இந்திய அரசை

செனிவாவில் நடைபெறும்

ஐ.நா.மனித உரிமை ஆணையக் கூட்டத்தில்
அமெரிக்கா கொண்டுவரும் ஏமாற்றுத் தீர்மானத்தை மறுத்து,
தமிழர்களின் கோரிக்கையை வலியுறுத்த
அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்

தமிழர் எழுச்சி இயக்கமும், தமிழகப் பெண்கள் செயற்களமும் இணைந்து 09-03-2013 காலை 11.15 மணிக்குசென்னை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் போராட்டத்தை நடத்தியது.

இப்போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்:
1) தமிழின அழிப்புச் செய்த இலங்கை அரசுடனான அனைத்து உறவுகளையும் உடனடியாக நிறுத்திடு!
2) தமிழர் பகுதிகளை சிங்களமமாக்குவதை நிறுத்துவதோடு... அங்கு குவிக்கப்பட்டிருக்கும் சிங்களப் படையை உடனே வெளியேற்று!
3) போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை செய்யப்பட்ட இலங்கையில் சுதந்திரமா பன்னாட்டு விசாரணை நடத்திடு!
4) உலகம் முழுவதும் வாழ்கின்ற ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி தனி ஈழம் பெற்றிட நடவடிக்கை எடு!
அஞ்சல் அட்டை:
போராட்டத்தில் 20,000க்கும் மேற்பட்ட அஞ்சல் அட்டையை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
மாணவர்கள், பெண்கள், சிறுவர்கள் அனைவரும் வரிசையாக நின்று அஞ்சல் அட்டையை வழங்கினர்.
இதன் தொடர்ச்சியாக மேலும் 10 நாட்களுக்கு இப்பரப்புரைப் பணியை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
போராட்டச் செய்தி:
இப்போராட்டத்திற்கு தமிழர் எழுச்சி இயக்கத்தின் பொதுச் செயலாளர் ப.வேலுமணிதலைமை ஏற்று நடத்தினார்.அவர் கூறியதாவது: இந்திய அரசு மேற்கண்ட கோரிக்கையை ஐ.நா.வில் வலியுறுத்தும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை கிடையாது.இந்திய அரசின் நிலைபாட்டை பொது மக்களும் உணர வேண்டும் என்ற அடிப்படையில் யுத்தியாகத்தான் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள இனவெறி இலங்கை நட்பு நாடு என்று இந்திய அரசு அறிவிப்பு செய்கிறது என்றால்,தமிழர்கள் இந்தியாவின் பகையாளியா? என்றும் வினா எழுப்பினார்.

தமிழர்களின் உணர்வை இந்தியா புறக்கணித்தால்... தாய்த் தமிழகத்தில் உள்ள தமிழர்கள்
இந்திய உறவுகளை புறக்கணிக்க வேண்டிய நிலை உருவாகும் என்றும் கூறினார்.மேலும் போராட்டத்தில் துணைப் பொதுச் செயலாளர் எழிலன், மாவட்ட செயலர் குமரவேல்,
தமிழகப் பெண்கள் செயற்களத்தின் ஒருங்கிணைப்பாளர் இசைமொழி, கல்லூரி மாணவர்கள் மற்றும் திருவள்ளுவர் தமிழ்வழிப் பள்ளி மாணவர்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புக்கு:
9710854760, 9884187979