தகவல் தொழில் நுட்ப உலகில் நாம் வாழ்கிறோம். தொலைக்காட்சி ஊடகங்கள், இணைய ஊடகங்கள் என்று நாளும் பல்கி பெருகி வருகின்றன. குக்கிராமங்களுக்கு கூட இணைய வசதி இன்று உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் எல்லா அரசியல் கட்சிகளும் தனித்தனியாக தொலைக்காட்சி சேனல்களை நடத்துகின்றன, பிரச்சாரம் செய்கின்றன. மக்கள்திரள் போராட்டங்களை, மக்கள் இயக்கங்களைப் பற்றிய உண்மையான செய்திகளை மறைக்கின்றன. ஆளும் கட்சிகள், அதிகார மையங்களின் ஊது குழல்களாக இவைகள் பெரும்பாலும் இருக்கின்றன.

கம்யுனிஸ்டு கட்சிகள்-குழுக்கள்( CPI, CPM, CPI(ML) & அதன் பல பிரிவுகள், தமிழ்த் தேசிய அமைப்புகள், பெண்ணிய இயக்கங்கள், தலித் அமைப்புகள், இஸ்லாமிய-சிறுபான்மை அமைப்புகள், சூழலியல் இயக்கங்கள், மக்கள்திரள் தன்னெழுச்சி இயக்கங்கள் போன்ற மக்கள் இயக்கங்களுக்கு போதுமான பரவல், பிரச்சாரம் செய்ய முடிவதில்லை. தொலைக்காட்சிகளில் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.

இன்றைய இணைய உலகில் ஒவ்வொரு இயக்கமும், ஒவ்வொரு தனிமனிதரும் தங்களுக்கான இணைய தொலைக்காட்சி சேனல்களை தொடங்க முடியும். முதலாளிய உலகத்தின் தவிர்க்க வியலாத வளர்ச்சிப் போக்கு இது. அந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்து எப்படி என்பதை அனைவரும் புரிந்து கொள்வது அவசியம். அதற்கான முன்னெடுப்பாக இந்த பயிற்சிப் பட்டறை. செல்பேசிகள், காமிராக்களை எப்படி தொழில்நுட்பரீதியாக பயன்படுத்துவது பற்றிய பயிற்சி, ஒளி-ஒலி , தொகுப்பு பற்றிய ஆரம்ப வகுப்பில் சொல்லித் தரப்படும்..

ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்!

நமக்கான, மக்களுக்கான இணைய தொலைக்காட்சி சேனல்களை உருவாக்குவோம்!

நாள்:10-09-2018 ( ஞாயிற்று கிழமை)


நேரம்;காலை 10 மணி முதல் மதியம் 1.30 வரை


இடம்: டியுசன் சென்டர் பள்ளி
சித்த மருத்தவர் ஜி.ஜெ.பார்த்தசாரதி ,
புதிய எண்:9, பழைய எண்:50, அன்பில்தர்மலிங்கம் தெரு,
நேரு நகர், வேளச்சேரி செக்போஸ்ட், சென்னை-32

ஒருங்கிணைப்பு :

கி.நடராசன், எழுத்தாளர் (Unwritten history of Tamilnadu இணைய ஊடகம்)

பயிற்சியாளர்கள்

ஆனந்த், பொது செயலாளர், தூர்தர்சன் காமிரா மேன்கள் சங்கம்,

ஊடகவியலாளர் தயாளன், ரானே சினிமோட்டாகிராபர்

அனைவரும் வாரிர்.

- Unwritten history of Tamilnadu இணைய ஊடகம்

தொடர்புக்கு: கி.நடராசன், 9840855078