வாரி அணைக்கிறது சென்னை
நல்ல சம்பளக்காரனுக்கு
அப்பார்ட்மண்டில் வீடு
குறைந்த சம்பளக்காரனுக்கு
ஒண்டுக் குடித்தன வீடு
வேலை தேடுபவனுக்குக் கூட
மேன்சனில் குடித்தனம்
சிக்னல் அருகே வசிக்கிறான்
சென்னைத் தமிழன் மட்டும்
- நெப்போலியன்(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)