LTTEயாருமறியாத ஊரில் ஒருநாள்
தனித்துக்கிடந்தோம்
நிலவு மட்டும் நெஞ்சு தொட்டுப் போக
நீ மட்டும் என்னை
விட்டுத் தூரத்தில் நின்றாய்
காலம் என்னையும் உன்னையும்
வெடியதிர்வின் இசைகளைக் கோர்த்து
சங்கீதமாக்கியிருந்ததை யாருமறியார்.
இருள் பொழுதுகள் தான்
எங்களின்
உல்லாசப் பயணம் என்பதையும்
யாருமறியார்
காலத்துக் கவிவரியில்
எங்களின் வரிகள்
கிறுக்கல் சித்திரம் போல்
தேடிப் பார்ப்பவர்களுக்கு மட்டும்தான்
எங்களைத் தெரியும்.
உங்களுக்கு எப்படி?
பற்றைக்குள் மறைந்து கிடந்து
பாதியுயிர் போகும்
நாங்கள் செத்துக்கொண்டே
பிறந்துகொண்டிருக்கிறோம் இன்னும்
பிறக்கும் போதே சாகடிக்கப்படுகிறோம்
இருந்தும்
ஈழத்துக்காகப் போராடுகிறோம்.
எங்களின் மறைப்புக்களால் புதிய
தமிழ் உலகத்தைப் பார்க்கிறோம்.

ஆல்பர்ட் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It