுக்க வேண்டும் என்பது அவரது சொந்த விருப்பம். அதில் நாம் எப்படி தலையிட முடியும்? சரி உங்கள் கருத்துப்படியே பார்த்தாலும் ஒவ்வொரு நடிகரும் எவ்வளவு கொடுத்தால் நீங்கள் சமாதனம் அடைவீர்கள்? கோடிக்கணக்கில் ஊழல் மூலம் பணம் ஈட்டும் நம் மக்கள் பிரதிநிதிகள் ஒரு மாத ஊதியம் தான் கொடுக்கிறார்கள் . ஒவ்வொரு தேர்தலுக்கும் கோடிக்கணக்கில் செலவு செய்யும் அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் ஒரு லட்சம் கூடக் கொடுக்கவில்லை.. நடிகர்கள் இவ்வளவாவது கொடுக்கிறார்களே என்று நாம் சமாதானம் அடைய வேண்டியதுதான்..
Report to administrator
+1 #2 vel 2015-12-29 19:21
அருமையான பதிவு.
Report to administrator
-1 #3 Surya 2015-12-29 23:56
Wonderful article Mr. Karki. I don't have the words to wish you. :)
Report to administrator
+2 #4 HARIKRISHNAN 2016-01-02 13:41
பாண்டியின் கருத்து போற்றத்தக்கது. அதனை வரவேற்கிறேன்.
Report to administrator
0 #5 SURESH BABU 2017-06-26 10:55
nanum ungal karutthai varaverkiren
Report to administrator

Add comment


Security code
Refresh