நூலின் முன்னுரையிலிருந்து...

அடுத்த பக்கம் திறந்தால் முன் பக்கம் மறைவதும், முன் பக்கம் வந்தால் பின் பக்கம் மறைவதும் இப்படி மாறி மாறி தாள் நடத்தும் ஒருவித சித்து விளையாட்டை ஒத்ததே கவிதைக்கான மாயத்தனமாக இருக்கிறது. இயற்கைக்கு பதிலாக மாற்று இயற்கையைப் படைக்கிறது.

கவிதையின் இயக்கத்தை இருப்பிடத்தைத் தொட முயலும் போதெல்லாம் தாய்க் கவிதை தன் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே நகர்வது சுவாரஸ்யமான ஒரு புதிர். இவ்வாறான ஒரு சுழலில் தொடர் அவதானிப்புகள் ஏதுமின்றி ஒரு தொகுதியை நண்பன் வெளியிட தீர்மானித்திருப்பது ஒரு விதமான தைரியமே. தொடர் கவிதை வாசகனான எனக்கு இந்த விதமான தைரியம் சவலையாகப்படுகிறது.

அவை நண்பனின் Feeling area வை விட்டு வராமல் நிற்கின்றன. கவிதையில் நின்று கவிதைக்கு மாறாக தொனியில் நிறையப் பேசுகின்றன. சிறுவிதமான உணர்வைக் கூட இவரது கவிதை வடிவம் நெடியதாக்கிப் பேசுகின்றன. பல கவிதைகளுக்கு Editing என்பது அவசியமாக இருந்து கொண்டே இருக்கிறது.

யாருக்கோ பதிலுரைப்பதைப் போலவும், உரை நிகழ்த்துவது போலவும், மாறி மாறி வரும் வடிவங்கள் அசதியையும், சோர்வையும் உண்டாக்குகின்றன. அப்பாவின் அறைக்குள் / நான் நுழைந்ததில்லை என்று தொடங்கும்முகமூடிகவிதை இவரது areaவை வேறு தளத்திற்கு நகர்த்தும் வடிவமாகப்படுகிறது. இதில் இயங்கும் புனைவு, உயிரிழப்பு, Natural Emotion இயற்கை அழகியல் என்று விரிந்து கவிதைக்கு ஒரு Op பை கொடுக்கிறது.

புள்ளிமான்கள், மிருகம் ,பிராணிகள் என்று சுழன்று கவிதைகளுக்கு பொருந்தும் நோக்கோடன் அம்மா / தன் ஆத்மாவை என் மீது போர்த்திவிட்டு / உடலை மட்டும் எடுத்துப் போவாள் / முகமூடியைக் கழற்றி வைத்த அப்பாவின் அறைக்கு / என்றபடி இறுதி வடிவம் பெறுகிறது.

இந்தக் கவிதையை வைத்து நண்பன் வேறு பிரதேசங்களின் வழியாக கவிதையை கவிதையில் அடைவார். என்று நம்பிக்கை பிறக்கிறது. அப்படி வருவதில் கவிதைக்கும் கவிஞனுக்குமான போராட்டம் வழியாக உயர்ப்படையும்.

விரியக் காத்திருக்கும் உள்வெளி

நண்பன்

வெளியீடு: தமிழ் அலை , உளுந்தூர்பேட்டை

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

விலை : ரூ.60