ஒரு கவிதை எழுதுவதற்கு
குறைந்தபட்சம் ஒரு சிகரட் அவசியப்படும் என்றால்
இந்த பிரபஞ்ச கவிதையின் எண்ணிகையில் ஒன்று
குறைவாகவே இருக்கட்டும் !

ஒருமணி நேரம் நண்பனிடம் பேச
பாருக்கு தான் போகவேண்டுமென்றால்
அன்று மௌனவிரத நாளாகவே
இருந்துவிட்டுப் போகட்டும் !

என் பிறந்த நாளை நினைவுபடுத்த
கண்டிப்பாக ஒரு புது சட்டை வேண்டுமென்றால்
அந்த வருடத்திற்கான வயது அதிகரிக்காமலே போகட்டும் !

இரவு உறக்கம் கொண்டுவர
தாயின் அரவணைப்போ
காதலியின் முத்தமோ தேவைப்படுமெனில்
அது மற்றும் ஒரு உரக்கமற்ற இரவாகவே இருக்கட்டும் !

ஒரு புன்னகைக்காக ஒரு வழியலும்
கொஞ்சம் அன்புக்காக அதிக கீழ்படிதலும்
ஒரு சிறு தலையசைப்புகாய் நீண்ட காத்திருப்பும்
அவசியம் வேண்டுமென்றால்...
வேண்டவே வேண்டாம்...
யாரொருத்தியின் அன்பும்!
எவனொருவனின் ஆதரவும்..!